விடுதலைப் புலிகளை நான் முற்று முழுதாக எதிர்த்தவன் அல்ல. அவர்களின் சில வன்முறைகளை கண்டித்தவன்

317

 

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் 14-05- 2016 சனிக்கிழமை

அன்று யாழ் தலைமை செயலகத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஆற்றிய உரை.

அன்புடையீர்.

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன?

இம் முன்னணி உருவாக்கப்பட்டுவரும் இவ்வேளையில் பலவிதமான விமர்சனங்களும்ரூபவ் கண்டனங்களும் பாராட்டுக்களும் வந்து

150801152025_ananda_sangree_tulf_512x288_bbc_nocredit anandasangari-nomination Anandasangari-Sampanthan.ltte_1

குவிகின்றன.; இச்சந்தர்ப்பத்தில்; உண்மை நிலையை எமது கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொதுவாக

நாட்டுமக்களுக்கும் எடுத்துக்கூற வேண்டிய கடமை எனக்குண்டு. நம் இனத்துக்குப் பிடித்த சாபக்கேடா அல்லது என்னை பிடித்த

சாபக்கேடா தெரியவில்லை. நான் நிமிர்ந்தால் என் தலையில் ஏறி உட்காரவென்றே சிலர் பிறந்துள்ளனர்.

19 வயதில் ஆரம்பித்த எனது அரசியல் சமூக தொண்டுக்கான பயணம் எனது 26 வயதில் கொழும்பு மாநகரசபை தேர்தலில்

போட்டியிட்டதுடன் தீவிரமடைந்தது. இன்று 57 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் பிரதிநிதித்துவம் பெற்ற அரசியற்

கட்சிகள் முறையே லங்கா சமசமாஜ கட்சிரூபவ்அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிரூபவ் தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும்

இணைந்து உருவாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே. எதுவித வருமானமும் அற்ற

காலத்திலும் சொற்ப வருவாய் வந்த காலத்திலும் எவர் பணியாயினும் என் பணியாக ஏற்றுரூபவ் என் தந்தை காட்டிய வழியில்

செயற்பட்டவன நான்;. பிறந்த நாளில் இருந்து அண்மைகாலம் வரை சொந்த வீட்டில் வாழும் பாக்கியம் அற்றவன். பல

சிரமங்களுக்கு மத்தியில் அண்மையில் வாங்கிய வீட்டை என்ன செய்ய உத்தேசித்துள்ளேன் என்பதை மக்களுக்கு விரைவில்

அறிவிப்பேன். ஒரு புத்தகமேனும் விலைகொடுத்து வாங்கமுடியாத நிலையில் நூல் நிலையத்தை பயன்படுத்தியே

சட்டத்தரணியானேன். பல கஸ்டங்களுக்கு மத்தியில் சட்டம் பயின்ற நான்ரூபவ் என்று பாராளுமன்ற உறுப்பினராக

தெரிவுசெய்யப்பட்டேனோ அன்றிலிருந்து சட்டம் பேசுவதையும்ரூபவ் நொத்தாரிஸ் வேலையையும் கைவிட்டவன். ஒரு டசின்

பிள்ளைகளில் ஒருவனான நான் ஆடம்பரமாக வாழ்ந்திட முடியாத நிலையில் வாழ்க்கையில் முன்னேறியவன்.

பெரியார்கள் சா.வே.ஜே.செல்வநாயகம்ரூபவ் ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்ற பெரும் தலைவர்கள் இருவரிது

நன்மதிப்பையும் பாசத்தையும் பெற்றது மட்டுமன்றி இருவரையும் முதன்முதலில் ஒன்றாக 1947ம் ஆண்டு சந்தித்த பெருமை

எனக்குண்டு. இருவரினதும் இறுதி காலத்திலும் பாசமிக்க தொண்டனாக செயற்பட்டவன் மட்டுமல்ல இன்றுவரை செயற்படுபவன்.

நமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் முதல் மந்திரியாக தெரிவான டி.எஸ்.சேனநாயக்கா அவர்களை நேரில்

கண்டிருக்கின்றேன். பேச்சையும் கேட்டுள்ளேன். அவர் தவிர ஜே.ஆர். ஜெயவர்த்தனாரூபவ் டட்லி சேனநாயக்கா தொடக்கம்

கே.டபள்யூ.தேவநாயகம்ரூபவ் ஏ.சி.எஸ்.ஹமீட் உட்பட ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள்ரூபவ் கௌரவ.எஸ்.தொண்டமான்ரூபவ் ஏ.அசீஸ்ரூபவ்

பிரதமராக இருந்த சுதந்திரக்கட்சியின் தலைவர் எஸ்.டபள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்களை நேரில்

பார்த்திருக்கின்றேன்ரூபவ் சந்தித்தும் உள்ளேன். அவர் தவிர திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா உட்பட சகல

சுதந்திரக் கட்சி தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளேன். ஜீ.ஜீ. பொன்னம்பலம் தவிர ஏனைய சகல

தமிழரசு கட்சிரூபவ் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ கட்சி தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் உடன் இருந்து பலருடன் பேசி

பழகியவன் நான். இடதுசாரி கட்சித் தலைவர்களில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான டாக்டர்.எஸ்.ஏ.விக்ரமசிங்கரூபவ் பீட்டர்

கெனமன் போன்றவர்களுடனும் சமசமாஜக் கட்சியை சேர்ந்த டாக்டர் என்.எம்.பெரேராரூபவ் கொல்வின் ஆர்.டி. சில்வாரூபவ்

விவியன் குணவர்த்தனாரூபவ் லெஸ்லி குணவர்த்தனாரூபவ் பேர்னாட் சொய்சா போன்ற பல சமசமாஜக் கட்சி உறுப்பினர்கள்

அனைவருடனும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து பலருடன் நன்றாக பழகியுமுள்ளேன். 1933ம் ஆண்டு ஜனனித்த நான்

1948 ம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரை நாட்டில் நான் நேரில் கண்டதும்ரூபவ் கேட்டதும்ரூபவ் அனுபவித்ததும்

என்னை ஓர் முழு மனிதனாக உருவாக்க உதவியது.

