இரத்தானம் செய்பவர் சமுதாயத்தை வழப்படுத்தும் ஒரு சேவையாளி, வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பாராட்டு

384

 

இரத்த கொடையாளர் தினம் வவுனியா பொது வைத்தியசாலையில் 23.07.2016 அன்று சிறப்புற நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் உரையாற்றுகையில் இரத்த அணுக்கள் தாங்களாகவே உற்பத்தி செய்யும் போது நாம் ஏன் இரத்தம் வழங்க பின்நிற்க வேண்டும் என்றார்.
எவர் ஒருவர் ஓர் ஆத்துமாவை வாழவைக்கின்றாறோ அவர் மக்கள் யாவரையும் வாழவைப்பவர் போலாவார். சுகாதார ஊளியர்களுக்கு கிடைத்தது கடவுள் கொடை. காலை வேலைக்கு சென்றால் மாலை வரை புண்ணியம் செய்யும் தொழில் எனவே அதிகப்படி கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் தொழில். சில நோயாளிகள் எரிச்சலூட்டுவார்கள், ஆனால் நாங்கள் பொறுமை காக்க வேண்டும். தவறினால் புண்ணியத்துக்கு பதில் நாம் பாவத்தை தேடியவர்களாவோம் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் இரத்தானம் செய்பவர் எவர்மேலும் வன்முறை செய்யமாட்டார். அவர் சமுதாயத்தை வளப்படுத்தும் ஒரு பொது சேவையாளி என பாராட்டினார்.
871802a9-1fca-4700-9c57-a6739861390a b7861431-6a64-4576-9180-7693e2a767e0 dbd6f7d5-03da-4712-b035-e1e2a6569398 e67b71d2-17a4-4404-a1f2-ee55033faccc
SHARE