தமிழ் தேசியம் என்பது காலா காலமா எமது தமிழ் சமூகத்தில் பின்னிப்பிணைந்து

272

 

தமிழ் தேசியம் என்பது காலா காலமா எமது தமிழ் சமூகத்தில் பின்னிப்பிணைந்து வந்திருக்கிறது அனால் தமிழ் தேசியத்தை பயன்படுத்துகிற நபர்கள் ஓர் இருவர் தவிர்த்து கால காலமாக மாறுபட்டுக்கொண்டே வருகின்றனர்
tna
ஒன்று அவர்கள் முன்னாள் தமிழ் தேசியவாதிகளாக (தற்போது தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்ததவர்கர்கள்) அல்லது இந்நாள் தமிழ் தேசிய வாதிகளாக (முன்னர் தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்தாதவர்கள் ) இருக்கின்றனர்.அவர்கள் யாரென்று   பட்டியலிட்டால்வாசகர்களை ஏதும் தெரியாதவர்கள் என்று நான் இழிவுபடுத்துதல் போலாகிவிடும் ஏனெனில் உங்களுக்கு யார் யாரென்று நன்றாக தெரியும். மேதின தேசிய கோடி விவகாரம் ஆரோக்கிய மான சூடான விவாதத்துக்கான களம் என்பது ஆமொதிக்கவேண்டியவிடயமாகத்தான் (விவாதம்) தென்படுகிறது. இங்கு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் தமிழ் ஊடகங்களுக்கான எமது தலைவர்களின் அறிக்கைகளின்படி இவ்விடையைத்தை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதக்கும் வலுவான தைரியம் தமிழ் சமூகத்திலும் ,அரசியல் செயற்பாட்டாளர்களிலும் ஏற்ப்பட்டிருப்பதுதான். அரசியல் வாதிகளின் விமர்சனங்கள் என்பது அவர்களில் ஆளுமையும் கடந்த கால செயற்ப்பாடுகளுமே அனேகமாக தீர்மானிக்கின்றன .தேசிய கோடியை இரா .சம்பந்தன் தூக்கியதால் (அல்லது மாவை சேனாதிராஜா தூக்கியிருந்தாலோ) விமர்சனம் என்பது வெறும் ஓரிருநாள் பேசப்படும் செய்தியாக ஆகியிருந்தது . ஒரு வேலை தேசியக்கொடியை சுரேஷ் பிரேமச்சந்திரனோ ,செல்வம் அடைக்கலநாதனோ தூக்கியிருந்தால் இதன் தாக்கம் ஊடக அளவில் எப்படியிருந்திருக்குமென உங்களாலேயே ஊகிக்கமுடியும் .கூட்டமைப்பின் தலைவரின் செயல் பல்வகைப்பட்டவர்களையும் வல்வேறு விதமாக தாக்கியிருக்கிறது என்பது ஜதார்த்தம் .பேராசிரியர் திஸ்ஸ விதாரண சொன்னது போல் இது ஒரு எழுச்சிகரமான செயலாகவும் மாற்றமாகவும் ஒருவகையில் வைத்துக்கொள்ளலாம் அதேபோல் புலம்பெயர் சமூகத்தில் ஒரு சாராரின் செயற்பாடுகளையும், தமிழ் நாட்டின் ஒரு சிலரின் வாய் வீச்சுக்களையும் ஒரு வகையில் அடக்குவதாயும் அல்லது அடங்கி இருங்கள் என்று கூறுவதையும் எடுத்துக்கொள்ளலாம் . 
 
ஐநா தீர்மானம் கூறிய விடையங்களுக்கான நிறைவேற்றுக்காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்னவோ மாற்றம் என்பது நீ சொல்வதென்ன நாங்கள் செய்வதென்ன என்பதை போலவே இருக்கிறது. அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுக்குட்பட்ட பொன்சேகாவின் விடுதலை என்பது மட்டுமே இன்றளவில் இராஜ தந்திரமாக இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது பல குளறுபடிகளுக்குட்பட்டு. இதில் தமிழர்களுக்கான நன்மை என்பது என்ன என்றுபோரை நடத்திய தலைவன் தான் என்ற தொனியில் போன்செகாவில் முதல் நாள் அறிக்கை, பேட்டியிலேயே வந்துவிட்டது.பலரிடம் இவரால் ஆட்சி மாறலாம் என்கிற நிறைவேறும் அல்லது நிறைவேற கனவு இருக்கலாம். இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி ,தமிழ் கூட்டமைப்பு கூட்டின் மூலம் தமிழர்க்கும் நன்மை விளையுமேனவும் எதிர்பார்க்கலாம் . இதற்க்கான கால எல்லை என்பது நிர்ணயம் செய்ய முடியாததாகவே இன்றளவில் இருக்கிறது . அரச கவிட்புக்கான முயற்ச்சி என்பது வீழ்த்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சியை நிமிர்த்துவதர்க்காகவும் , ஜேவிபி ,பொன்சேகா ஆகியோரின் பதில் பலிவாங்கலாகவும் அத்தோடு அதிகாரம் , விலைவாசி என்பன காரணக்களாக இருக்கிறது தென்இலங்கை அரசியல் சூழலில், இதில் தமிழர் தரப்போ முஸ்லீம்கள் தரப்போ பல எதிர்பார்ப்புகளின் நிமிர்த்தம் ஆட்சி கவிட்ப்பு முயற்சிக்கு உதவி புரிபவர்களாக இருக்கலாம். அவற்றை வருங்கால அரசியல் சூழ்நிலைகளை வைத்து கவனிக்கலாம்..
இனி மாகாண சபை தேர்தல் வடக்குக்கு மாகாண சபைத்தேர்தல் நடக்குமென்ற எதிர்பார்ப்பு கூடவே பலரின் கனவுகள் முளைவிட்டிருந்த சூழ்நிலையில். கிழக்கு மாகாண சபை தேர்தல் நாடி பிடிப்பை இலங்கை அரசு சோதிக்க தொடங்கியிருக்கிறது இதன் முதற் படியான நோக்கமென்பது முஸ்லீம் சமூகத்தை தேர்தலுக்கு முன் தன் பக்கம் இழுக்கவேண்டும் என்பதுதான் அடுத்த கட்டம்தான் மாகாண சபைக்கலைப்பும் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளும் என்பது அரசை பொறுத்தவரை என்பது சில முஸ்லீம் கட்சிகளின்அண்மைய ஊடக செவ்விகள் மூலமும் , முலீம் காங்கிரஸ் அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்த நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான பரிந்துரை அறிக்கையையும் வைத்து அவாதானிக்கலாம். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் என்பது அரசு , முஸ்லீம் தரப்புக்கு இடையில் விரிசல் ஏற்ப்படக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்திருந்த போதும் ,ஹிஸ்புல்லாவுக்கு வந்த விமர்சனம் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை இரண்டாக பிளவு போன்ற நிகழ்வுகளோடு அரச பக்கம் பெரும்பாலான முஸ்லீம் தலைவர்கள் இருப்பதன் நிமிர்த்தமும் அப்பிரச்சனை ஓரளவுக்கு அமர்ந்திருக்கிறது .அத்தோடு கிழக்குமாகாண தேர்தல் விவகாரமும் இப்பிரச்சனையில் ஓரளவு அமைதி ஏற்ப்பட காரணமாக அமைந்தது .
 
