ஜனாதிபதி மற்றும் பிரதமரை அச்சுறுத்திய இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்

263

 

ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்ட விரோதமான முறையில் தொடர்பு வைத்திருந்த இரண்டுரஷ்யர்கள் மற்றும் இலங்கையர் ஒருவர் சேலங்கூர் பகுதியில் மார்ச் 28 மற்றும்ஏப்ரல் 22ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு அவர்களுடைய நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்று மலேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

7297ff91-75d1-4fd6-bf74-62fb2e15aac0

மூவரும் சீலங்கூர் சிறப்பு இராணுவ அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுமலேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் டேன் கலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டு வந்த 25மற்றும் 28 வயதையுடைய இரண்டு ரஷ்ய பிரஜைகள் முதலில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய ஐ.எஸ் தீவிரவாதத்தின் உறுப்பினர்கள் என்று இந்த இருவர்களும் சந்தேகத்தின் பேரில் துருக்கி அதிகாரிகளால் இந்த வருடம் பெப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் துருக்கியில் இருந்து மார்ச் மாதம் மலேசியாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் 2012ம் ஆண்டுக்கான சட்டத்தின் படி குற்ற பாதுகாப்புபிரிவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கையர் கிள்ளான்பள்ளத்தாக்கில் தொலைக்காட்சி தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் 42வயதுடையவர் என்று கலிட் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர் தன்னுடைய முகப்புத்தக கணக்கில் இலங்கையின் ஜனாதிபதி மற்றும்பிரதமரை கொலை செய்வதாக அச்சுறுத்தி தரவு ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கையிலேயே தேடப்படும் பட்டியலில் குறித்த நபர் உள்ளடங்குகின்றமைகுறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் குடிவரவு சட்டம் 6ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மலேசியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் ஏப்ரல் 27ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு பொலிஸ் அதிகாரிகளின்தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மலேசிய பிரதி பொலிஸ் மா அதிபர்டேன் கலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

உயர் ஆபத்து நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் குறித்து முழுகண்காணிப்புடன் இருக்குமாறு மலேசிய குடிவரவு திணைக்கள பொலிஸ் அதிகாரிகளிடம் கலிட் கூறியுள்ளார்.

SHARE