ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தக்கவைத்துக்கொள்ளுங்கள்: சுமந்திரன்

263

 

ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தக்கவைத்துக்கொள்ளுங்கள்: சுமந்திரன்

Sumanthiran01

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே செயற்பட்டு வரும் நிலையில், அதற்கு பாதகமான வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பில், வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”உலக வங்கியினால் முக்கிய நகரங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் யாழ்.நகரம் தெரிவுசெய்யப்பட்டு, துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்த இன்றைய கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமாக அமைந்திருந்தது.

எனினும், இவ்வாறான கூட்டத்தினை நடாத்துவதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ள காரணத்தினால், நேரடியாக தலையிட்டு எதையும் செய்யப் போவதில்லையென வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

தற்போது, யாழ்ப்பாணத்தில் எவ்வாறான அபிவிருத்திகளை செய்ய வேண்டுமென்ற சட்டம் கிடையாது. ஆனால், குறித்த அபிவிருத்தி திட்டத்தினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென ஆராய, குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு துரிதமாக ஒன்றுகூடி, அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும்.

– See more at: http://www.jvpnews.com/srilanka/164960.html#sthash.aBN8RgVX.dpuf

SHARE