விக்கினேஸ்வரன், மாவைசேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

305

 

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட் ட அரசியல் தீர்வு திட்ட வரைபுக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப் பு மறுசீரமைப்பு முயற்சியில் வடமாகாண மக்களின்அரசியல் எதிர்பார்ப்புக்களும் இடம்பெறும் வகையில் வடமாகாண சபையினால் 19 பேர்கொண்ட குழு உருவாக்கப்பட்டு அரசியல் தீர்வு திட்ட வரைபு தயாரிக்கப்பட்டது.

hqdefault (1)

இந்நிலையில், இந்த வரைபுக்கு எதிராக தென்னிலங்கை இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் வடமாகாணசபையின் தீர்வு திட்ட வரைபுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலாம் எதிரியாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் 2ம் எதிரியாகவும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் 3ம்எதிரியாகவும் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் 4ம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ஊடாக தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வட மாகாண சபைமுயற்சிக்கும் என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கூறியுள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் 12ம் அல்லது 13ம், 17ம் திகதிகளில் திறந்த நீதிமன்றத்தில்இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

SHARE