இனப்படுகொலையில் ஈடுபடுகின்ற அரசுகள் அதனை மூடி மறைக்க கையாளும் சாணக்கியமான ஒன்றுதான் நல்லிணக்கம்.

538

 

ஒரு இனம் எதிர்கொள்ள கூடாத , ஒரு இனத்துக்கு இளைக்கப்படக்கூடாத அநீதிகளில் ஒன்றாக , உலகின் மிகக்கொடூரமான குற்றங்களில் ஒன்றாக இனப்படுகொலை இருந்து வருகிறது. அவ்வாறன காட்டுமிராண்டித்தனமான அநீதிக்கு ஈழத்தில் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டார்கள் , அதன் உச்ச கட்டமாக முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் நிகழ்ந்தேறியது. தமிழருக்கு நிகழ்ந்த இனப்படுகொலையே இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று சில ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

killing-13

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்னும் அடிப்படையில் , அதற்கான நீதியை பெறுவதற்காக தொடர்ச்சியாக போராடவேண்டியவர்கள் என்னும் அடிப்படையில் அந்த சொல்லாடல் தொடர்பான புரிதல் , அடிப்படை விளங்கிகொள்ளல் இருப்பது அவசியமாகிறது. ஏனெனில் என்னதான் வடமாகாண சபை இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் , இனத்தால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிலரும் அவர்களை ஏற்கும் அறிவாளிகள் சிலரும் அதனை ஏற்பதாக தெரியவில்லை. பலர் நினைக்கிறார்கள் கிட்லர் யூதர்களை கொன்றது போல் கொல்லப்பட்டிருக்கவேண்டும் அப்படி நிகழ்ந்தால் தான் அது இனப்படுகொலை, உண்மையில் அது தவறான புரிதல் , கிட்லர் மேற்கொண்ட யூத இனப்படுகொலை என்பது , கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு இனப்படுகொலை , இனப்படுகொலைக்கான ஒரு உதாரணமும் கூட , ஆனால் அவர்கள் அழிக்கப்பட்டதைப்போலவே அழிக்கப்பட்டால் தான் அது இனப்படுகொலை என்று விளங்கி வைத்திருப்பது இனப்படுகொலை தொடர்பான ஒரு தவறான புரிந்து கொள்ளல் ஆகும்.

ஜெனோசைட் என்னும் சொல்லை ராபேல் லெம்கின் 1944 இல் தனது நூலில் முதன் முதலாக பயன்படுத்தினார். ஜெனோசைட் என்பதில் ஜெனோ என்னும் கிரேக்க சொல் இனம் என்பதையும், சைட் என்னும் லத்தீன் சொல் கொல்லப்படுதல் என்பதையும் குறித்து நிற்கிறது. கிட்டத்தட்ட இவரின் 15 வருட தொடர் பிரச்சாரங்களின் பின் 1948 ம் ஆண்டு இனப்படுகொலை சர்வதேச சட்டங்களின் கீழ் குற்றமான ஒன்றாக ஜ நா வால் பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பிரகாரம் ஒரு இனத்தை, அந்த இனத்தை சேர்ந்தவர்கள் இனக்குழுவை சேர்ந்தவர்கள் , மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ கொல்லுவது அல்லது கொல்ல நினைப்பது இனப்படுகொலை என வரையறுக்கின்றனர். அத்தோடு குழந்தைகளை இனம் மாற்றுதலோ மதம் மாற்றுதலோ அல்லது இனத்தை காரணம் காட்டி குழந்தை பிறப்பை தடுப்பதோ இனப்படுகொலை குற்றமாகவே கருதப்படுகிறது. இப்பத்தி எழுத்தாளர் 2014 தையில், ஸ்ரீலங்கா சென்று அப்போதைய அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட லீ ரியாணன் என்னும் ஆஸ்திரேலிய செனட்டரை நேர்கண்ட போது பின்வரும் உண்மைய கூறி இருந்தார் ” தாய் , தந்தையை இழந்த தமிழ் சிறுவர்கள் தெற்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இனம் , மதம் மாற்றப்படுவதாக கூறி இருந்தார். அப்படியாயின் இதுவும் இனப்படுகொலை குற்றமாக கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான்.

