தமிழ் அரசியல் கைதி நிமலரூபனுக்கு நீதி வேண்டி கடந்த நான்கு வருடங்களாக போராடி வந்த நிலையிலேயே அவரது தந்தையார் இன்று காலமானார்.

280

 

வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

mother-4

புற்றுநோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்குக் கிழமை மாலை உயிரிழந்ததார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அகைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான சரவணபவனை 2012 ஆம் ஆண்டு 27 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பதில் கிடைக்காத்தால் சிறைச்சாலை அதிகாரிகள் மூவரை 19மணித்தியாலங்கள் பணயக் கைதிகளாக பிடித்து தடுத்துவைத்திருந்தனர்.

பணயக்கைதிகளை மீட்டெடுக்க 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி இராணுமும்விசேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலையினுள் புகுந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதலில் நிமலரூபன், டில்றுக்சன் ஆகிய தமிழ் அரசியல் கைதிகள் இருவர் உயிரிழந்த்துடன் இருபதிற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், படுகொலைசெய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி நிமலரூபனுக்கு நீதி வேண்டி கடந்த நான்கு வருடங்களாக போராடி வந்த நிலையிலேயே அவரது தந்தையார் இன்று காலமானார்.

SHARE