தமிழினத்தைக் கூறுபோடவும்,மைத்திரி- ரணிலின் கூட்டாட்சியைக் கவிழ்;க்கவுமே மஹிந்தவின் பாதயாத்திரை

281

 

தமிழினத்தைக் கூறுபோடவும்,மைத்திரி- ரணிலின் கூட்டாட்சியைக் கவிழ்;க்கவுமேமஹிந்தவின் பாதயாத்திரை

download mahinda Mahinda-may-day-02 mahinda-team-election-720x480 paatha_yaathra-2nd_day_unsuccessful
தமிழினப் படுகொலையைமேற்கொண்டமஹிந்த ராஜபக்ஷவும்,அவருடையசகாக்களும் தமிழினத்திற்குவழங்கப்படும் சர்வதேசசலுகைகளைச்சகித்துக்கொள்ளமுடியாதநிலையிலும்,அவருடையஆட்சிதமிழ்பேசும் மக்களினால் கவிழ்க்கப்பட்டநிலையிலும்,மஹிந்த ராஜப்கஷவினுடையபரம்பரைஆட்சி இனிமேல் இலங்கைத்தீவில் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதனால் இதனைத் திசைதிருப்பும் நோக்கத்கோடுமஹிந்த ராஜபக்ஷஅவர்கள் தனதுபாதயாத்திரைகளையும்,போராட்டங்களையும் கட்டவீழ்த்துவிட்டுள்ளார். குறிப்பாக 2001ம் ஆண்டு – 2014ம் ஆண்டுவரைமஹிந்த ராஜபக்ஷவினுடையசர்வாதிகாரஆட்சியே இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. பரம்பரைபரம்பரையாகஆட்சியைமேற்கொண்டுவந்தசிங்களவர்கள் தமிழ் மக்களுக்கானஎந்தவொருதீர்வுத்திட்டத்திலும் நேர்த்தியாகச் செயற்படவில்லை. கிழித்தெறியப்பட்டபண்டா-செல்வாஒப்பந்தம், இலங்கை-இந்தியஒப்பந்தம்,சிறிமாவோஒப்பந்தம்,சந்திரிக்காவினுடையஒப்பந்தம்,ரணில் விக்ரமசிங்காவுடனானஉடன்பாடுஎனதிம்புவில் ஆரம்பிக்கப்பட்டுடோக்கியோவரையானபேச்சுவார்தைகள் வரைசமாதானத்திற்கானசெயற்திட்டங்கள் கொண்டுசெல்லப்பட்டது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நோர்வேயினுடைய மஸ்தியஸ்தமும் கைநழுவிப்போனது. சர்வதேசநாடுகளின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷஅரசுதமிழீழவிடுதலைப்புலிகளின் போராட்டத்திற்குமுற்றுப்புற்றிவைத்தது. முப்பதுவருடங்கள் முடித்துவைக்கமுடியாதபோரைமுடித்துவிட்டதாகஏப்பம்விட்டமஹிந்த ராஜபக்ஷ,தனதுபரம்பரைஆட்சியை இந்தநாட்டில் நிலைநிறுத்தமுடியும் என்றசவாலோடுதனதுஅரசியல் காய்நகர்த்தல்களைமேற்கொள்ளத்தொடங்கினார். இராணுவப் படைக்குத் தலைமைதாங்கியசரத்பொன்சேகாவைவைத்துப்போரைமுற்றுகைக்குக்கொண்டுவந்தமஹிந்தஅதன் பின்னர் இராணுவத் தளபதியையும்,அவருக்குவிசுவாசமற்றவர்களையும் பதவியிலிருந்துவிலக்கிஒருசிலரைசிறைக்கும்,ஒருசிலரைவீட்டுக்கும்,ஒருசிலரைவெளிநாட்டுக்கும் அனுப்பிவைத்தார்.

