2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

276

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை - Cineulagam

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை.

அதற்குள் கிட்டத்தட்ட 75 படங்கள் வந்துவிட்டது, இதில் ஹிட் என்று பார்த்தால் வழக்கம் போல் கேள்விகுறி தான் முன் வருகிறது. இதில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, விஷால்,சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் வந்துள்ளது.

உதயநிதி நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளது. முதலில் எல்லா தரப்பினருக்கும் மிகப்பெரிய லாபம் கொடுத்த படங்கள் என்று பார்த்தால் ரஜினி முருகன், இறுதிச்சுற்று, பிச்சைக்காரன், தெறி ஆகிய படங்களே உள்ளது.

இதில் தெறி அதிக பட்ஜெட் என்பதால் லாபம் எப்படியிருக்கும் என்பது உங்களுக்கே தெரியும், மேலும், சமீபத்தில் வந்த 24இன்றுவரை நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, இந்த படமும் ஓரளவிற்கு நல்ல வசூல் தரும் என கூறுகின்றனர்.

மனிதன், விசாரணை, அரண்மனை-2, தோழா ஆகிய படங்கள் டீசண்ட் ஹிட் என்று சொல்லலாம். மிருதன், சேதுபதி, காதலும் கடந்து போகும், கதகளி, வெற்றிவேல் ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லை.

மற்றப்படி பெரிதும் எதிர்ப்பார்த்த கெத்து, தாரை தப்பட்டை, போக்கிரி ராஜா, பெங்களூர் நாட்கள், புகழ், டார்லிங்-2, ஜில் ஜங் ஜக் என பல படங்கள் தோல்வியடைந்துள்ளது.

SHARE