தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அங்கியை அகற்றி விடுங்கள்-வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ

260

 

திருவாளர் சம்பந்தன் அவர்களுக்கு

உலகம் உண்மைகளை இனியேனும் அறியட்டும்

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. நீங்கள் உருவாக்கியதாக சொல்லப்படுகின்ற அரசு செயற்படத் தொடங்கி 20

மாதங்கள் ஆகிவிட்டன. மக்களிடமிருந்து பலாத்காரமாக பெறப்பட்ட காணிகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில்தான்.

tna-17

கிளிநொச்சி நகரின் முதலாவதும்ரூபவ் முக்கியமானதுமான கிராமம் பரவிப்பாஞ்சான். இக்கிராமம் இராணுவத்தினரின் தலைமை

செயலகமாக செயற்படுகின்றது. இத்தகைய அலங்கோலங்களுக்கு முடிசூட்டுவது போல் யுத்தத்தால் அடைந்த துன்பங்கள்ரூபவ் கஸ்டங்களரூபவ்;

இழப்புக்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் நிலம் 617 ஏக்கர் முள்ளிவாய்க்கால் மக்களிடமிருந்து இன்றோ

நாளையோ பறிபோகவுள்ளது. இதிலிருந்து நீங்களும் உங்கள் சகாக்களும் எதனைச் சாதித்து விட்டோமென தம்பட்டமடிக்கப்

போகின்றீர்கள். என்னால் சுட்டிக்காட்டப்பட்ட பலவற்றில் ஒன்றுகூட உங்களின் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. நாம்

ஒன்றுபடுவோம் என்று குறைந்த பட்சம் பத்து தடவைகளுக்கு மேல் கோரிக்கை விடுத்தும் இன்றுவரை எதுவித நடவடிக்கையும் நீங்கள்

எடுத்ததாக இல்லை. எம் மக்களுக்கு நான் எவ்வித குற்றமும் செய்யவி;ல்லை. ஆனையிறவை பிடிக்க முடியுமா என பாதுகாப்பு

அமைச்சருக்கு பாராளுமன்றத்தில் சவால் விட்டவன் நான். உண்மை அவ்வாறு இருக்க ஆனையிறவை இலங்கை இராணுவத்தினருக்கு திருப்பி

கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதாக உண்மைக்கு புறம்பான விடயத்தைக் கூறி என்னை உள்ளுராட்சி மன்ற தேர்தலிலேயே

தோல்வியடைய செய்த பெருமை குறிப்பாக உங்களுக்கும் தம்பி சேனாதிராசாவிற்கும் உண்டு. உங்கள் கூற்றை திரு.

விநாயகமூர்த்தி அவர்கள் உண்மை என் ஒப்பிப்பாரேயானால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார். இதெல்லாம்

பழங்கதை. 12 ஆண்டுகள் எனது சேவையை மக்களுக்கு மறுக்க வைத்த பெருமைகூட உங்கள் இருவருக்குமே உண்டு. காலம் கடந்தாலும் எம்

போராட்டத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்ற காரணத்திற்காக 12 ஆண்டுகள் மௌனமாக இருந்த நான் தொடர்ந்து மக்களுக்கு

இனியும் மறைக்காமல் நடந்தவற்றை ஒளிவு மறைவின்றி இங்கே தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டமையாலேயே தொடரவுள்ள பல

கடிதங்களில் முதற் கடிதமாக இக்கடிதம் வருகின்றது.

நீங்கள் கட்சியை வி;ட்டு வெளியேறியதன் பின்பு இன்றுவரை தங்களுக்கு பல கடிதங்கள் எழுதியிருந்தும் ஒரு பதிலும்

கிடைக்கவில்லை. இருப்பினும் நான் தெரிவிக்கின்ற விடயங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளுக்கு குந்தகம்

ஏற்படக்கூடிய உணர்வூட்டும் விடயங்களை தவிர்த்து வந்துள்ளேன்.

சரித்திரம் என்பது ஒரு நாட்டின் சமூகரூபவ் பொருளாதாரரூபவ் அரசியல் நிகழ்வுகளை வரிசை கிரமமாக பதிவு செய்யப்படுவதோடு ஒரு

நாட்டின் பெரும் தலைவர்கள் பற்றியதும் பல்வேறு நிகழ்வுகளையும் பதிவிடுவதுமாகும் என்பது நீங்கள் அறியாததல்ல. தமிழர்

விடுதலைக் கூட்டணியின் வரலாறுகூட இந்த நாட்டின் அரசியல் சரித்திரத்தின் ஒரு பகுதியாக இருந்ததை நீங்கள்

அழித்துவிட்டீர்கள் என உங்கள் மீது நான் குற்றம் சுமத்துகிறேன் என்பதோடு பெருந்தலைவர்களான எஸ்.ஜே.வி.செல்வநாயகம்