13686585_1795077927396367_8660431146607770243_n 13873214_1795078117396348_4568742938393286820_n 13882676_1765090360440551_3863721062881836569_n 13886999_1795077854063041_2835990993301045228_n 13895257_1795077847396375_5918910737027921748_n 13903212_1795077997396360_1780151981096647429_n 13906821_1795078077396352_6642020148355271760_n

ஒருசிலர் மண்ணோடுமண்ணாகப் புதைக்கப்பட்டனர். இராணுவத்திலிருந்துதப்பியோடியநான்காயிரம் பேர்,அதனைவிடநாட்டைவிடுதலைப்புலிகளிடம் இருந்துமீட்டெடுத்த இராணுவவிசேடபடையணியின் கொமான்டோக்களின் தலைவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவினால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2011, 2012ம் ஆண்டுகாலப்பகுதியில் சரத்பொன்சேகாவினுடையசிறப்புக் கொமான்டோக்கள் 80பேரையும்,விசேடகாலாற்படையணியைச் சேர்ந்த 500பேரும் அதனைவிடதப்பியோடியதாகக் கூறப்பட்டநான்காயிரம் இராணுவத்தினருமாக இக்காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
சிறைச்சாலையில் இருக்கின்றபொழுதேமஹிந்தவினுடையஆட்சிகவிழ்க்கப்படும் என இந்த இராணுவக்கைதிகள் அனைவரும் வெலிக்கடைவளாகத்திற்குள்லிருந்தவாறுபேசிக்கொண்டிருந்தனர். வெலிக்கடைவளாகத்தினுள் பன்சலைவார்ட்,சப்பல்,கோவில் வார்ட்டுக்குப் பின்புறம் இந்தஇராணுவக்கைதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் தற்பொழுதுபலர் விடுதலையாகிவீடுசென்றுவிட்டனர். இந்த இராணுவவீரர்கள் மைத்திரியினுடையநல்லாட்சியில் மீண்டும் இணைந்துமஹிந்தவினுடையகுடும்பத்திற்குஎதிராகச்செயற்பட்டுவருகின்றனர். நாட்டுக்காகப்போராடிய இந்த இராணுவத் தளபதிகளுள் சரத்பொன்சேகாவும் உள்ளடக்கப்படுகின்றார். இதிலும் குறிப்பாக 100நாள் வேலைத்திட்டமெனக் கூறிக்கொண்டுமஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்தமைத்திரி,ரணிலின் கூட்டாட்சியானது நூற்றுக்குபதினைந்துவீதமானவேலைத்திட்டங்களைக் கூட இன்னமும் பூர்த்திசெய்யவில்லை. இவ்விடயம் குறித்துவினவினால்மஹிந்த ராஜபக்ஷஅவர்கள் உலகநாடுகளிடம் பெற்றக் கடனைத் திருப்பிச்செலுத்தவேண்டும்; என இக்கூட்டரசாங்கம் கூறிவருகின்றது. தற்பொழுதுநாட்டில் வரிஅதிகரித்துள்ளது. இதனைச்சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டமுன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ,மைத்திரி-ரணில் கூட்டாட்சிக்குஎதிராகச்செயற்படஆரம்பித்துஅதுபாரியளவில் வெடித்து இன்றுகண்டியிலிருந்துகொழும்புவரையிலானபாதயாத்திரைக்குவழியமைத்துள்ளது.
