அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் வருகை – சிறிலங்காவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை

264

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு நேற்று, சிறிலங்கா நிதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது, சிறிலங்காவின் சிறிலங்காவின் முதலீட்டுச் சந்தைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான, தொழில்நுட்ப அனுபவங்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவின், பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதாக அமெரிக்கா அளித்திருந்த உறுதிமொழிக்கு அமையவே, அந்த நாட்டின் திறைசேரி அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.

Ravi-US-Treasury-

SHARE