கியூ.சிரூபவ் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியூ.சிரூபவ் கௌரவ எஸ்.தொண்டமான்ரூபவ் திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம்ரூபவ்

மு.சிவசிதம்பரம் போன்ற பலரின் பெரும் சேவைகளும் மறைக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக உங்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இருந்த வரலாற்றை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். 1972ம் ஆண்டு

மேரூபவ் 14ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டபோது முதலாவதாக தமிழரசு கட்சியும்ரூபவ் தமிழ்

காங்கிரஸ் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபக தலைவர் கௌரவ.சாவே.ஜே.செல்வநாயகம்ரூபவ் கௌரவ

ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் ஒன்றிணைந்தன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்

உறுப்பினராக இருந்த நானும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினராக இணைந்து கொண்டமை உங்களுக்கு

ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அன்றைய தினம் மாலையில் நடைபெற்ற பகிரங்க கூட்டத்திற்கு நீங்கள் சமூகம்

தந்திருந்த போதிலும் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவில்லை. ஏனெனில் நீங்கள் இவ்விரு கட்சிகளிலும்

அங்கத்துவம் வகிக்கவில்லை. 1977ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதுதான் நீங்கள் தமிழர் விடுதலைக்

கூட்டணியின் வேட்பாளராக இணைந்து கொண்டீர்கள். இத் தேர்தலில் நாம் 17 பேர் வெற்றிபெற்ற போதிலும் ஒருவர் மட்டும்

தோல்வியடைந்தார். யாரால் இத் தோல்வி ஏற்பட்டது என்பதை உங்களுக்கு உங்கள் மனச்சாட்சி சான்று பகிரும்;.

26-04- 1977 இல் தந்தை செல்வா அமரத்துவமடையும் வரை நீங்கள் தமிழரசு கட்சியில் அங்கத்தவராக இருக்கவில்லை என்பது

தெளிவாகிறது. அவரது இறப்புடன் தமிழரசு கட்சி ஏறக்குறைய செயலற்றதாகவே இருந்தது. ஆனால் தமிழரசு கட்சியின்

பெயரையும் அதன் சின்னமாகிய ‘வீடு’ சின்னத்தையும் எவரேனும் துஸ்பிரயோகம் செய்துவிடக் கூடாது என்பதற்காக அநேகமாக

அன்று அக்கட்சியிலிருந்த ஒரேயொரு ஆரம்பகால உறுப்பினரும் அரசியலில் தீவிர ரூடவ்டுபாடு கொண்டிருந்த அமரர்

அ.அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரசு கட்சியின் பதிவை அமுலில் வைத்திருந்தார். அவரின் பாரியார் திருமதி

மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் தனது கணவரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக அவர் இறப்பதற்கு முன்னர்

வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி இங்கு குறிப்பிடப்படுகிறது. ‘ எனது கணவரால் அரசியலில்

நம்பிக்கைக்குரியவர்களாக வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் தமிழரசு கட்சியினுடைய பெயரையும்ரூபவ் அதன் சின்னத்தையும்

துஸ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடு அதனை புனரமைப்பு செய்ய முயற்சிப்பது மிகவும் வேதனைக்குரிய

விடயமாகும். எனது கணவர்ரூபவ் அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்கின்றார்கள். ஆகவே மிக

உறுதியுடன்; கூறுவது தமிழரசு கட்சி மீள்புனரமைப்பு செய்யப்படுவதை நான் அங்கீகரிக்கவோரூபவ் ஆசீர்வதிக்கவோ

இல்லை என்பதையும் அதற்கு மாறாக எமது பெருந் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை

அழிக்கும் முயற்சியாகும் என வன்மையாக கண்டிக்கிறேன்.’ இக் கட்சியை இப்போது புனரமைப்பு செய்துள்ள

பெருந்தலைவர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.

நீங்கள் சில காலம் வகித்துவந்த தமிழரசு கட்சியின் தலைவர் பதவி ‘ரூடவ்ழத்து காந்தி’ என அன்புடன் அழைக்கப்பட்ட அகிம்சையை

கடுமையாக கடைபிடித்த கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சிக்கல்ல. நீங்கள் தலைமை தாங்கிய

அந்த தமிழரசு கட்சி அகிம்சை கொள்கைக்கு கட்டுப்படாத கிளிநொச்சியில் வாழ்ந்த தங்கன் என்பவரின் கட்டளைக்கமைய திரு.மாவை

சேனாதிராஜா அவர்களால் அதன் ஸ்தாபகர் தந்தை செல்வா இறந்து 26 ஆண்டுகளின் பின் உருவாக்கப்பட்டதாகும். இதன்

விபரத்தினை எனது அடுத்தக் கடிதத்தில் அறியத்தருகின்றேன்.

எமக்குள் உள்ள அபிப்பிராய பேதங்களை தயவு செய்து மறந்து எமது இனப்பிரச்சினை சம்பந்தமாக கடுமையாக சிந்தியுங்கள்.

நான் எந்தவித பதவியிலும் அக்கறைகொண்டவனல்ல. எனக்கு வேண்டியதெல்லாம் விரைவில் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே.

அதன் முதற்படியாக நீங்கள் அணிந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அங்கியை அகற்றி விடுங்கள். தமிழ் தேசிய

கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது என்ற தவறான கருத்து புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் நிலவுவதால்

அந்தப் பெயருக்கு பெரும் செல்வாக்கு உண்டு. ஆனால்; ஆறு முக்கிய தமிழ் பிரமுகர்களாகிய திருவாளர்கள்

வீ.கைலாயபிள்ளைரூபவ் கந்தையா நீலகண்டன்ரூபவ் வீ.ஆர்.வடிவேற்கரசன்ரூபவ் நிர்மலன் கார்த்திகேயன்ரூபவ் எஸ்.தியாகராஜாரூபவ்

கே.ஜெயபாலசிங்கம் ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென்ற உண்மை நம்

இருவருக்கும் தெரியும். 22-10- 2001 இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருவாளர்கள் ஆர்.சம்பந்தன்ரூபவ்

டாக்டர்.என்.குமரகுருபரன்ரூபவ் என்.பிரசன்னாரூபவ் கே.பிரேமச்சந்திரன் ஆகியோர் கட்சிகளின் செயலாளர்களாக தமிழர்

விடுதலைக் கூட்டணிரூபவ் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ரூபவ் தமிழீழ விடுதலை இயக்கம்ரூபவ் ரூடவ்ழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

சார்பில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி திருவாளர் மு.சிவசிதம்பரம் அவர்களுக்கு பின்னர்

தேசியப்பட்டியலில் திரு. முத்துலிங்கம் அவர்களுக்கு இடமளிப்பதாக நீங்கள் உட்பட கட்சி உத்தரவாதமளித்திருந்தது. திருவாளர்

முத்துலிங்கம் அவர்களின் விட்டுக்கொடுப்பாலேயே திரு. என்.ரவிராஜ் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக

தெரிவானார். ஆனால் திரு. மு.சிவசிதம்பரம் அவர்களுடைய சிதைக்கு தீ வைக்கும் முன்பாக நீங்களும்ரூபவ் வேறுமொரு

பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிக்கு விரைந்து சென்று திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்து திரு. முத்துலிங்கம்

அவர்களின் இடத்துக்கு பதிலாக உங்களுடன் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடத்துக்கு தெரிவான திரு. துரைரட்ணசிங்கம் அவர்களை

நியமித்தீர்கள். திருவாளர் துரைரட்ணசிங்கம் அவர்களுக்கு அந்தப்பதவியை வழங்கியமை எந்தவகையிலும் நியாயப்படுத்த

முடியாதவொன்றாகும். உங்களுடைய இந்த பிழையான நடவடிக்கைக்காக உங்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்

பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். மேலும் என்னுடன் சம்பந்தப்படாத விடயமாக இருந்தாலும் நான் உங்களுக்கு கூற

விரும்புவது அதே பிழையான வேலையை செய்து தமிழ் கூட்டமைப்புக்குள் இருந்த ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படக்கூடியதாக

செய்துள்ளீர்கள். இவ்வாறு நான் கூறுவதை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை நான் அங்கீகரிப்பதாக எண்ண வேண்டாம். ஏனெனில்

தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்படி அமைக்கப்படாது மோசடி மூலம் சில கட்சிகளை இணைத்து உருவாக்கிரூபவ் அவைகளை புறந்தள்ளிவிட்டு

திரு.சேனாதிராஜா உருவாக்கிய தமிழரசு கட்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது முழுக்க முழுக்க தவறாக பயன்படுத்தப்படுவதால்; அது தனது நாணயத்தை இழந்து நிற்கிறது.

விடுதலைப் புலிகளால் அந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதென்ற தப்பான அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும்

நிலவுவதால் இதனை சாதகமாக பாவித்து நாம் பயனடைய முற்படக்கூடாது. ஆனால் எனக்கு மிக மகிழ்ச்சி தருகின்றவொரு விடயம்

யாதெனில் அண்மையில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதை

பகிரங்கமாக ஒரு பேட்டியில் ஒத்துக் கொண்டதே. நாம் தொடர்ந்து எமது மக்களை ஏமாற்றாமல் எமது மக்களுக்காக நியாயமாக

செயல்படுவோம். ஆகவே தயவுசெய்து நீங்கள் அணிந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அங்கியை கழற்றி

வைத்துவிட்டு அரங்குக்கு சுத்தமான கையுடனும் ஒரு உண்மையான நன்நோக்குடனும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு

வாருங்கள் என அழைக்கின்றேன்.

நன்றி

அன்புடன்

தங்கள் பதிலை எதிர்பார்க்கும்

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ

SHARE