நான் பெரிய மேதையல்ல. வெறும் சட்டத்தரணிதான் ஆனால் அரசியல் அனுபவம் எனக்கு 55 ஆண்டுகளுக்கு மேல். சட்டம்

பயின்று ஏறக்குறைய 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரு சிலரை தவிர

நான் பல ஆண்டுகள் மூத்த அரசியல்வாதி. தற்போதைய ஜனாதிபதியாக இருந்தாலும் சரிரூபவ் பிரதமராக இருந்தாலும் சரி

அரசியலில் என்னிலும்; இளையவர்களே. திரு ஆர்.சம்பந்தன் வயதால் மூன்று மாதம் மூத்தவர். அரசியலில்ரூபவ்

பாராளுமன்றத்தில் என்னிலும் இளையவரே. அவர் பாராளுமன்றம் சென்ற 1977ம் ஆண்டு அதற்கு முன் அவர்

எக்கட்சியிலும் அங்கத்தவராக இருந்ததில்லை தமிழரசு கட்சி உட்பட.

கரைச்சி கிராமசபைரூபவ் கிளிநொச்சி பட்டினசபை ஆகியவற்றின் தலைவராக செயற்பட்ட நான் 1970ம் ஆண்டு

கிளிநொச்சி தொகுதியில் தமிழரசு கட்சியுடன் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானேன். எனக்கு சில

பதவிகள் வழங்கப்பட்டபோதும் நான் அவற்றை ஏற்கவில்லை. 1972ம் ஆண்டு புதிய குடியரசு அரசியல் சாசனம்

உருவாகியது. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியை தந்தை செல்வா ஆரம்பித்தார். அதில் இலங்கை தமிழரசு கட்சியும்ரூபவ்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் முற்றுமுழுதாக இணைந்து கொண்டன. தம் பழைய நீண்டகால குரோதங்களை மறந்து

இரு கட்சித் தலைவர்களும்ரூபவ் தொண்டவர்களும்; ஏறக்குறைய முற்றாக ஒன்றிணைந்தது மட்டுமல்ல இரு கட்சித் தலைவர்களும் தமிழர்

விடுதலைக் கூட்டணி வேட்;பாளர்களாகவே 1977 இல் முதன்முதலாக போட்டியிட்டு மிகப்பெரும் வெற்றிகளை பெற்றுக்

கொண்டனர். 1970ம் ஆண்டு தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட நண்பர் ஆலாலசுந்தரம் அவர்கள் 1977ம்

ஆண்டு தேர்தலில் எனது வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பு தந்தார். அதேபோன்று சகல தமிழர் விடுதலைக் கூட்டணியின்

வேட்பாளர்கள் அத்தனைப்பேரும் கல்குடா தொகுதியைத் தவிர அனைவரும் வெற்றியீட்டினர். மட்டக்களப்பில் திரு இராசதுரை

அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரித்து வெற்றியீட்டியது. மாற்று வேட்பாளரை எமது கட்சி பிரமுகர் ஒருவர்

தீவிரமாக ஆதரித்தும் அவர் தோல்வி கண்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு 1972ம் ஆண்டில் இருந்து 1977ம் ஆண்டு தேர்தல் வரை கூட்டணியை நான்

வளர்க்க எடுத்த முயற்சிகள் பட்ட கஸ்டங்கள்ரூபவ் துன்பங்கள் கண்ட கொலைகள் சோகமான சம்பவங்கள் எண்ணில் அடங்கா. நாட்டில்

வடகிழக்குப் பகுதிகளுக்கு நாம்; போகாத இடமில்லை. கருத்தாடல்கள்ரூபவ் கிராம யாத்திரை என ஒன்றா இரண்டா? திரு.

அமிர்தலிங்கம் அவர்கள் சொல்வார்கள் தன் மனைவியிடம் தவம் ‘சங்கரி’ மட்டும்தான் நான் கேட்கும் இடமெல்லாம் தன்

சொந்த வாகனத்துடன் வருவார் என்பார். துரதிஸ்டவசமாக அவர்கள் இருவரும் இப்போது இல்லை. ஆனால் திருமதி

அமிர்தலிங்கம் அவர்கள் கட்சி சம்பந்தமாக விடுத்திருந்த அறிக்கையை இதன் பிற்பகுதியில் இணைத்துள்ளேன். ஒரு

சந்தர்ப்பத்தில் பொலனறுவையில் இரு நாட்கள் தங்கி மகாவலியின் சீற்றம் அடங்கியபின் மட்டக்களப்புக்கு

தொடர்ந்து சென்றோம் அந்த நாட்களில் கௌரவ. கே. டபள்யூ.தேவநாயகம் ஐயா அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி

அமைச்சராக இருந்தபோதும்; எமக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். அவர் வீட்டிலேயே எமது காரிய கமிட்டி கூட்டங்கள் பல

கூடியுள்ளன. அங்கேயே எமக்கு உணவருந்தவும் தங்கவும் வைப்பார். அவர் செய்தமையை நன்றி பாராட்ட வேண்டிய கடமை

எனக்குண்டு. ஆனால் கல்குடா தொகுதி மக்களோ அவரை ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றியீட்ட வைத்து தமது நன்றியை

வெளிப்படுத்தினர்.

1972ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டு வரை அந்த ஐந்து ஆண்டுகள் மறக்க முடியாதவை. பல துன்பங்களை அனுபவித்த காலம்.