சிங்களப் பேரினவாதிகளுடையபாதயாத்திரையினால் தமிழ் மக்களுக்குஏதாவதுநன்மைகிடைக்கப்போகின்றதா? என்றால் எதுவுமேயில்லைஎனலாம்.இங்கேஒருவிடயம் மூடிமறைக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கானத்தீர்வுத்திட்டம், இனப்படுகொலையெனசர்வதேசமட்டத்தில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்இந்நிலையில் இதனைக்குழப்பும் நோக்கில் ஒருசிலசிங்களப் பேரினவாதக் கட்சிகளைதனக்குச் சாதகமாகப்பயன்படுத்தியுள்ளனர்மஹிந்தவும்,அவரதுஆதரவாளர்களும். இதேபோன்றேதமிழ்த்தரப்பையும் மோதவிட்டுமுப்பதுவருடகாலமாகமாறிமாறிவந்தஅரசாங்கங்கள் வேடிக்கைபார்த்துவந்தன. தற்பொழுதும் சிங்களப் பேரினவாதிகள் இரு தரப்பாகசண்டைப்பிடிக்கின்றபொழுதுநாமும் வேடிக்கைப்பார்க்கவேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றோம். 1990க்கு முற்பட்ட-பிற்பட்டகாலத்திலும் தென்னிலங்கையில் ஜேவிபிக்குஎதிராகவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. ஜேவிபிஉறுப்பினர்கள் பலர் டயர் போட்டுகொழுத்தப்பட்டிருந்தனர். இந்தசம்பவத்தைநிகழ்த்தியதுயூஎன்பிஅரசாங்கமே. ஜேவிபியினரைக் கைதுசெய்துசித்திரவதைசெய்வதற்காகவேபிரத்தியேகமாககளுத்துரைசிறைச்சாலைஉருவாக்கப்பட்டது. இது முழுமையாகத் தற்பொழுதும் பொலிஸ் இராணுவச் சிறைச்சாலையாககாணப்பட்டுவருகின்றது. இங்கு 40 அறைகள் மிகக்கொடூரமானமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிறைச்சாலைவளாகத்துக்குள் பலர் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கின்றார்கள். இச்சிறைச்சாலைவளாகத்தினுள் அனுமதியின்றிசிறுகிடங்கினைக்கூட ஏற்படுத்தமுடியாது. பெண்களுக்குத் தனியாகவும்,ஆண்களுக்குத் தனியாவும் நான்குபிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் நான்காம்மாடியிலிருந்து மூன்றுமாதங்கள்,ஆறு மாதங்கள்,ஒன்றரைவருடங்கள் Pவுஐஎன்றசொற்பதத்தின் கீழ் இரண்டரைவருடங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்;.மீண்டும் ஒரு ஜேவிபிகலவரத்தைப்போன்றுகலவரத்தைஉருவாக்குவதேமஹிந்த ராஜபக்ஷவின் இரகசியத் திட்டமாகும். தனதுஆட்சிஅதிகாரத்தின் பொழுது முஸ்லீம் இனத்தை கூண்டோடுஅழிக்கும் செயல் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷஅவர்கள் களமிறங்கியிருந்தார். இதற்குஆதரவாகசிங்களபேரினவாதக் கட்சியானபொதுபலசேனாவைப் பயன்படுத்தினார். இவர்கள் முஸ்லீம்களுக்குஎதிரானஅராஜகத்தைஅக்காலகட்டத்தில் கட்டவீழ்த்துவிட்டிருந்தனர். குறிப்பாகதம்புள்ளபள்ளிவாசல்,தர்க்கா முஸ்லீம் மக்களுக்கெதிரானகைகலப்பு,வெள்ளவத்தைப் பள்ளிவாசல்,அனுராதபுரம் பள்ளிவாசல் உடைப்பு,கண்டிப் பள்ளிவாசல் மீதுகல் வீச்சுஎனபலநாசகாரசெயல்களில் ஈடுபட்டனர். முஸ்லீம்களால் தனக்குஆபத்துவரும் என்பதைஅறிந்துகொண்டமஹிந்த ராஜபக்ஷஅவர்கள் முஸ்லீம் அமைச்சர்களைதனதுஎடுபிடிவேலையாட்களாகவைத்திருந்தார்,அமைச்சர் ரிஷாட்,ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லா,அதாவுல்லா, அஸ்வர்,அலவிமௌலானாஎனஇன்னும் பல முஸ்லீம் அரசியல் பிரமுகர்கள் இவரோடுஒட்டிஉறவாடினர். தமிழின இனப்படுகொலையினைநிறைவுசெய்தகையுடன்முஸ்லீம் மக்களையும் அழித்தொழிக்கும்நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டார்.
