தமிழ் மக்களுக்கான தீர்வு 2016 இல்லையேல் பிறநாட்டு உதவியுடன் தமிழர் தாயகம் மீட்கப்படும். – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

277

 

தமிழ் மக்களுக்கான தீர்வு 2016 இல்லையேல் பிறநாட்டு உதவியுடன் தமிழர் தாயகம் மீட்கப்படும். – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

 

677_content_tna_h13
காலகாலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்த இலங்கையரசு 21ம் நூற்றாண்டிலும் தமிழினத்தை ஏமாற்ற முடியாது. கடந்தகால தேர்தலின் பொழுதும், தமிழரசுக் கட்சியின் மகாநாட்டின் பொழுதும் மக்கள் மத்தியில் தெளிவான கருத்தை கூறிவந்தேன் அதனையே இன்றும் கூறுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் நான் ஆயுதம் ஏந்திப் பழகியவன் அல்ல ஒரு அகிம்சை வாதி. அகிம்சை ரீதியிலாகவே எனது அணுகுமுறைகள் இருக்கும். ஜனநாயக ரீதியிலான தீர்வுகளையே நான் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க இருக்கின்றேன். என்னைப் பற்றி விமர்சனம் செய்கின்றவர்கள் செய்துகொண்டே இருக்கின்றார்கள். எதிர்க்கட்சிப் பதவியைப் பெற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு சோரம்போய்விட்டதாகக் கூறுகின்றார்கள். சம்பூர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று கூறுகின்றார்கள். வடகிழக்கில் காணிகள் விடுவிக்கப்படவில்லை, காணாமல் போனவர்கள் விடயங்கள், பாலியல் துஷ;பிரயோகங்கள், ஆட்கடத்தல் சம்பவங்கள், இனப்படுகொலைக்கான தீர்வு, அத்துமீறப்படும் சிங்களக் குறியேற்றங்கள், வடகிழக்கில் புதிதாக முளைக்கும் புத்தர் சிலைகள், தமிழ் மக்களுடைய கலை கலாசாரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள், மீள்குடியேற்றப் பிரச்சினை, புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான வேலை வாய்ப்பு இவ்வாறு பல்வேறு விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்படாத பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு தீர்வு காணவேண்டும் என்பதே எனது நீண்டநாள் குறிக்கோள். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் ஜனநாயக செயற்பாட்டில் எமது செயற்பாடுகளைச் செய்யமுடியாமல் போனது. ஆனால் தற்பொழுது அதற்கான சந்தர்ப்பாங்கள் வெகுவாரியாக உள்ளது. வடகிழக்கில் தமிழ் மக்கள் தம்மைத தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை ஆட்சியினைப் பெற்றுக்கொடுப்போம். இதன் பேறு தியாக மனப்பாங்குடன் இந்த நாட்டுக்காக எத்தனையோ உயிர்கள் மாய்ந்துபோயின. அரசாங்கம் கூறிக்கொள்ளும் எல்லா விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. எதிர்க்கட்சிப் பதவியினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது என்பது உலக வரலாற்றில் எழுதப்படவேண்டியதொன்று. சிங்களவர் தொடர்ந்தும் எதிர்க்கட்சியாக இருக்க தமிழர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதில்லை. ஆகவே கிடைத்த வாய்ப்பினை நாம் தவறவிடக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு தான் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. பூகோள அரசியலை வைத்து எமது அரசியல் பயணத்தை நகர்த்தவேண்டியுள்ளது. சர்வதேச நாடுகள் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடக்கியதென்பது நீங்கள் யாவரும் அறிந்ததே. தமிழ் மக்களுக்கானத் தீர்வு வழங்கப்படும் வரையிலும், ஒரு தமிழன் இந்த மண்ணில் வாழ்ந்தாலும் ஜனநாயக ரீதியிலான தமிழ் மக்களுக்கான தீர்வினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொடுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை.

SHARE