பல இளைஞர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். தலைவர் அமிர் பல தடவை அவமானப்படுத்தப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில்

என்னுடன் சட்ட மறுப்பு போராட்டத்தில் ரூடவ்டுபட்டு சிறைசென்ற செம்மல்கள் யாழ்ப்பாணத்தில் விடுதலை

செய்யப்பட்டபோது அவர்களை வரவேற்க சென்ற அமிர்தலிங்கம் தம்பதிகள் பொலிசாரால் மிகவும் கேவலமாக

நடத்தப்பட்டனர். திரு.அமிர்தலிங்கம் அவர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டார். திருமதி அமிர்தலிங்கம்

அமர்ந்திருந்த வாகனத்தின் பொனற்றில் ஏறி நின்று தூசன வார்த்தைகளில் சிங்கள பாட்டுப்பாடி நடனம் ஆடினர்.

இத்தகைய சம்பவங்கள் மலிந்திருந்த இந்த ஐந்து ஆண்டு காலத்தில் பெரும் பகுதி கறுத்த மையில் அரச விரோத சுலோகங்களை

எழுதியமைக்காகவும்ரூபவ் கூட்டங்களில் வன்முறை பேச்சுக்களை பேசியதற்காகவும் சில ஆண்டுகள் தடுப்புக்காவலில்

வைக்கப்பட்டிருந்தார்கள் தம்பிமார் சேனாதிராசாரூபவ் காசி ஆனந்தன்ரூபவ் வண்ணை ஆனந்தன் போன்றோர். 1977ம் ஆண்டு

தந்தை செல்வா அமரத்துவமடைந்தார். அதில் கலந்துகொள்ளவே திரு.ஆர்.சம்பந்தன் திருகோணமலையில் இருந்து சமூகம்

கொடுத்தார்.

தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் 26-04- 1977 இல் அமரத்துவமடைந்தார். தமிழர் விடுதலைக்

கூட்டணியின் தலைவராக உதய சூரியன் கொடியால் மூடப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

செலுத்தினர். அன்னாரின் தகனக்கிரிகை முடிந்து சில மாதங்களின் பின்பு 80 அடி உயரமான கம்பம். உதயசூரியன்

சின்னத்தை சுமந்து யாழ் முற்றவெளியில் நிறுவப்பட்டது. கம்பீரமாக தோற்றமளிக்கும் அந்த உதயசூரியன்தான்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாகும். தந்தை செல்வா விட்டுச்சென்ற உதயசூரியன் சின்னமே அன்றி வீடு

சின்னம் அல்ல என்பதை 80 அடி உயரமான இக்கம்பமே சான்று பகிர்கின்றது. இந்த தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின்

உதயசூரியன் சின்னம் விடயத்தில்கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது துரோக செயலை வெளிப்படுத்தியுள்ளது. தந்தை செல்வா

மறைவுக்குப் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாலேயே உருவாகப்பட்டதே அன்றி தந்தை செல்வா

அவர்களால் அல்ல. பரிசுத்தமான அவரின் பெயர் இன்றும் தொடர்ந்து துஸ்பிரயோகம் செய்யப்படுவது வேதனைதரும்

விடயமாகும்.

இக்காலகட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமாகையால்ரூபவ்

ஏனையவர்களிலும் பார்க்க எனக்குரிய பொறுப்பு மிகக் கூடுதலாகவே இருந்தது. அன்றைய முல்லைத்தீவு தொகுதி

பாராளுமன்ற உறுப்பினர் திரு.எக்ஸ்.எம். செல்லத்தம்புவுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

திரு.தா.சிவசிதம்பரம் அவர்களுக்கும் தொகுதி சம்பந்தமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திரு.தா.சிவசிதம்பரம்

அவர்களும்ரூபவ் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்ட திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும்

பொதுக் கூட்டங்களில் பேசுவதை தவிர்த்துக் கொண்டமையால் அவர்களுடைய பணியையும் நானே ஓய்வின்றி செய்ய

வேண்டியேற்பட்டது. மிக்க சிரமத்துடன் எனது பணியினை நிறைவேற்றியமையால் தலைவர்களின் பாராட்டுக்கு ஆளானேன்.

இது போக 1977ம் ஆண்டு தேர்தலில் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் கேட்டிருக்க வேண்டிய தொகுதி வட்டுக்கோட்டையே.

ஆனால் அவர் ஏன் காங்ககேசன்துறை தொகுதியில் போட்டியிட்டார் என்று திரு.சேனாதிராசா அவர்களுக்கு மட்டுமே

தெரியும். முறைப்படி அத் தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டியவா திரு. தா.திருநாவுக்கரசு அவர்களே. அன்றேல்

வழக்கறிஞர் நடராசா அவர்களாகும். பிற்காலத்தில் மாவட்டசபை தலைவராக செயற்பட்ட அவர் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி நல்லதோர் பெயரையே சம்பாதித்து வைத்திருந்தது. 1977ம் ஆண்டுத் தேர்தலில் வென்றவர்களின்

காலம் 1983ம் ஆண்டுவரை நீடித்திருந்தது. வருட நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்

நடந்திருக்க வேண்டும். அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் அரசு சட்டத்துக்கு விரோதமான முறையில் ஐந்தில்

நான்கு பெரும்பான்மை இருந்தபோதும் சர்வாதிகார முறையில் பொதுஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தின்

காலத்தை ஆறு ஆண்டுகள் நீடித்தது. மக்கள் தந்த ஆணை ஆறு ஆண்டுகள் மட்டுமே. அக்கால முடிவில் நாமாகவே முன்வந்து எமது

பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்தோம். இந்த சாதனை நம்நாட்டு ஜனநாயகத்தின் வரலாற்றில் பொன்

எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவமாகும். அவ்வாறு நாம் துறந்த பதவிகள் அடுத்த ஆறு ஆண்டுகள்

நிரப்பப்படாமலேயே இருந்தது. இச்சம்பவம் தமிழர் விடுதலைக் கூட்டணியை சிறந்ததோர் ஜனநாயக கட்சியென உலகுக்கு

வெளிக்காட்டியது.

