பொருளாதார மத்திய மையம் வவுனியா தான்டிக்குளத்திலேயே அமைக்கப்படவேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த இடத்திலேயே இடம் தரவேண்டும் இல்லையேல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெரும்

282

 

பொருளாதார மத்திய மையம் வவுனியா தான்டிக்குளத்திலேயே அமைக்கப்படவேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த இடத்திலேயே இடம் தரவேண்டும் இல்லையேல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெரும்  மக்களுக்கான தேவயை அறிந்து முதலமைச்சரரும் அமைச்சர்களும் செயற்ப்பட வேண்டும்.

மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சினால் வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மையத்தினை தாண்டிக்குளம் விவசாய பண்ணையின் பயன்படுத்தப்படாத காணியில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து அமைதிப்போரணியொன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ் அமைதிப் பேரணியில் அபிவிருத்தியில் அரசியல் கலக்காதே,

வலியவரும் வாய்ப்பை நழுவ விடாதே,

மத்தியா – மாகாணமா இதுவல்ல எமது பிரச்சனை மாவட்டத்தின் அபிவிருத்தியே,

சந்தை வாய்ப்பில்லாமல் நாம் படும் துன்பம் தெரியுமா,

தரவில்லை என்று குறை கூறாமல் தந்ததை பயன்படுத்து,

வேண்டாம் வேண்டாம் பொய்யான அறிக்கைகள் வேண்டாம்

என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரான சி. சிவமோகன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச மற்றும் உறுப்பினாகள், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூர் விளை பொருள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள், வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் உட்பட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்களிடம் மகஜர் ஒன்றினையும் வழங்கியிருந்தனர்.

 

SHARE