ஆனால் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துதமிழினத்தைக்காட்டிக்கொடுத்த முஸ்லீம்களும், முஸ்லீம் அரசியல்வாதிகளும்மஹிந்தவின் ஆட்சிகவிழ்ப்புக்குமுக்கியமாகவலுச்சேர்த்துக்கொடுத்தனர். இவ்வாறானநிலையில் சிறுபான்மை இனத்தவரின் ஆதரவுதனக்குக்கிடைக்காதுஎன்றகாரணத்தினால் மஹிந்த ராஜபக்ஷஅவர்கள் பாதயாத்திரைகளையும்,உண்ணாவிரதங்களையும் மேற்கொள்வதன்ஊடாகத்தான் தனதுஅரசியலைஇனிமேல் முன்னகர்த்த இயலும் என்பதாலும் இதற்குசிங்களப் பேரினவாதிகளின் முழுமையானஆதரவுதேவையென்பதைஉணர்ந்துகொண்டுஅதற்கானநடவடிக்கைகளில் துரிதமாகஈடுபட்டுள்ளார்.இலங்கைவாழ் 65வீதமான சிங்களவர்களுடையதன்மதிப்பைப்பெறவேண்டும் என்றநோக்கில் அவர் செயற்பட்டாலும்,ஐந்துவருடங்களுக்கு இந்தக் கூட்டாட்சியைஅசைக்கமுடியாது. இதற்கிடையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள்தாமதிக்கப்படலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புஎதிர்க்கட்சிஆசனத்திலிருந்துசிங்களஆட்சியாளர்களின் அராஜகத்தையும்,அவர்களுடையபிரச்சினைகளையும் பார்த்துமனங்குளிரவேண்டியதுதான்.தென்னிலங்கையில் குழப்பம் ஏற்படுகின்றபொழுதுதமிழ்த்தேசியக் கூட்டமைப்புகுழப்பமடையத் தேவையில்லை. தமிழ் மக்களுக்கானதீர்வுத்திட்டங்களைஅவசரஅவசரமாகமேற்கொள்ளவேண்டும். குறிப்பாகவடமாகாணசபைக்கானகாணி,பொலிஸ் அதிகாரம்,வட-கிழக்குமாகாணசபைகள் இணைப்பு இவற்றை இவர்கள் செயற்படுத்துவார்களாகவிருந்தால் தமிழ் மக்களுக்கானத்தீர்வுத்திட்டத்தின் அரைவாசித் திட்டங்கள் முடிவுக்குவருமெனலாம். நாம் மஹிந்தவுடன் முட்டிமோதவேண்டியதேவையில்லை. மாறிமாறிவந்தஅரசாங்கங்களெல்லாம் தமிழ் மக்களுக்கானதீர்வுத்திட்டத்தினைவழங்குவதில் இழுபறிநிலையைத் தோற்றுவித்தமையேதவிரதமிழ் மக்களுக்கானதீர்வுத்திட்டத்தில் அக்கறைகொள்ளவில்லை. சிங்களவர்களுடையநிகழ்ச்சிநிரலில் பௌத்தநாடுஎன்றேஎழுதப்பட்டுள்ளது. யாப்புமாற்றம் தொடர்பில் பரிசீலனைஎன்று கூறுகின்றார்கள் அதுவும் நடந்தபாடு இல்லைதிருத்தியமைப்பதா? அல்லதுதிருத்தம் கொண்டுவருவதா? இதைத் திருத்திஅமைக்கப்போனால் மஹிந்த ராஜபக்ஷவினுடைய இனவாதிகள் குழப்பியடிப்பார்கள். ஒருஎதிர்க்கட்சியாக இருந்துகொண்டுஅரசாங்கத்திற்குஎதிராகச் செயற்படமுடியும். ஆனால் ஆளுங்கட்சியாக இருந்துசெயற்படுவதுஎன்பதுமைத்திரியின் கூட்டாட்சிக்குஆபத்தானஒருவிடயமாகவேஅமையப்பெறும். இவ்வாறானநிலைமைதொடருமாக இருந்தாலும் தென்னிலங்கையில் முன்பு ஜேவிபிகலவரம் நடந்ததுபோன்றுஒருகலவரம் உருவாகும். இதற்குமஹிந்த,மைத்திரி,ரணில் கூட்டுக் கலவரம் என்றும் பெயர் சூட்டப்படும்.
அரசியலில் வெற்றிதோல்வியென்பதுசகஜமானவிடயம். புறந்தள்ளப்பட்டஅரசியல்வாதிகள் முன்னிலைவகிப்பதும்,பின்னர் ஓரங்கட்டப்படுவதும் அனைத்துநாடுகளிலும் சர்வசாதாரணமாகநிகழும் ஒருநிகழ்வு.சிங்களவர்களின் கலவரம்,குழப்பநிலைகளுக்குமத்தியில்தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் எவ்வாறுசாத்தியமாகப்போகின்றது? இவ்விடயத்தில் தமிழ்அரசியல்வாதிகள் நன்குசிந்தித்துச் செயற்படவேண்டியகாலம் நெருங்கியுள்ளதுஎனலாம்.

SHARE