இதுவரை கூறப்பட்டுள்ள விடயங்கள் எவையும் புதியவை அல்ல. ஆனால் எத்தனை தடவை சில விடயங்களை சொன்னாலும் அவற்றை

படித்துவிட்டு வீண் வம்புக்கு என்னை இழுப்பது சிலருக்கு வழக்கமாகிவிட்டது. மேலே கூறப்பட்ட விடயங்களில் தமிழர்

விடுதலைக் கூட்டணி எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதுரூபவ்எத்தனை விதமான துன்பங்களை எமது தலைவர்கள் அனுபவித்தார்கள். எத்தனை

கொடூரமான சம்பவங்களுக்கு எமது தலைவர்கள் ஆளானார்கள் என்ற விடயங்களை மறைமுகமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இன்று

மிகப்பிரபலமாக பேசப்பட்டும்ரூபவ் விவாதிக்கப்பட்டும் வரும் விடயங்களில் பல கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேல்

பேசப்பட்டவைதான். மிக முக்கியமான சில விடயங்கள் எமது தலைவர்கள் பற்றியும் எமது மக்கள் பற்றியும் பல தடவை

எடுத்துக்கூறப்பட்டுள்ளது. அதைப்பற்றி எதுவித அபிப்பிராயம் தெரிவிக்காமல் மீண்டும் மீண்டும் என்மீது

குற்றம் காண்பது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. முதல்ரூபவ் ஒரு விடயம் பற்றிக்கூறி என்னுடைய அர்ப்பணிப்பு எந்த

விடயத்திலும் எவ்வளவு இருக்கிறது என்பதை மூடி மறைப்பதே சிலருக்கு வழக்கமாகிவிட்டது. என்னைப்பற்றி நானே

விமர்சிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டமையால் சில விடயங்கள் பற்றி மட்டும் எடுத்துக்

கூறியுள்ளேன். நான் கூறுவதை எவரேனும் சவாலாக எடுக்க விரும்பின் அதை நான் வரவேற்கின்றேன். இவ்வளவு

விமர்சனங்கள் மத்தியில் என்னைப்பற்றி நான் கேட்க விரும்பும் கேள்விகளில் ஒன்றுரூபவ் எனது 60 வருட அரசியல்

வாழ்க்கையில் குறிப்பாக நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்பு இன்றுவரை

ஜனாதிபதியுடனோ பிரதம மந்திரியுடனோ அல்லது வேறு எந்த அமைச்சருடனோ நான் மேடை ஏறி இருக்கின்றேனா?

இன்றுவரை இத்தனை தலைவர்களிடமும் எனக்கென ஏதாவது பட்டமோரூபவ் பதவியோ கேட்டிருக்கின்றேனா? என்னைத் தேடிவந்த பல

பதவிகளைப்பற்றியும் அவற்றை ஏற்காதது பற்றியும் மக்கள் அறியாததல்ல.

நான் ஒரு காந்தியவாதியாக சிறு வயதிலிருந்தே அகிம்சையை முன்னெடுத்தவன். இம்சையை வெறுத்தவன். அதற்காகத்தான்

எனக்கு ஒரு விருது கிடைத்தது. அதனைக்கூட லஞ்சம்ரூபவ் செல்வாக்கை பாவித்து பெற்றதாக விமர்சித்தனர். இது காந்தியத்தோடு

சம்பந்தப்பட்ட விருது என்பதை அறியாதவர்கள். தந்தை செல்வா தலைவர்கள் ஜீ.ஜீ. தொண்டா ஆகியோரின் தலைமையிலேயே

தமிழர் விடுதலைக் கூட்டணி செயற்பட வேண்டும் என்று அதன் தலைவர்கள் கனவு கண்டனர். தந்தை செல்வாவின் பெரும் கனவு

இதுவாகும். தான் ஆரம்பித்த தமிழரசு கட்சியை மூடிவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியையே தன் சொத்தாக தமிழ் மக்களுக்கு

விட்டுச் சென்றார். அக் கட்சியில் ஆரம்பகால உறுப்பினராக செயற்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்களும்

அதனையே கனவாகக் கண்டார். அவரின் பாரியார் தன் கணவர்; தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பற்றி எவ்வாறான கருத்தினை

கொண்டிருந்தார் என்றும் தமிழரசு கட்சியின் பெயர்ரூபவ் சின்னம் துஸ்பிரயோகம் செய்யப்படலாம் என்று பயந்தே

தமிழரசு கட்சியை பதிவு செய்து வைத்திருந்தார் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கை என்னிடம் உள்ளது. விடுதலைப் புலிகளை

நான் முற்று முழுதாக எதிர்த்தவன் அல்ல. அவர்களின் சில வன்முறைகளை கண்டித்தவன் நான். இருப்பினும் ஆனையிறவை

உங்களால் பிடிக்க முடியும் என்று பகற்கனவு காணாதீர்கள் என நேரடியாக பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரை

கேட்டவன் நான். இதற்கு மாறுபட்ட கருத்து என்னைப்பற்றி வெளியிட்டபோதும் இன்றுவரை சம்பந்தப்பட்ட தமிழ் தேசிய

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாய் திறந்து உண்மையை பேசவில்லை. ஏனையோர் எதுவும்

தெரியாததுபோல் நடிக்கின்றனர். மேலுமொரு சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரை பார்த்ரூபவ்

35000 போர்வீரர்களின் உயிரை காப்பாற்றித் தாருங்கள் என்று பிறநாடுகளிடம் மண்டியிட்டு கேட்டது

போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள் எனக் கூறியுள்ளேன். நான் தம்பி

பிரபாகரனுக்கு பல கடிதங்கள் எழுதினேன். அதில் ஒன்றையேனும் வாசித்து அதற்கு மறுப்பு தெரிவித்து இன்றுவரை

எவரும் எனக்கு பதில் எழுதவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனே என்னைப்பார்த்து ஆனந்தசங்கரி அண்ணைதான்

ஒருவருடன் அடிக்கடி பாராளுமன்றத்தில் மோதுகின்றவர் எனக்கூறிரூபவ் தான் என்னைப்பற்றி கொண்டிருந்த கருத்தை

மறைமுகமாக பாசத்துடன் வெளிப்படுத்தினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தச்சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளுக்கு மாறாக செயற்படவில்லை. எப்போதும் பல

விடயங்களில் நல்ல கருத்தையே வெளியிட்டது. கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிட்டு சென்றபோது என்னால்

எழுதப்பட்ட பல விடயங்களில் சிலரூபவ் கிளிநொச்சி தோல்வியடைந்ததன் பின் இந்த யுத்தத்தில் வெற்றி காணமுடியாது

என்றும் ஏதாவதொரு உடன்பாட்டுக்கு வந்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை தம்பி பிரபாகரனோடு தொடர்பு

கொண்டு காப்பாற்றுமாறும் அன்றேல் பாராளுமன்ற பதவிகளை துறந்துவிடுங்கள் என்று விடுதலைப் புலிகளை வைத்து

வியாபாரம் செய்தவர்களை பார்த்துக் கேட்டேன். அரசாங்கத்தை பார்த்து நீங்கள் புலிகள் அல்ல. நட்புறவுள்ள வேறு

நாட்டோடு தொடர்பு கொண்டு அவசியம் ஏற்பட்டால் நிபந்தனையற்ற மன்னிப்பு கொடுத்துரூபவ் அந்த அப்பாவி மக்களை

காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டினேன். பல ஆலோசனைகளையும் அரசுக்கு வழங்கினேன்.

யுத்தம் முடியப்போகும் கட்டத்தில் இந்திய வெளியுறவு செயலர் விடுத்த அவசர அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு

நிராகரித்து பதில் அனுப்பியதை நான் கண்டித்து எழுதிய கடிதத்தில்ரூபவ் நாட்டில் இருக்க வேண்டிய நீங்கள் உங்களில்

பாதிக்கு மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் சுற்றுகிறீர்கள் என சுட்டிக்காட்டினேன். தம்பி பிரபாகரனுக்கு மிக்க

மனவருத்தத்துடன் எழுதிய கடிதத்தில் தம்பி மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுடைய சாபத்திற்கு நீரும் உமது சந்ததியும்

ஆளாவீர்கள். மக்களை விடுவிக்க உதவுங்கள் என்று கேட்டேன். இந்தக் கட்டத்தில் செயற்பட்டிருக்க வேண்டியவர்கள் யார்?

அன்று தம்பி பிரபாகரனை இவர்களால் சந்தித்திருக்க முடியாதா? அன்று அவரிடம் பேசியிருக்க முடியாதா? அன்று

இவர்களில் எவரும் ஏதாவது ஒரு முயற்சி எடுத்தார்களா? இவர்களுடன் தொலைபேசியூடாக முயற்சிகள் மேற்கொண்டவர்களுக்கு

இவர்களுடைய மௌனித்த தொலைபேசிகளே பதிலளித்தன. இதன்மூலம் இவர்களின் சுயரூயஅp;பம் உலகுக்கு வெளிப்பட்டது. இதனை கண்டிக்க

யாருமில்லை. அதைவிடுத்து தந்தையை இழந்த ஒரு தனயனை எல்லோரும் சேர்ந்து குட்டுவது போல் என்னையே ஏன்

குட்டுகின்றீர்கள்? நான் மக்களுக்குஎவ்வித துரோகமும் செய்யவில்லை.இனப்பிரச்சனை சம்பந்தமாக அரசுடன் பேசுவதற்கு

புலிகளுக்கு பூரண அந்தஸ்த்து கொடுக்க வேண்டும் என்று ஒரு தடவையல்ல பல தடவைகள் கூறியிருந்தேன். 14 பாராளுமன்ற

உறுப்பினர்களுடன் 36 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று யாழ் மாவட்டத்தில் ஒன்பது பேரில் முதலாவதாக

வந்த நான் பாராளுமன்றம் சென்றேன். அடுத்த தேர்தலில் காரணம் எதுமின்றி திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன்.

இச்செயல் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளால் என்னை தெரிவுசெய்த தமிழ் மக்களுக்கு இவர்கள் செய்தது

துரோகமில்லையா? இதுபற்றி யாராவது கேள்வி கேட்டார்களா? 2004ம் ஆண்டு தேர்தலில் முறையற்ற வகையில் 22

பாராளுமன்ற ஆசனங்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்திருந்தால் அத்தனை

ஆசனத்தையும் இராஜினாமா செய்திருப்போம். திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இறந்தபோது அவரின் தேசியப்பட்டியல்

பதவியை திருவாளர்கள் நீலன் திருச்செல்வம்ரூபவ் சம்பந்தன் போன்றோர் விரும்பியிருந்தனர். நானே முன்னின்று

அனைவரினது பகையை சம்பாதித்தேன் என்பதை உணராத திரு. சேனாதிராசாவை நியமித்தோம். அடுத்தத் தேர்தலில் நீலன்

திருச்செல்வம் அவர்களின் வெற்றிடத்திற்கு அதே நபரின் தொல்லை தாங்காது அவரையே நியமித்தமை கட்சி விட்ட

இரண்டாவது பிழை. அதன் பின்னர் நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தானே முதன்மை வேட்பாளராக வரவேண்டும்

