சீரற்ற வானிலை காரணமாக சொந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரதமர் வேண்டுகோள்

297

 

எதிர்வரும் திங்கட்கிழமை வரை சொந்த இடங்களுக்கு சென்று குடியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

589111800Untitled-1

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (வியாழக்கிழமை) திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களையும், இடங்களையும் பிரதமர் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரடியாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், மாலைத்தீவில் கடும் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், இதன் தாக்கம் தொடர்ந்தால் மீண்டும் வெள்ள நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இல்லையேல் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த அசாதாரண நிலையை வழமைக்கு கொண்டு வரலாம். எனவே மக்கள் திங்கட்கிழமை வரை சொந்த இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

அதேவேளை, இந்த பகுதி மக்களுக்கு தேவையான உணவு மற்றும் சுகாதார சேவைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இராணுவம், பொலிஸார், அரச, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

SHARE