இனப்படுகொலை என்னும் சொல்லின் உள்ளடக்கம் கனதியான ஒன்றுதான் ஏனெனில் அதற்கான தண்டனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்ச பட்சமானவை. வெறுமனே படுகொலைகள் நிகழ்வது இனப்படுகொலையாக கருதப்படுவது இல்லை , ஆனால் குறித்த படுகொலைகள் அந்த இனத்தை அழிப்பதற்கான நோக்கத்தோடு அல்லது உள் நோக்கோடு செய்யப்படுமாக இருந்தால் அதுவே இனப்படுகொலையாக அடையாளம் கொள்ளப்படுகிறது. ஆக பல்வேறு வழிமுறைகளில் ஈழ தமிழர்கள் ஏராளமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள் , அந்த இனத்தினை பகுதி அளவில் ஸ்ரீலங்கா அழித்திருக்கிறது, தமிழர்கள் என்கிற ஒரே அடையாளத்துக்காகவே அவர்கள் அழிக்கப்பட்டும் இருக்கிறார்கள். ஆகையால் அது இனப்படுகொலை , எனவே முதாளில் நாம் இது இனப்படுகொலைதான் என்று சொல்ல முன்வரவேண்டும்.

சில மக்கள் பிரதிநிதிகள் அதை சொல்ல மறுக்கின்றனர் , மற்றவர்கள் அங்கீகரிக்காமல் அதை சொல்ல முடியாது என்கின்றனர்.” என் சகோதரன் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடக்கிறான், குத்தியவன் இரத்தக்கறை படிந்த கத்தியோடு அருகில் நிற்கிறான் அங்கே நானே அதற்கான நீதிக்கான கோரிக்கைய முன்வைக்க முடியும் அனெனில் பார்த்தவனும் நானே பாதிக்கப்பட்டவனும் நானே , மற்றவர் வந்து அது கொலை என்று சொல்லித்தான் நானும் அதை கொலை என்று ஏற்று நீதி கோரவேண்டிய அவசியம் இல்லை, அப்படி செய்யின் அது நீதி கோரல் தொடர்பான அறத்துக்கு மாறானது ” ஆக முள்ளிவாய்க்களில் சிந்திய இரத்தம் இன்னும் காயவில்லை பாதிக்கப்பட்ட தமிழினமே ஒருமித்த குரலில் இனப்படுகொலைக்கான நீதி கோரலில் இறங்கவேண்டும்.

இனப்படுகொலைக்கான நீதியை சிலர் நீதிமன்ற செயன்முறைக்கூடக பெற வேண்டிய ஒன்று என்று தவறான கருத்துக்களை பரப்புகின்றனர், வெறுமனே நீதிமன்ற செயட்பாட்டுக்கூடாக பெறுகிற விடயம் அல்ல அந்த நீதி , அது அனைத்துலக அரசியல் விருப்பின் பாற்பட்ட ஒன்று . இதனை அனைத்துலக நீதி என்பர் சிலர் அனைத்துலக நீதி என்பது அனைத்துலக அரசுகளின் நீதி , அனைத்துலக அரசுகளின் நீதி என்பது அனைத்துலக அரசியலின் நீதி தான். ஒரு நாட்டுக்கு எதிராக விசாரணை நடைபெற வேண்டுமாக இருந்தால் அதற்கான அனுமதியை அனைத்துலக அரசுகளே தீர்மானிக்கின்றன அதாவது அனைத்துலக அரசியலே தீர்மானிக்கின்றது , அப்படியாயின் தமிழின இனப்படுகொலைக்கான நீதிமன்ற செயன்முறையை தீர்மானிப்பது அனைத்துலக அரசியலே அதனையே தமிழர்கள் சாமர்த்தியாமாக இன்று செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் , அதாவது இனப்படுகொலைக்கான நீதிமன்ற செயன்முறைக்கு முன்பு, இனப்படுகொலைக்கான அனைத்துலக அரசுகளின் அல்லது அரசியலின் நீதியை பெறவேண்டி உள்ளது அதற்கான இராஜ தந்திர அரசியலையே தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் இற்றைவரை எந்த ஒரு அரசோ , அல்லது அரசின் அதிகார பூர்வ இராச தந்திரியோ தமிழருக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்று அழைக்கவில்லை.

ஸ்ரீலங்காவின் யுத்தம் என்பது தமிழின அழிப்புக்கான ஒரு கருவி அங்கே யுத்த குற்றங்கள் நிகழவில்லை யுத்தத்தால் ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை, இனப்படுகொலையில் ஈடுபடுகின்ற அரசுகள் அதனை மூடி மறைக்க கையாளும் சாணக்கியமான ஒன்றுதான் நல்லிணக்கம். இப்போது இலங்கையில் அதுவா நடக்கிறது ?

SHARE