விரைவில் புதிய பாதுகாப்புச் சட்டம்! யாருக்கு ஆப்பு….

284

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக, எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் புதிய பாதுகாப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலத்திற்கான நடவடிக்கைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அதன் முதற்கட்ட வரைபை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக மேலும் குறிப்பிட்டார்.

தற்போதைய சட்டமூலத்திலுள்ள குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டு, தற்போதைய நிலைமைக்கு ஏற்றவகையில் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது பொருத்தமற்றதென சமூக ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்கு நிகராக ஒரு சட்டமூலத்தை தயாரித்த பின்னரே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கமுடியுமென அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.arme

SHARE