கொக்கிளாயில் வாடி அமைக்கும் பணியில் தமிழ் மீனவர்கள்.

305

 

மீனவர்களின் அழைப்பின் பேரில் வாடி அமைக்கும் இடத்திற்கு ரவிகரன் அவர்கள் உடன் சென்று அம்மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

0fc4b130-34d4-4362-ac12-2a6d66006a01 3e61176c-699a-4d03-9e58-90fcc1bb386b 9c22a64e-7aa1-4fd9-8803-e9956fdc3bf4

கடந்த 2016.07.18 ஆம்திகதி கொக்கிளாயில் தமிழ் மீனவர்களுக்கான இறங்கு துறையாக தீர்மானிக்கப்பட்ட இடத்தில் வாடி அமைக்கும் பணியில் தமிழ்மீனவர்கள் ஈடுபட்டபோது சிங்கள மீனவர்களின் நெருக்கடிகளினால் திரும்ப வேண்டிய நிலை இருந்தது.

பின்பு 20ஆம் திகதி வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களோடு கலந்துரையாடிய கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் அவர்கள் தமிழ் மீனவர்களுக்கான இறங்கு துறை அனுமதிப்பத்திரம் வழங்கியிருந்தார்.

இதன்படி இன்று 2016.07.22ஆம் திகதி முற்பகல் பத்து மணியளவில் தமிழ் மீனவர்கள் கொக்கிளாயில் தமக்காக ஒதுக்கப்பட்ட காணியில் வாடி அமைக்கும் பணியினை ஆரம்பித்ததோடு, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களயும் அங்கு அழைத்திருந்தனர்.

குறித்த இடத்திற்கு சென்ற ரவிகரன் அவர்கள் அந்த மீனவர்களோடு கலந்துரையாடி வாடி அமைக்கும் பணி நிறைவடைந்ததும் அந்த இடத்திலிருந்து திரும்பினார்.

SHARE