பாயிசால் தப்பிய ரிசாத்; வாங்கிக் கட்டிய ஹக்கீம்!

320

 

என்னவோ என்ன மாயமோ ரிசாத் தப்பிட்டார் என்று ஒரு சில குடிமக்கள் பெருமூச்சு விடுகிறார்கள். உண்மை தான் ரவுப் ஹக்கீமோடு ஒப்பிடுகையில் நல்லவன் இல்லையென்றால் மாற்றுத் தெரிவும் இல்லாத நிலையில் வல்லவனாக ஒரு சிறு காலம் ரிசாத் பதியுதீன் வலம் வந்தார், வருகிறார்.

rishad-hakeem

என்றாலும் வடக்கில் 25,000 வாக்குகளைக் காப்பாற்ற கிழக்கில் 32,000 வாக்குகளை உசுப்பி கடந்த தேர்தலில் தப்பித்துக் கொண்டாலும் பதவிப் பிசாசுகளைக் கையாளப் போதிய நிறுவனங்கள் இல்லாததால் மேலும் சிலரை இழந்துமாயிற்று. எனவே, இப்போது புதிய நண்பர்கள் எதிரிகளாகும் வரை தங்கியிருக்கிறார்கள்.

வெல்லம்பிட்டிக்கு மாத்திரமில்லை எங்கு சென்றாலும் ரவுப் ஹக்கீமைப் பார்த்து நாக்கைப் பிடுங்கும் அளவுக்குக் கேள்வி கேட்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனாலும், அவரின் அமைச்சுப் பதவி ஓரளவுக்கு அவரைக் காப்பாற்றி வருகிறது.

ஸ்ரீலங்காவின் கட்சியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அம்பாறையின் கட்சியாகி, அதாவுல்லா குரூப் தமது பிடியைப் பலப்படுத்த முயல்வதால் அதுவும் சுருங்கி, கல்முனையின் ‘தேசியத் தலைவராக’ மாறியுள்ளார் ரவுப் ஹக்கீம். அந்தப் பதவி கூட எடுப்பதையெல்லாம் இவர் எடுத்தாலும் அமைச்சுப் பதவிகளை கிழக்குக்கு வழங்கும் வரைக்கும் தான் தங்கும். கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சுப் பதவிகள் நிராகரிக்கப்பட்டால் கண்டி மாநகர சபையிலும் ரவுப் ஹக்கீமின் தலைமைக்கு மரியாதை கிடைக்காது என்பதே கசப்பான உண்மை. எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கைப் பெருப்பித்து 2020ம் ஆண்டு தான் தேசியப்பட்டியலில் உள் நுழைவதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே ரவுப் ஹக்கீம் வருகிறார்.

அளுத்கமயிலும் அடி வாங்காத குறையாக வெளியேறி வந்த ரவுப் ஹக்கீம், பல இடங்களில் தவறான நேரத்தில் சென்றும், சரியான நேரத்தில் சென்று தவறான வேலைகளை செய்தும் மக்களிடமிருந்து தப்பி வந்த கதைகள் பல உள்ளன. இந்த இடைவெளியை தனக்கான முதலீடாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார் மன்னாரின் நிலப்பிரபு ரிசாத் பதியுதீன். என்றாலும் இந்த நடிகரை வெல்லம்பிட்டி மக்களிடமிருந்து காப்பாற்றியது மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்.

பாயிசாகத் பார்த்து இவரது கட்சிக்கு ‘ஆம்’ சொல்ல அதற்குப் பதிலாக ரிசாத் பதியுதீன் வீசிய ரொக்கங்கள் 2015 ஜனாதிபதி தேர்தலில் ரிசாத் பதியுதீனின் அ.இ.ம.கா மைத்திரி பாலவுக்கு ஆதரவு என குத்திக்கரணம் போட்டு தப்பி வந்த போதிலும் பாயிசை மஹிந்தவின் பக்கமிருந்து இழுத்தெடுக்க தவறி விட்டது. ஹிஸ்புல்லாவும் அந்தப் பக்கம் நின்றார், கட்சியை விட்டுக் கழன்றார், யாப்பு, தலைமை, உயர் பீடம், உச்சபீடம் என்ற போலிக் கூத்துக்களால் பாயிசுக்கோ, ஹிஸ்புல்லாவுக்கோ, சுபைருக்கோ எதிராக ஒன்றையும் செய்ய முடியவில்லை.

ஏன்? என்றால் ரிசாத் பதியுதீனின் மாயக் கட்சி இப்படியான சம்பந்தமில்லாத பங்காளிகளைக் கொண்டது. இப்போதும் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

நிலவரம் இப்படியிருக்க, சுயாதீனமாக நின்றிருந்தாலும் வென்றிருக்கக் கூடிய பாயிசின் புண்ணியத்தால் ஹக்கீமுக்குக் கிடைத்த ரிசாதுக்கு கிடைக்காமல் போய் விட்டது. வெள்ளம் வந்த முதல் நாளே பாயிசின் நடவடிக்கையால் கட்சியும் கட்சித் தலைமையும் பின்நாளில் சென்றாலும் ‘பிணம் தேடியா ஓய் வாறிங்க’ என்று கேட்காமல் விட்டுவிட்டது திருவாளர் பொதுசனம். ஆனால் பாயிசுக்கு கொடுக்கும் விலை அதிகம் என்ற கவலை ரிசாத் பதியுதீனுக்கு நிறையவே இருக்கிறது. அதனால, அதன் முடிவும் விரைவில் தெரிய வரும் என்று நம்பலாம்.

தம்பி ரிப்கான் பதியுதீனின் முகத்தையும் வெள்ளத் தண்ணீரில் கழுவிக் காட்ட ரிசாத் பதியுதீனின் நிரம்பி வழியும் வங்கிக் கணக்கு பதம் பார்க்கப்பட்டு விட்டது, ஆனாலும் முதலீடுகளைச் செய்ய ரிசாத் தயங்காததல் இந்தத் தடவையும் நம்பி முதலீடு செய்துள்ளார். கைகொடுக்கும் என்று அவர் நம்புகிறார், ஆனால் இந்த நாடகங்கள் கலையும் நாளும் வெகு தூரத்தில் இல்லையென்பது கசப்பான உண்மை.

இப்போதைக்கு, எவ்வளவு கொட்டினாலும் நனையாத அல்லது நனைந்ததென்று நினைத்தால் நஷ்டப்பட்டு விடுவோம் என ‘ரோச’ நரம்பைப் பற்றிக் கவலைப்படாது ரவுப் ஹக்கீம் வாங்கிக் கட்டினார், பாயிசால் ரிசாத் தப்பினார். ஆனால், ரிசாத் பதியுதீன் விலைக்கு வாங்கும் புதிய நண்பர்களால் பழைய நண்பர்கள் வெளியேறும் போது, குறிப்பாக பாயிஸ் இல்லாமல் அடுத்த தடவை கொழும்பில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடமொன்றில் ரிசாத் பதியுதீனும் வாங்கிக் கட்டி கணக்கைச் சமப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

அ.நவாஸ்

SHARE