உடல் எடையை குறைக்க பலவழிகள் இருந்தாலும் நாம் எடுத்து கொள்ளும் உணவே உடல் எடையை கூட்டுவதிலும் குறைப்பதிலும் பிரதானமாக உள்ளது.
அந்த வகையில் எளிதாக கிடைக்ககூடிய சில உணவுப்பொருட்கள் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை எளிதில் குறைக்கலாம்.
பெர்ரீ பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெரி என பெர்ரீஸ் வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் காணப்படுவதால் இதனை தாரளமாக சாப்பிடலாம். மேலும் இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்காது.
சிட்ரஸ் அமிலம்
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, கிவி போன்ற பழங்களில் சிட்ரஸ் அமிலம் காணப்படுகிறது. இதன் உயர் அமிலத்தன்மையால் உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், எனவே நீண்ட நேரம் பசிக்காது.
அவகோடா
அவகோடா பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தக்காளி
தக்காளியில் விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிக அளவில் உள்ளன. இதனை உணவில் அதிகமாக சேர்ப்பதனால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
தர்பூசணி
குறைந்தளவு கலோரிகள் உள்ள தர்பூசணியில் தண்ணீர் சத்து அதிகளவில் உள்ளது. இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் கொழுப்பும் குறைந்து உடலுக்கு தேவையான விட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.