உள்ளுராட்சி வட்டார எல்லை நிர்ணயக் குழுவின் மட்டு.மாவட்டத்துக்கான கலந்துரையாடல்

369

 

 

 

உள்ளுராட்சி வட்டார எல்லை நிர்ணயக் குழுவின் மட்டு.மாவட்டத்துக்கான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 உள்ளுராட்சி சபைகனிளதும் வட்டாரங்களுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆராயுமு; முகமான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (24) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

3e804ed5-94ea-487a-955f-14a2f8303964 57a487fb-d779-4509-8cb5-64595c5469ff 6894c510-94ca-45de-bcbe-0f67bf7acb59

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த உள்ளுராட்சி எல்லைகளை நிர்ணயம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) மாவட்ட ரீதியில் முன்வைக்கப்பட்ட சிபார்சுகள் தொடர்பாக ஆராய்ந்தது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் புள்ளு முல்லவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்தர்வர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட மட்ட எல்லை நிர்ணயக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிபார்சுகளுக்கு அமைய அவற்றை ஆராயும் முகமாக இந்தக் கூட்டம் நடைபெறுவதாக ஆணைக்குழு தெரிவித்தது.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ;.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகவர்கள், புத்திஜீவிகள், சமூகப் ஆர்வளர்கள், சிபார்சுகளை முன்வைத்தவர்களுக்கு எனப் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு கருத்துக்கள் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் நகர் மற்றும் காத்தான்குடி ஆகிய 2 நகர சபைகள், கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று, ஏறாவூர் பற்று, மண்முனைப்பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று, மண்முனை தென் மேற்கு உள்ளிட்ட 9 பிரதேச சபைகள் அடங்கலான 12 உள்ளுராட்சி சபைகள் உள்ளன.

 

SHARE