சட்ட திருத்தங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை : ஜனாதிபதி

246

 

சட்டதிட்டங்களை தளர்வுக்குட்படுத்தி மேற்கொள்ளப்படும் எவ்வித சட்ட திருத்தங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி,

maithry1

தற்போது நடைமுறையிலுள்ள சுங்க சட்டத்தையும் முன்மொழியப்பட்டுள்ள புதிய சுங்க சட்டத்தையும் முறையாக ஆய்வு செய்து எதிர்வரும் மூன்று வாரங்களில் நிதி அமைச்சு மற்றும் சுங்கத்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டார்.

புதிய சுங்க சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சுங்க அதரிகாரிகள் சங்கத்தினருக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

புதிய சுங்க சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல விடயங்கள் வெளிநாடுகளின் சுங்க சட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையினால் அவை இலங்கைக்கு பொருந்தாதவை என இதன்போது சுங்க அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த சுங்க அதிகாரிகள் சங்கத்தனர் அதற்காக தாம் முழுமையான பகங்களிப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

இக்கலந்துரையாடலில் சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் யூ எ என் ஆர் உடுவில உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

SHARE