வவுனியா நீர்பாசனத் திணைக்களத்தில் தகராறு.- பொறியிலாளரின் அலுவலகம் இழுத்து மூடல்.

309

இன்று காலை 9.00 மணியளவில் தனது கடமைகளைச் செய்வதற்காக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றபொழுது அவருடைய அலுவலகம் நீர்பாசனப் பணிப்பாளர் அவர்களால் இழுத்துமூடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவருடைய வாகனமும், வாகனத்தின் திறப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்பொறியிலாளரின் கீழ் முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றி வந்துள்ளனர். பணிப்பாளருடைய மோசடி தொடர்பிலும், இத் திணைக்களத்தில் பணிபுரிபவர்களுடன் தகாத தூசன வார்த்தைப் பிரயோகங்களாளும் பேசியதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். மது போதையில் மேல்மாடியில் கும்மாளம் அடிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஏற்கனவே இந்த பொறியிலாளர் கடமையை ஏற்று ஆறு மாதங்கள் தான் அதற்கிடையில் இவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தது ஏன் என்ற கேள்வியையும் இவர்கள் எழுப்பியுள்ளனர். அதே நேரம் பொறியிலாளரின் மாற்றம் தொடர்பில் நாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். நீர்ப்பாசனப் பணிப்பாளரும், பொறியிலாளரும் இன்று பொலிசாரினால் விசாரணை செய்யப்பட்டு முறைப்பாடு பதிவு செய்ததன் பின் அவர்களது கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

000 888 999
ஆனால் பொறியிலாளரின் அலுவலகம் மூடப்பட்ட நிலமையிலேயே இருந்தது இவ்விடயம் தொடர்பில் பொறியிலாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது என்ன குற்றம் கண்டு என்னை இடமாற்றம் செய்வித்தார்? நீர்பாசனப் பணிப்பாளருடைய ஊழல் விவகாரங்கள் அங்கு பணிபுரியும் அணைவருக்கும் தெரியும். என்னுடைய நிர்வாகம் பற்றி இங்கு பணிபுரிகின்ற நற்பத்தைந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை விசாரித்துப் பார்க்கலாம்.
எனது கடமைகளைச் செய்ய நீர்ப்பாசப் பணிப்பாளர் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றார். எனக்கு மாற்றம் வந்துள்ளது உண்மைதான் ஆனால் எனது பொறுப்பில் உள்ளவற்றை புதிதாக வருகின்ற பொறியிலாளரிடம் உரியமுறையில் கையளித்துவிட்டுச் செல்வதுதான் அரச ஊழியரின் கடமையாகும். திடீரென பணிப்பாளர் இவ்வாறு நடந்துகொண்டமையானது அங்கு பணிபுரிகின்ற ஏனைய ஊழியர்களையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறு பொறியிலாளர் எஸ்.சத்தியரூபன் தெரிவித்தார். பொறியிலாளரை மாற்றம் செய்யக்கூடாது என்று 14.06.2016 அன்று வவுனியாவில் பணிபுரிகின்ற 28 அங்கத்தவர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதியின் செயலாளர் நீர்ப்பாசன அமைச்சர், ஆணையாளர், மாவட்ட செயலாளர், வவுனியா ஆகியோருக்கும் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் நீர்ப்பாசனப் பணிப்பாளரிடம் கேட்டபொழுது தனது பணிகளுக்கு இந்த பொறியிலாளர் இடையூறாக இருப்பதாகவும், ஊழியர்களை தனது சொல்கேட்டு நடக்கவிடாது தன்னைத் தரக்குறைவாக பார்க்கும் வகையில் செயல்காரியங்களில் ஈடுபடுவதாகவும், இவர் மனோநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எனவும், தன்னை அலுவலகப் பணிமணைக்குள் தாக்கமுற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் பணிப்பாளரைத் தாக்க முற்படவில்லையென பொறியிலாளர் தெரிவித்தார். தனது அலுவலகம் மூடப்பட்டுள்ள நிலையில் இதனுடைய திறப்பு எங்கே என அவரது அலுவலகம் சென்று கேட்டபொழுது… உமக்கு இனி இங்கு வேலை இல்லை. நீர் கொழும்புக்கு போம் அங்கு நல்லா வாட்டி எடுப்பார்கள் என்று கூறியபோதே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
கையெழுத்து வைத்த 28 அங்கத்தவர்களையும் தரக்குறைவான தூசன வார்த்தைகளால் இந்தப் பணிப்பாளர் பேசியுள்ளார். ஒரு அலுவலகப் பணிப்பாளரும் அதன் பொறியிலாளரும் மிகப் பொறுப்பு வாய்ந்தவர்களாக மக்களை வழிநடத்தவேண்டியவர்கள். ஒரு பணிப்பாளர் இவ்வாறு நடந்து கொள்வதோ, ஒரு பொறியிலாளர் இவ்வாறு நடந்து கொள்வதோ ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. எந்தவகையிலும் பொறியிலாளர் பற்றி நீர்பாசனத் திணைக்களத்தில் எந்தவொரு நபரும் அவரை மோசமானவர் என்று குறிப்பிடவில்லை. ஆனால் பணிப்பாளரை மிகவும் மோசமானவர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனுடைய ஒலிவடிவத்தை அவணப்படுத்தியுள்ளோம். இப்பிரச்சிணைக்கான தீர்வு கிடைக்கவேண்டும் என்று வவுனியா நீர்ப்பாசனத் திணைக்களப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

SHARE