என்று அடம்பிடித்து பிரச்சாரம் செய்து இரண்டாம் இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. அவரின் தவறான நடவடிக்கையை

கண்டுக்கொள்ளாதது கட்சியின் தலைமை செய்த தவறு. இச்சம்பவங்கள் பற்றி பூரணமாக திரு. சம்பந்தன் போன்றோர்

அறிந்திருந்தனர். இதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளே எதுவித விசமும் பரவாமல் அனைவரும் ஒற்றுமையாக

செயற்பட்டு வந்தனர். துரதிஸ்டவசமாக சிறுபிள்ளைபோல் எதையும் தனக்கே தரவேண்டுமென அடம்பிடிக்கும் தமிழர் விடுதலைக்

கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வன்னிக்கு சென்று ‘தங்கன்’ என்ற விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய

இலங்கை தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்தார். அந்த செய்தி எத்தகைய அதிர்ச்சியை எனக்கு மட்டுமல்ல தமிழர் விடுதலைக்

கூட்டணி கட்சிக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் கொடுத்திருக்கும் என்பதை யாராவது சிந்தித்தார்களா?

இன்றுவரை அது சம்பந்தமாக ஒரு வார்த்தையாவதுரூபவ் எவரேனும் பிழையென தெரிவித்தார்களா? இதில் மிகப்பெரிய வேடிக்கை

என்னவெனில் சாத்வீகவாதியான தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசு கட்சியை அவர் இறந்து 26 ஆண்டுகளுக்கு பின்பு

எவருடைய அனுமதியின்றி புதுப்பித்தமையே. அதுகூட அகிம்சையுடன் எதுவித உறவும் இல்லாத ஒருவரின் பணிப்புக்கமையவே.

அமைதியாக இருந்த நாட்டில் இத்தனை குழப்பத்தையும் உண்டு பண்ணியவர்கள் நானா? விடுதலைப் புலிகளை தமிழ்மக்களின்

ஏகபிரதிநிதியாகவும் தமிழ் தேசியத் தலைமையாகவும் ஏற்றுக்கொண்டதாக பிரகடனப்படுத்தியே தேர்தலில்

போட்டியிட்டு பலபேரை பலிகொடுத்து 22 ஸ்தானங்களை கைப்பற்றினர். இத் தேர்தல் நடத்தப்பட்டதே முற்று முழுதாக சட்ட

விரோதமானதாகும். தமிழர் விடுதலைக கூட்டணியே இத்தனை ஸ்தானங்களை பெற்று கொடுக்க வேண்டிய இச் சந்தர்பத்தில் இந்த

மோசடி அர்த்தமற்றதாகிப் போய்விட்டது மட்டுமல்ல விடுதலைப் போராட்டத்துக்கு பெரும் களங்கமும் ஏற்படு;த்தியது.

இதுபற்றி இன்றுவரை யாராவது பேசினார்களா? எவருக்கும் நானே போடுதடியானேன் இன்றும்கூட.

இப்படி எத்தனை விடயங்கள் காலத்துக்குக் காலம் பலரால்; மறைக்கப்பட்டது. இன்றைய அரசாங்கத்தில் 39 கட்சிகளை

உள்ளடக்கியதே ஐக்கிய தேசிய கட்சியாகும். சுதந்திரக் கட்சியும் அவ்வாறே ஓரணியை உருவாக்கியது. நாம் மட்டும்

மூன்று நபர்களை வைத்து அரசியல் செய்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த ஏனைய முன்று கட்சிகளும்

புறக்கணிக்கப்பட்டுள்ளன. உண்மையை கூறப்போனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதும் முதலாவதாக இருந்ததும்

அதற்குத் தலைமை தாங்கியதும் தமிழர் விடுதலைக் கூட்டணியே ஆகும். அந்த இடத்தை வஞ்சகமான முறையில்; தமிழரசு கட்சி

கைப்பற்றிக் கொண்டது. நாம் மேற்கொண்ட எந்த முயற்சிகளுக்கும் எவரும்; ஒத்துழைப்பு தரவில்லை என்பதை

இச்சந்தர்ப்பததில் கூட்டிக்காட்ட விரும்புகின்றேன். 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இராணுவத் தளபதி விடுதலைப்

புலிகளை பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்து யுத்தம் முடிந்த பின் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை

இரட்டிப்பேன் என்று கூறிய இராணுவ தளபதியை ஜனாதிபதி பொது வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்ததே.

அவர் பெற்றுக் கொண்ட வாக்குகள் 1ரூபவ்13ரூபவ்000 இவர்கள் பெற்ற வாக்குகள் 63ரூபவ்000 மொத்தமான வாக்குகளின்

எண்ணிக்கை ஏழரை இலட்சமாகும். எந்த விதமான உள் நோக்கமும் இல்லாமலே நான் 2010ம் ஆண்டு திரு.சம்பந்தன்

அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இரண்டு நாள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு அவருக்கு ஒத்துழைப்பு

வழங்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு நான் திரும்பி வந்து மூக்குடைப்பட்டதுதான் மிச்சம். உள்ளுராட்சி மன்றத்

தேர்தலின் போது தீவிரமாக தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஆகியன தீவிர பிரச்சாரத்தில் ரூடவ்டுபட்டன. மாகாணசபைத்

தேர்தலில்; எனக்கு கிளிநொச்சிக்கே நியமனம் கொடுத்துவிட்டு கூட்டணி பிரமுகர்கள் இருவர் அங்கு வந்து உள்ளுர்

தலைவர்களுடன் சேர்ந்து எனக்கெதிராக தீவிரப்பிரச்சாரம் செய்தார்கள். தோற்றுவிட்டேன் என நான் கவலைப்பட்டதில்லை.

இதுபற்றி எவரேனும் ஏன் விமர்சிக்கவில்லை? எம் தலைவர்களின் செயற்பாடுகள் எனக்கு வேதனையளித்தது. ஆனால்

பெருந்தலைவர்கள் ஜீ.ஜீ. தந்தை செல்வாரூபவ் தொண்டாரூபவ் அமிர்ரூபவ் சிவசிதம்பரம் ஆகிய இவர்களின் இடத்தில் ஒரு

உத்தமரையேனும் காணமுடியவில்லை. எனது கடந்தகால முயற்சிகள் பலமிக்க சிலரின் பின்னனியில் முறியடிக்கப்பட்டு

வந்தமையால் யார் வேண்டுமானாலும் கூட்டுங்கள் என் ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறினேன். இன்று அரசியலில்

உத்தமர்களை அடையாளம் காண்பது கஸ்டம். எவர் எடுக்கின்ற முயற்சிக்கும் நான் முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை.

பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறேன் என்பதில் உறுதியாயிருக்கிறேன். இந்த புதிய அணியில் இணைந்து

செயற்பட விரும்பும் அனைவரையும் ஏற்க எமது கதவுகள் திறந்தே இருக்கும்.

ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எனது மனச்சாட்சிக்கு விரோதமாக நான் என்றும் செயற்பட்டவனல்ல. கடந்தகாலத்தில்

அரசியலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டதுண்டு. தப்புகள்ரூபவ் தவறுகள் பலவிதத்தில் நடந்திருக்கலாம். ஆனால் தமிழ்

தலைவர்கள் பெரியார் தந்தை செல்வாரூபவ்ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோர் என்று தம் இருவர் உள்ளத்திலும்

நிறைந்திருந்த குரோதங்களை மறந்து செயற்பட்டார்களோ அன்றே தமிழினத்தின் எதிர்காலம் பெரும் மாற்றத்தை

உணரக்கூடியதாக இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு தெரியாவிட்டாலும் இவ்விரு பெருந்தலைவர்களின் இணைவு உலக

அதிசயத்தில் ஒன்றாக ஒப்பிடக்கூடியதாக இருந்தது. அக்காலத்தில் இவ்விருவரையும் தலைவர்களாக கொண்டவர்கள் மத்தியில்

அண்ணன் தம்பிரூபவ் மாமன் மச்சான்ரூபவ் தந்தை பிள்ளை என்ற பேதம் பாராமல் குரோதம் வளர்ந்திருந்தது. என்று இவ்விரு

தலைமைகளும் திருகோணமலையில் கூடி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்களோ அந்த நிமிடத்திலிருந்து

குரோதங்களை மறந்து ஒரே குடும்ப உறவினர்கள் போல் அரசியல் குரோதத்தை மறந்து மக்களும் பழகத் தொடங்கினர்.

என்னோடு சம்பந்தப்பட்ட ஒரு சிறு நிகழ்வு எனது கருத்திற்கு ஆதாதரமாக இருக்குமென கருதுகிறேன். 1970ம் ஆண்டு

தேர்தலில் தமிழரசு கட்சி மிகச் செல்வாக்காக திகழ்ந்தது. அப்பேற்பட்ட ஒரு கட்சியோடு போட்டியிட்டு மிகப்பெரிய

குரோதத்தைதான் வளர்க்க முடிந்தது.; மிக சொற்ப வித்தியாசத்திலதான்; நான் வெற்றி பெற்றேன். ஆனால் இதிலுள்ள

அதிசயம் யாதெனில் என்று எந்த நிமிடம் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமானதோ அந்த நிமிடத்திலிருந்து நானும்

ஆலாலசுந்தரம் அவர்களும் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டோம். தொகுதி மக்கள் மத்தியில் செயற்பட்ட இரு

கட்சிகளின் கிளைகள் அதன் நிர்வாகிகள் எல்லோரும் தமிழர் விடுதலைக் கூட்டணி கிளையாகவும் நிர்வாகிகளாகவும்

மாறினர். இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மாற்றமின்றி ஒன்றிணைந்தன. மேலுமொரு

உதாரணம் கூற எண்ணும்போது என் கண்கள் பனிக்கின்றன. கல்குடாத் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த

கே.டபள்யூ தேவநாயகம் அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தது. அவர் அமைச்சராகவும் இருந்தார். ஆனால்

இன்று எனக்கே நம்பமுடியவில்லை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்குழு கூட்டங்கள் ஒன்றல்ல பலரூபவ் அவரது

வீட்டிலேயே இடம்பெற்றன. உணவுரூபவ் தங்குமிடமரூபவ்; கௌரவமான வரவேற்பு எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் விடுதலைக்

கூட்டணி கட்சியின் கொடியாகிய உதயசூரியன் கொடி சம்பிரதாயபூர்வமாக முதல் முதல் ஏற்றப்பட்டதே தேவநாயகம்

ஐயா வீட்டில் என்பது சரித்திரம். இவற்றையெல்லாம் கூறுவதற்கு காரணம் தேவநாயகம் அவர்கள் வளர்த்த இன ஒற்றுமைக்குச்

சான்றுரூபவ் அவரது செயலாளர் நண்பன் வழக்கறிஞர் ஜோன் அவர்கள். ஆனால் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு

வளர்ப்பது தமிழ் விரோதம் மட்டுமல்ல இன விரோதமும்கூட. அதற்குச் சான்று நானே.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரித்தது ஜனாதிபதி பொதுவேட்பாளராக மைத்திரிபால

சிறிசேனாவை பிரதம மந்திரி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அவர்களையுமே. இது தமிழர் விடுதலைக் கூட்டணியின்

முடிவாகும். சகல பத்திரிகைகளிலும் வெளியாகிய செய்தியுமாகும். வேட்பாளராக நியமனம் பெற்றபோதும்

வென்றபோதும் இருவரையும்

தொலைபேசியில் வாழ்த்தியிருந்தேன். ஆனால் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்னுடன் இதுவரை எவ்வித

தொடர்பும் கொள்ளவில்லை. சந்திப்புக்கான கோரிக்கைக்கும் செவிசாய்க்கவில்லை. இது சிறுபிள்ளை அரசியலாகும்.

