மனித உரிமைப் பேரவையிடம் சரணடையும் மஹிந்த

277

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தற்போது மனித உரிமைப் பேரவையிடம் சரணடைந்துள்ளார்.

timthumb

தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து மனித உரிமைப் பேரவையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் மஹிந்த ராஜபக்ஸ எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த மீளவும் படையினரை கடமையில் அமர்த்துமாறு மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோரிடம் கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தமது தலைமையின் கீழ் தோல்வியடையச் செய்துள்ளமையினால் காவல்துறை பாதுகாப்பு போதுமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பில் 50 பேர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை மிகக் கடுமையாக கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸ விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE