ஆயுதக்கட்சிகள் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டவகையில் ஓரங்கட்டப்படுகின்றது

286

ஆயுதக்கட்சிகள் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டவகையில் ஓரங்கட்டப்படுகின்றது
கடந்தகாலத்தேர்தலை அடிப்படையாக்கொண்டு ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் நின்றுதமிழ் மக்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனநாயகரீதியாகமக்களிடையேசென்றுதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றவீட்டுச் சின்னத்திற்குவாக்களித்து 17 பாராளுமன்ற  உறுப்பினர்களை வடக்கிலும் கிழக்கிலும் அனுப்பிவைத்துள்ளனர். இதில் பெரும் பங்குவகிப்பது ஆயுதக்குழுக்களே. இதில் ரெலோ,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றஆயுதக்குழுக்களும் அடங்கும். இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டமுறையில் ஓரங்கட்டப்பட்டார். அதுபோன்று மட்டக்களப்பிலும் பழைய எம்பிக்கள் ஓரங்கட்டப்பட்டுபுதிதானவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

75 13592340_10209773613926206_678292819984404050_n1 TNA

வாக்குகளைசேர்த்துக்கொள்வதற்காகபணபலம் பொருத்தியவர்களைஉள்வாங்கிக்கொண்டதமிழரசுக்கட்சிஅவர்களைதமதுவாக்குவங்கியாளர்கள்  என்று இனங்கண்டுள்ளது. ஆகவே வருகின்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் பணபலம் படைத்தவர்களே தமதுகட்சிக்கானவாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும்,தமது சுயநல தேவைகளுக்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். பாராளுமன்றத்திற்குச் சென்று எவ்வாறு பேசுவது என்று கூட இவர்களுக்குத் தெரியாது. தற்பொழுதுதமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடியபுதியபாராளுமன்றஉறுப்பினர்களுள் வைத்தியகலாநிதிசிவமோகனைத் தவிரஅரசியலில் நெளிவுசுழிவுதெரிந்துபேசக்கூடியவர்கள் பாராளுமன்றத்தில் இல்லை.   இவர்கள் யாருமே தேசியமட்டஅரசியல் பேசுவதில்லை. முன்பு இருந்தபாராளுமன்றஉறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன்,ப.அரியநேந்திரன்,பொன்.செல்வராசாபோன்றோர் தேசியஅரசியல் பேசுவதிலும் எழுந்தமானத்தில் பேசப்படுகின்றவிடயங்களுக்குபதிலளிப்பதிலும் சிறந்தவர்களாகவிளங்கினார்கள். இவர்களைதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளேவைத்திருந்தால் தமதுஅரசியலைச் செய்யமுடியாதுஎன்பதைஉணர்ந்துகொண்ட தமிழரசுக்கட்சி இவர்களைத் திட்டமிட்டுவீட்டுக்குஅனுப்பியது. ஏனைய பாராளுமன்றஉறுப்பினர்களைவைத்துதாம் சொல்வதை செய்விக்கலாம் என்ற கருத்தாடலிலேயே தற்பொழுது தமிழரசுக்கட்சி செயற்பட்டுவருகின்றது. இதுபோன்று வடமாகாணசபையிலும் கூட தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடியவர்களுள் ஒரு சிலபாராளுமன்றஉறுப்பினர்களே தேசியஅரசியல் சார்ந்தவிடயங்களையும்,தமிழ் மக்களுக்கானதீர்வினையும் பேசிவருகின்றனர்.  வடமாகாணசபையைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியில் இருக்கக் கூடிய இளைஞர் அணியின் செயலாளர் சிவகரன் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்படவிருந்த சமயத்தில்ரெலொ சார்பாகமயூரன் அவர்களேதெரிவுசெய்யப்பட்டார். மயூரனைவிடவும் அரசியலில் மிகவும் தேர்ச்சிபெற்றவர் சிவகரன். சிறந்த பேச்சாற்றலைக்கொண்ட இவரை மாகாணசபைக்கு உள்வாங்கிக்கொள்ளாமைக்கானகாரணம்என்ன வென்றால் அரசியலில் இருக்கக்கூடியநெளிவுசுழிவுகளைநன்குஅறிந்துகொண்டவர் அத்தோடுஅங்குள்ளஅரசியல்வாதிகளுக்கும் பிரச்சினைகள் எழலாம் என்ற காரணத்தினாலுமேஆகும்.தமிழரசுக் கட்சிவிடுகின்ற பிழைகளையும் சுட்டிக்காட்டும் ஆற்றல் சிவகரனுக்கு இருக்கின்றது. தாம் தலையில் குட்டக் கூடியவர்களைதம் பக்கத்தில் வைத்திருப்பதுதான் தமிழரசுக் கட்சியினுடைய அரசியல் தந்திரோபாயம். தமிழரசுக்கட்சியைவிட்டு இந்தஆயுதக்கட்சிகள் விலகிச்சென்றால் தாம் தோற்றுவிடுவோமோ என்றபயமும் இவர்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கானதீர்வுத்திட்டமாக இருந்தால் சரி,பொருளாதாரமத்தியமையமாக இருந்தாலும் சரி,எல்லாக் கட்சிகளும் தமிழரசுக் கட்சிகளுடன் இணைந்துமுடிவுகளைஎடுத்துக்கொள்ளலாம்.ஆனாலும் தமிழரசுக் கட்சிஎடுக்கின்றமுடிவே இறுதிமுடிவாக இருக்கும்.
இதன் காரணமாககட்சிகளிடையே குழப்பங்கள் உருவாகிவந்தாலும் கூட்டமைப்பாகவே இயங்கவேண்டும் என்றகருத்தாடலையும் ஒருசிலகட்சிகள் கொண்டுள்ளன. கூட்டமைப்பைபதிவு செய்ய வாருங்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பலமுறை அறிவித்திருக்கின்றது. ஏதோவொருகாரணங்களைக்காட்டி ரெலோவும்,புளொட்டும் தப்பித்துவிடுகின்றது. ரெலோவினுடையதலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அதிகமான பதவிகள் தமிழரசுக்கட்சியினால் அள்ளிவழங்கப்பட்டுள்ளது. இதனைவிடதிறமைபடைத்தவர்கள் எத்தனையோபேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் பதவிகளைக்கொடுத்து கட்சியில் நீண்டகாலமாக இவரைவைத்துக்கொள்ளமுடியும் என்பதுதமிழரசுக் கட்சியினுடையஅரசியல் தந்திரோபாயமாகும். ஒருவேளைஆயுதக்கட்சிகள் அனைத்தும் பதிவுசெய்யப்படவேண்டும் என்று கூறி ஒன்றாக நிற்கின்ற பொழுது தமிழரசுக்கட்சி அதற்குமறுப்புத்தெரிவித்தால்எதிர்வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுங்கள் என்றநிபந்தனையைமுன்வைக்கும். அவ்வாறுநடைபெற்றால் தமிழரசுக் கட்சிஆயுதக்கட்சிகளுக்குஎதிராகபிரச்சாரத்தைமேற்கொள்ளும். இக்கட்சிகளுடைய அடி அத்திவாரம் வரைகிண்டப்படும். ஆகவேஅவ்வாறானநிலைமைஏற்பட்டால் மக்கள் மத்தியிலிருந்து இவ் ஆயுதக்கட்சிகள் அனைத்தும் தூக்கிவீசப்படும். இவ்வாறானஒருநிலையையேதமிழரசுக் கட்சிஎதிர்பார்க்கும். கட்சிபதிவுசெய்யப்பட்டால் தமிழரசுக்கட்சிக்குஆபத்துவரும் என்பதும் அவர்களுக்குநன்குதெரியும். ஆகவேதமிழரசுக் கட்சிகொடுக்கின்றசோறையும் கஞ்சியையும் சாப்பிட்டுவாழ்கின்றநிலைமைஉருவாகிவிடும். தமிழரசுக் கட்சியினால் இக்கட்சிகள் நாளுக்குநாள் ஓரங்கட்டுப்படுவதையும்,பிறகட்சிகளிலிருந்துதமிழரசுக்கட்சிக்குஎனஅங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதையும் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக ஈபிஆர்எல்ப் கட்சியின் வன்னிப் பாராளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டுவெற்றி பெற்ற வைத்தியகலாநிதி சிவமோகன்,அம்பாறைமாவட்டத்தில் போட்டியிட்டுவெற்றிபெற்ற ரொபின் போன்றோரும் உள்ளடக்கப்படுகின்றனர். ஜனநாயகம், ஜனநாயம் என்றுஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கூறிக்கொண்டு இவ் ஆயுதக்கட்சிகளை ஓரங்கட்டும் தீவிரநடடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார். ஆகவே எதிர்வரும் காலங்களில் ஆயுதக்கட்சிகள் தமது கட்சிகளைபலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதைநினைவில் வைத்துச் செயற்படுங்கள்.

 

SHARE