யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள வெறியாட்டிடம் -நடந்தது ,பின்னணி

294

 

palkalai0

அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள ஆதிக்க போக்கு காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் கல்வியை முழுமையாக கற்க முயவில்லை எனவும் இதை வெளிப்படுத்த கடந்த கால அனுபவங்கள் தடையாக உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்திகள் குறிப்பிடுகின்றன

இன ரீதியான மத ரீதியான சடங்குகளை சிங்கள மாணவர்கள் முன்னிலைப்படுத்துவதாகவும் தமது ஆதிக்கத்தின் கீழ் பலக்லைக்கழக செயற்பாடுகளை மாற்ற முயற்சிப்பதாகவும் இதற்கு சிங்கள புலனாய்வுத்துறையினர் பாரிய ஒத்துழைப்பையும் பின்புலத்தையும் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இன்று விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகள் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் கடந்த காலம் முழுவதிலும் கொண்டாடப்பட்டத்தைப் போல இம்முறையும் கொண்டாட மாணவ தலைமைப்பீடம் முடிவெடுத்திருந்த நிலையில் சிங்கள மாணவர்கள் தமது கண்டிய நடனத்தையும் இம்முறை முன்னிலைப்படுத்த வேண்டும் என இன ரீதியான கலையை முன்னிலைப்படுத்தினர் .இதனால் உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியாத நிகழ்சசி ஏற்பாடடாளர்கள் அதை அப்போதைக்கு அல்லது இம்முறை நிராகரிக்க அங்கிருந்து தொடங்கியது இந்த பிரச்ச்சினை
கண்டிய நடனத்தை நிராகரித்தால் தமிழ் ரீதியான அதாவது வழமையான நிகழ்வுகளையும் நீற்றாகைக்க வேண்டும் என சிங்கள மாணவர்கள் கடும் எதிர்ப்பை காட்டினார் .ஓரளவு சமாதான நிலையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படடாலும் பிரதான மண்டபத்தில் கூடியிருந்த தமிழ் மாணவர்கள் வளமை போல் தமது குத்தாடடத்தை தொடங்கினர் இதனால் கடுப்பாகிய சிங்கள மாணவர்கள் தமது கண்டிய நடனத்தை அரங்கேற்றியமையால் அது சிங்கள தமிழ் பாகுபாடு இன வெறி என்பதையும் தமது ஆதிக்க போக்கினை அல்லது அதிகார போக்கினை காட்டுவதாக உணர்த்தியது அதன் விளைவு கைகலப்பில் முடிந்தது

கைகலப்பில் எல்லா பீட மாணவர்களும் கலந்து கொண்டாலும் கடந்த கால அனுபவங்கள் தமிழ் மாணவர்களின் கைகளை கட்டிபோட்ட்து என்றுதான் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர் .அது மட்டுமன்றி 18 மாணவர்கள் காயப்பட்டனர் இதில் 14 பேர் தமிழ் மாணவர்கள் 4 சிங்கள மாணவர்கள் ஆனால் தமிழ் மாணவர்கள் யாருமே வைத்திய சாலையில் அனுமதிக்கப்படவில்லை ஆனால் சிங்கள மாணவர்கள் 4 பெரும் வைத்தியசாலைக்கு சென்று தம்மை தாமே அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகின்றன

இது ஒரு புறமிருக்க இப்போது அங்கே கைகலப்பில் அல்லது வாய்த்தர்க்கத்தில் சிங்கள மாணவர்களுக்கு எதிராக செயற்படட மாணவர்களை சிங்கள புலனாய்வுத்துறையினர் தேடித்தேடி காய்த்து செய்வதாகவும் மிரட்டுவதாகவும் மற்றைய தமிழ் மாணவர்களின் விபரங்களை சேகரிப்பதாகவும் மாணவர் வட்ட்ங்கள் தெரிவிப்பதோடு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது .

சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அறியரட்ணம் அவர்கள் விஞ்ஞான பீடம் காலவரையறை இன்றி போடடப்படுவதாகவும் சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

மாணவர்களது கல்வி நடவடிக்கைகளிலும் அவர்களது பிரச்ச்சினைகளிலும் அரசியல் தலையீடுகளை புலனாய்வுத்துறையினரின் செயற்பாடுகளும் நாட்டினை நல்ல போக்கில் இட்டுச்செல்லாது இதை அறிந்து பொறுப்புடன் செயற்படவேண் டியது அனைவரினதும் கடமையாகும்

SHARE