இராணுவம் கடத்தியதை மஹிந்த கண்டாரா? காணாமல்போனோர் தொடர்பில் அரசு கேள்வி

336

 

இராணுவம் கடத்தியதை மஹிந்த கண்டாரா? காணாமல்போனோர் தொடர்பில் அரசு கேள்வி
pothumakkal

download (28)யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை இராணுவத்தினர் கடத்திச் சென்றதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டாரா? அல்லது இராணுவம் கடத்தல்களை மேற்கொண்டமையை மஹிந்த ராஜபக்ச அறிந்து வைத்துள்ளாரா? என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்னகேள்வியெழுப்பினார்.

அவ்வாறு இல்லாவிடின் காணாமல் போனோர் பற்றி ஆராயும் நிரந்தர அலுவலகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாக மஹிந்த ராஜபக்ச ஏன் அச்சமடையவேண்டும்?

எமது அரசாங்கம் இந்த அலுவலகத்தை அமைத்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை ஆராயும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்த அலுவலகம் இராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கேள்வியெழுப்பப்பட்டது.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை நிச்சயம் அமைக்கும். அத்துடன் இந்த அலுவலகம் ஊடாக காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உண்மை கண்டறியப்படும்.

காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பது தொடர்பான உண்மை நிலைவரம் அறியப்பட வேண்டும்.

அதற்காக நாங்கள் இந்த அலுவலகத்தை நிறுவி தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

கேள்வி – எனினும் இந்த அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்த்துள்ளாரே ?

பதில் – இந்த அலுவலகம் ஊடாக காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்தினால் எங்கே தாமும் சிக்கி விடுவோம் என மஹிந்த ராஜபக்ச பயப்படுகிறார் போல் தெரிகிறது.

ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் உண்மையை கண்டறிவோம். காணாமல்போனோர் ஒருவேளை உயிரிழந்திருந்தால் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

கேள்வி இந்த அலுவலகத்திற்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்படும் ?

பதில் – தேவையான அதிகாரங்கள் வழங்கப்படும்.கேள்வி மஹிந்த ராஜபக்ஷ ஏன் இதனை எதிர்க்கிறார் ?பதில் அதனை அவரிடம் கேளுங்கள்.

கேள்வி – இந்த அலுவலகம் ஊடாக இராணுவம் காட்டிக் கொடுக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளாரே?

பதில் – யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை இராணுவத்தினர் கடத்திச் சென்றதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டாரா? அல்லது அவர்கள் இராணுவம் கடத்தல்களை மேற்கொண்டமையை மஹிந்த ராஜபக்ச அறிந்து வைத்துள்ளாரா?

அவ்வாறு இல்லாவிடின் காணாமல் போனோர் பற்றி ஆராயும் நிரந்தர அலுவலகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாக மஹிந்த ராஜபக்ச ஏன் அச்சமடையவேண்டும்?

கேள்வி – காணாமல்போனோர் விடயத்தில் ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழு மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவே. அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

பதில் – அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விசாரிக்கின்றோம்.

கேள்வி – லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் முக்கிய இரண்டு அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுகின்றனவே ?

பதில் – குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா?

SHARE