இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் ஆராயவுள்ளனர்.

491

யாழ்ப்பாணத்திற்கு சென்ற  தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர்.
விஷேட உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு இன்றைய தினம் காலை தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
download (3)
சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த சமயம் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோசவிற்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ரமபோச வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி  உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலை நடாத்தவுள்ளார். இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்து இன்றைய தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

நேற்று இலங்கைக்கு வருகைதந்த ரமபோச தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தார்.

Duck012_CI

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் ஆராயவுள்ளனர்.

இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.

SHARE