ஊடக அறிக்கை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் உத்தரவு
கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவிற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகங்கள் கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்தை பயன்படுத்தக் கூடாது என்ற வகையில் அண்மையில் ஊடக அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கும் தமக்கும் தொடர்பு கிடையாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் குறித்த அறிக்கை வெளியிடுவதற்கான பின்னணி எதுவென விளக்குமாறு பிரதமர், ஊடக அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.
அலரி மாளிகைக்கு வந்து தம்மை சந்திக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஊடக அமைச்சின் செயலாளரது அறிக்கை குறித்து சிரேஸ்ட அமைச்சர்கள் பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியையோ அதன் பெயரையோ இதுவரையில் தடை செய்யவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.