நிர்ணய விலையான 495 ரூபாய்க்கு ஒரு கிலோ கோழி விற்பனை செய்யமுடியாது என அட்டன் நகரிலுள்ள கோழி விற்பனை நிலைய உரிமையாளர்கள்

296

 

நிர்ணய விலையான 495 ரூபாய்க்கு ஒரு கிலோ கோழி விற்பனை செய்யமுடியாது என அட்டன் நகரிலுள்ள  கோழி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்

51d4147b-fa0b-4723-a501-b7942e29c99c - Copy 8f34a110-2281-4e79-ad5e-2cd049d11441 - Copy

அரசங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதையடுத்து கோழி விற்பனைக்கான நிர்ணய விலையையும் அரசாங்கத்தினால் வெளியிட்டதையடுத்து அட்டன் பிரதேசத்திலுள்ள கோழி விற்பைனையாளர்கள்   கடையடைப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்
>
ஆர்பாட்டமானது மஸ்கெளியா பொகவந்தலா நோர்வூட் அட்டன் பகுதிகளை சேர்ந்த 100 மேற்பட்ட விற்பனை நிலையங்கள் 18.07.2016 திங்கட்கிழமை  மூடப்பட்டு தமது அதிர்ப்தியை வெளியிட்டனர்
>
>கோழி விற்பனை நிலைய உரிமையாளர்கள்  அட்டன் சந்தை பகுதியில் கவயீர்ப்பு கூட்டமொன்றெ நடத்தி கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் கோழி பண்ணைகளிலிருந்து 90 ரூபாய்க்கு கோழி குஞ்சுகளை பெற்றோம் தற்போது 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது அதே போல கோழிக்கான உணவு விலையும் அதிகரித்துள்ளது
கம்பளை .கண்டி .பகுதிகளில் இருந்தே உயிர்கோழிகளை கொண்டுவந்து உரித்து சுத்தம் செய்து விற்பனை செய்கின்றோம் அவ்வாறு செய்யும் போது 520 ரூபாய் வரை செலவாகின்றது அதே போல கடைகூழி மின்கட்டனம் வேலையாட்களுக்கான சம்பளம் போன்ற செலவுகளும் உள்ள நிலையில் 580 ரூபாய் விலையிலேயே 1 கிலோ கோழியை விற்பனை செய்ய வேண்டியுள்ளது
>
தற்போது  நிர்ணய விலையில் கோழி விற்பனை செய்ய முடியாது எனவே    கோழி பண்ணையாளர்களிடமிருந்து குறைந்த விலையில்  உயிர்கோழி.கோழிகுஞ்சு.உணவுவகைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் பண்ணையாளர்களுக்கான சலுகைகளை வழங்கி குறைந்த விலையில் எம்க்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும்  பட்சத்தில் எம்மால் 495 ரூபாய் அரச நிர்ணய விலைக்கு விற்பனை செய்யமுடியும் என தெரிவித்தனர்

SHARE