கிழக்கு முதல்வர் பதவி முஸ்லீம் தரப்புக்குள்ளும் மற்றும் தமிழ், முஸ்லீம் தரப்புக்குள்ளும் போட்டியாகவே இருக்கும் .தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் சேர்த்த பின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் போட்டி இடவேண்டியது மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பது மட்டுமில்லாது சூழ்நிலைகளே அரசியலையும் கொள்கைகளையும் தீர்மானிக்க கூடியவை என்பதையும் உணர்த்துவதாய் உள்ளது .இதற்க்கான முதல் படி என்பது கூட்டமைப்பின் கிழக்கு மாகாண தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் மும்முரமும் . முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இந்நாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா .துரைரெட்ணத்தின் கூட்டமைப்பின் (சுரேஷ் ) இணைவுக்கான அறிக்கையும் காட்டுகின்றன . ஆரம்பத்தில் குறிப்பிடதுபோல் தமிழ் தேசியம் பேசுபவர்கள் இந்நாள் அல்லது முன்னாள் வாதிகளாக இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க .(புதுசா இணைபவர்கல்தான் தீவிரமா தேசியம் பேசுகின்றனர் அதன் மாயம் தான் புரியவில்லை இதில் கூட்டமைப்பால் ஓர் இரு தடவை பாராளுமன்றம் வந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம் ) எது எப்படி இருப்பினும் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் வரும் சில காலத்தில் உறுதியாகிவிடும் .இதில் தமிழ் , முஸ்லீம் என இனவாதம் கடந்த தெர்தலைபோல் தலை தூக்கிவிடக்கூடாது என்பது இன ஒற்றுமை விரும்பிகளின் கருத்து . அது மாத்திரமல்ல கிழக்கு மாகாண சபை என்பது இன ஒற்றுமையை முக்கியமாக தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்தியிருக்கிறது என்பது கிழக்கு மாகாண சபையின் கடந்த கால சாதைனையாக கூட கருதலாம் .அது கட்டி காப்பற்றப்படுமா..?! காலம் நிச்சம் ஒருத்தரை கிழக்கு முதல்வராக்கும் என்பதில் ஐயமில்லை அதற்கிடையில் விளையாடப்படும் சதுரங்கம் நல்ல தலைவரை தரவேண்டுமென்பதே சாதாரண கிழக்கு குடிமகனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .
 
இன்றைய எமது பலவீனமான சூழ்நிலையில் (தமிழ் மக்கள் ,இலங்கை ) தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தேர்வு வேண்டும் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் குரல்கொடுத்துவரும் சூழலில் புலம்பெயர் சூழலில் ஒரு சில அமைப்புக்களின் செயற்ப்பாடுகள் முக்கியமாக தமிழ் நட்டு அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் வந்குரோத்துக்களை நிரப்ப தம் கட்சி பதவி சார்ந்து எடுக்கும் தான்றோன்றித்தனமான தீர்மானங்களும் தமழீழ கோசங்களும் ஐநா தீர்மானம் கொண்டுவர காரணமாய் இருந்த தமிழ் நாட்டின் ஒர்ட்டுமொத்த ஆதரவையும் நன்றி உணர்வோடு பார்க்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் நடப்பதுவே மன வேதனை அளிக்கின்ற விடயமாக இருக்கின்றது .ஐநா காலக்கெடு வரையேனும் அமைதி காக்க ஈழக்கொச அமைப்புக்களும் தமிழகத்தில் அரசியல் வந்குரோத்துடைய அம்மைப்புக்களும் முன்வரவேண்டும் .அதிகாரமிக்கவர்களின் இராஜ தந்திர அழுத்தங்களே இன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவுமே ஒழிய வெற்றுக்கொசங்களல்ல…
SHARE