மக்கள் சேவையை மறந்த வவுனியா நகர சபை -லஞ்ச ஊழல்ஆணைக்குழுவில் பா .உ .சிவமோகன் வழக்கு தாக்கல்

336

 

வவுனியா நகரசபை பணிப்பாளர் தர்மேந்திரா மற்றும் திட்டமிடல்பணிப்பாளர் திருமதி ஜெ .சுரேந்தி மீதும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்வழக்கு தாக்கல்

UC

வவுனியா நகர சபையில் திடடமிடல் பணிப்பாளராக பணி புரியும் திருமதிஜெ .சுரேந்தி  மீதும் வவுனியா  நகரசபை செயலாளராக பணிபுரியும் திருதர்மேந்திரா  மீதும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இலஞ்சஊழல் ஆணைக்குழுவில் நேரடியாக லஞ்ச ஊழல் முயற்சிக்கான அதிகாரதுஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

வவுனியா நகரசபையில் வர்த்தக நோக்குடனோ அல்லது  சுயத்தேவைநோக்குடனோ கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிகள் கோரப்படுகின்றபொழுது அதற்கான ஆவணங்கள் முழுவதுமாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் கட்டிட நிர்மாணத்திற்கான அனுமதிகளோ முறைப்படியானஆலோசனைகளோ  வவுனியா நகரசபையினால் வழங்கப்படுவதில்லை .

 

இதனால் வவுனியா நகரம்  வர்த்தக ரீதியில் அபிவிருத்திஅடைவதென்பது ஆமை வேகத்தில் கூட நகர்வதில்லை  .இந்த நகரசபையில் குறிப்பிடட சில அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் நாட்டின்அபிவிருத்தி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத பின்தங்கிய நிலைவவுனியா நகரத்தில்  ஏற்பட்டுள்ளது .

 

கட்டிட அனுமதிக்காக விண்ணப்பித்து 2 வருடங்கள் தாண்டியநிலையிலும் இன்னமும் நகர சபை எந்த ஒரு அனுமதியையும்வழங்காமையினால்  வவுனியா நகரத்தில் முதலீடுகளை செய்ய முன்வந்த வவுனியா வர்த்தகர்கள் கட்டிட நிர்மாணத்திற்காக கடனாக  வாங்கியபணத்திற்கு வட்டி கட்டிட முடியாமலும் எந்தவொரு முன்னேற்றமும்இல்லாமல் பணத்தை இழக்கும் நிலையை இந்த வவுனியா நகரசபையில்முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் சிலரால்ஏற்படுத்தப்பட்டுள்ளது .

 

இதில் பொறுப்புக்கூற வேண்டிய   திருமதி ஜெ .சுரேந்தி மற்றும் திருதர்மேந்திராஆகிய  இருவரின் மெத்தனப்போக்கு மக்களை வெகுவாய்பாதிப்பதுடன் வவுனியா அபிவிருத்திக்கு தடையாக இருப்பதனாலும் அதுபெரும் கவலையை தந்ததாக அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாகவேவவுனியா நகர சபையில் அதிகார பொறுப்பில் இருக்கும் இந்த  இருவர்மீதும் வழக்கு தாக்கல் செய்ய நேர்ந்தது  என தெரிவித்தார்.

 

 

வவுனியா வர்த்தகர்கள் வட்டிக்கு வாங்கிய பணத்தை சொத்துக்கள்பொருட்களுக்கு முதலீடு செய்யாமல் வைத்திருப்பதனால் பாரியகடனாளிகளாக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நகர சபையை மதிக்காதசூழ்நிலையும் தோன்றியுள்ளது. மக்கள் சட் டங்களை  மீறுகின்ற போதுஅதற்கு பொறுப்பற்ற  அதிகாரிகளும் காரணாமாக அமையலாம் .வவுனியாநகரசபையின் செயற்பாடுகள் பொதுமக்களிடத்து நகரசபை சட் டங்களை  மீறும் நிலையை தோற்றுவிக்க வாய்ப்பளிக்கிறது

 

 

பொது  மக்கள் வங்கியில் கடன்பெற்றோ வட்டிக்கு கடன் வாங்கியோதமக்கு ஒரு மலசலகூடத்தை விரைந்து  அமைக்கவோ வீட்டினை கட்டிமுடிக்கவோ மதிலைனை அமைக்கவோ குறைந்தது 2 வருடங்கள் நகரசபை அனுமதிக்காக காத்திருக்கும் நிலை வவுனியாவில் நகரசபையினால் உருவாக்கப்பட்டுள்ளது என பொதுமக்களும்முறைப்பாடுகளை தெரிவிக்கின்றனர்.

 

நகரசபையின் இந்த அசமந்தப்போக்கினால் வேறு சில வேற்றிடத்துவர்த்தகர்கள் வவுனியாவில் தம் அரசியல் செல்வாக்கை வைத்துகட்டிடங்கள் அமைத்து வர்த்தகம் செய்யும் நிலையை தோற்றுவிக்கலாம்என  வவுனியா வர்த்தகர்களால் அச்சம் வெளியிடப்பட பின்னரே தானும்நகரசபையின் அசமந்த போக்கினை நேரடியாக அனுபவித்தவன் என்றரீதியிலும் ஒட்டு மொத்த   வவுனியா மக்கள் சார்பில் லஞ்ச ஊழல்ஆணைக்குழுவில் வழக்கு தாக்கல் ஒன்றை செய்துள்ளேன் எனவிளக்கமழித்தார்.

 

விரைவில் அவரது வழக்குத்தாக்கல்  பரிசீலிக்கப்பட்டு விசாரணைகளுக்குஉற்படுத்தப்பட்டு நகர சபையில் வவுனியா அபிவிருத்திக்கு தடையாகஇருக்கும் சில அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுநல்லதீர்வு ஒன்று   எமது வவுனியா மக்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கைஎனக்கு அதிகமாகவே உள்ளது  என்றார்.

 

SHARE