சிறுபிள்ளைகள் யாரென்பதை நான் கூறத்தேவையில்லை. ஏனெனில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க ஒரு நீண்டகால

அரசியல்வாதி. இப்படி பல சம்பவங்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சி

பேட்டியொன்றில். திரு.இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்ரூபவ் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித

தொடர்பும் இல்லையென்று கூறியிருந்தார். இதுதான் உண்மையும். சில பெரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்

தேசிய கூட்டமைப்பை ஆரம்பித்தது தமிழர் விடுதலைக் கூட்டணியே. அக்கட்சியின் சார்பில் கையொப்பமிட்டவர் அன்றைய

கட்சியின் செயலாளர் திரு.இரா.சம்பந்தன் அவர்களே. இந்த உண்மை முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்க

முயற்சிப்பதுபோல் உள்ளது. இன்னுமொரு விடயம் 2004ம் ஆண்டுத் தேர்தல் முழு மோசடியாக நடைபெற்றது. காலையில்

தோற்றுப்போன பிரமுகர் மாலையில் வெற்றிபெற்ற புதுமையும் இத் தேர்தலில் நடந்தேறியது. மோசடி மூலம்

தெரிவு செய்யப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில்

மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது எதிர்கட்சித் தலைவராக

செயற்படும் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் அன்று எதிர்கட்சியை குழிதோண்டி புதைத்த பெருமைக்குரியவராவார்.

இதுபற்றி இன்றுவரை யாராவது வெளிக்கொண்டு வந்தார்களா? இக்கட்சியை இன்று ஊட்டி வளர்ப்பவர் ரணில் விக்கிரமசிங்க

அவர்களே. இதன் மர்மம் வெளிக்கொண்டுவரப் பட்டதா? தேசிய நிருபணசபையில் மோசடி மூலம் இயங்கிவரும் தமிழ்

தேசிய கூட்டமைப்புக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து வளர்க்கப்படுவதன் நோக்கம் என்ன? இப்படி பல விடயங்களை

எழுதிக்கொண்டே போகலாம்.

நாட்டு மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயகம் அழிக்கப்படுவதாக கூறி ஆட்சிமாற்றம் செய்த மக்களில்

நாமும் உள்ளடங்குவோம். ஆனால் தற்போது நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? என மக்கள் கேட்க ஆரம்பித்து

விட்டார்கள். வெறும் சம்பிரதாயத்துக்காக அல்ல. தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி

பிரமுகர்களில் ஒருவராகிய நான் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராகவுள்ளேன். பதவி துறப்பாக இருந்தாலும் சரிரூபவ்

பதவி மாற்றமாக இருந்தாலும் சரி இதில் எது நியாயமான கோரிக்கையாக உரிய இடத்திலிருந்து வருகின்றதோ

அதற்கமைய செயற்பட நான் தயாராக இருக்கின்றேன். ஒற்றுமை கருதி எனக்கு தெரிந்த பல உண்மைகளை இதுவரை மறைத்தும்

இனியும் தொடர்ந்து மறைப்பதற்கும் எனது பலயீனம் காரணமல்ல. இன ஒற்றுமையில் இருக்கின்ற ஆர்வமே காரணமாகும்.

2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தொடக்கம் இன்றுவரை பல தேர்தல்களில் போட்டியிட்டு தோற்கவில்லை.

திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டேன். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என சில சிறுசுகள் கூறுவது அவர்களின்

அறியாமையே. திட்டமிட்டவர்களுக்கு உண்மை தெரியும்.

இன்றுதன்னும் சகல தமிழ் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து முறைதவறி பெற்றிருக்கும் எதிர்கட்சித் தலைவர் பதவியை வீசி

எறிந்துவிட்டு ஒரே அணியாக செயற்பட திரு. இரா.சம்பந்தன் அவர்கள் முன்வருவராக இருந்தால் நான் ஒரு சாதாரண

தொண்டனாக கடமையாற்ற தயாராக உள்ளேன். இது இனத்தின் மீது நான் கொண்ட அதீத பற்றே காரணமாகும். தம்பிமார்

சேனாதிராசாரூபவ் சுமந்திரன் போன்ற மற்றும் எழுந்தமானமாக அரசியல் பேசும் புதிய தலைவர்களும் சில காலம்

ஒதுங்கியிருந்து வரலாற்றை திரிபுபடுத்தாமல் படித்துவிட்டு அரசியலுக்கு மீள திரும்புமாறு அன்புடன்

வேண்டுகிறேன். தமிழ் மக்களாலும் ஒற்றுமைபட முடியும் என்பதை பெரியார்கள் தந்தை செல்வாரூபவ் ஜீ.ஜீ.பொன்னம்பலம்ரூபவ்

சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் எமக்கு சொல்லித்தரவில்லை. நாமே அவர்களை பின்பற்றுவோம்

அத்தகையவொரு வரலாற்று பாடத்தை எமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். மக்களாகிய நீங்கள் நம்பினால் நம்புங்கள்.

எம்மவர் மத்தியில் பதவி ஆசை ஆட்கொண்டுவிட்டது. நாம் நாம் அழிகிறோமா அழிக்கப்படுகின்றோமா என்பதை

விரைவில் உணர்வீர்கள். அந்த நேரம் நான் இருக்கமாட்டேன்.

நன்றி

வணக்கம்

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – தமிழர்

விடுதலைக் கூட்டணி

SHARE