காப்பாற்ற முடியாத நிலையில் யாழ்ப்பாண மாணவர்கள்

265

கல்வியிலலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய யாழ் மக்களின் கல்வித்தடைக்கு இன்று பல காரணிகள் தடையாக உள்ளன. அதில் தற்பொழுது முக்கியமாகவிருப்பது. ஆலயங்களிலிருந்து கட்டுப்பாடின்றி அலறும் ஒலிபெருக்கிகள்.

யாழ்பாணத்தின் குறிப்பாக வலிகாமம் மேற்கு (சங்கானை) மற்றும் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிற்கு உட்பட்ட ஆலயங்களில் நீண்டகாலமாக டசின்கணக்கான ஒலிபெருக்கிகள் அதிகரித்த இரைச்சலுடன் கிலோமீற்றர் கணக்கிற்கு பொருத்தி அலறவிடுவதனால் அப்பகுதி மாணவர்களும் சிறுவர்களும் நோயாளர்களும் தொடரந்து பாதிக்கப்பட்டுவருவது ஊடகங்கள் மூலமாக யாவரும் அறிந்த விடயமாகும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தினை வைத்தும் முறையற்ற வித்தில் இங்கு பணம் சம்பாதிக்கும் நபர்களும் தமது பணச்செல்வாக்கினை காட்டுவதற்காகவே ஆலயங்களை பயன்படுத்துகின்றனர். பண்டததரிப்பு பிரான்பற்றிலுள்ள கல்வி வாசனையே இல்லாத இரண்டு ஒலிபெருக்கி உரிமையாளர்களுடன் சேர்ந்துதான் இந்த சமூகவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் இரண்டு பரீட்சைக்களுக்கு தயார்படுத்தும் மாணவர்கள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நீதித்துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் .யாழ் அரச அதிபர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவும் ஆலய ஒலிபெருக்கிகள் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியபோது மக்கள் மகிழ்ச்சியடைந்தபோதிலும் இன்றும்கூட பெரும்பாலான ஆலயங்களில் இருந்து சந்தி சந்தியாக ஒலிபெருக்கிகள் அலறுவது நிற்கவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதி;ல் இன்னும் வேதனையான விடயம் ஆலய வீதிகளில் உயரமாக ஒலிப் பெட்டிகளை அடுக்கிவிட்டு ரீமிக்ஸ் செய்த பக்திப்பாடல்களும் குத்துப்பாடல்களும் மனித செவிகளால் உள்வாங்கிக்கொள்ள முடியாத குண்டு போடுகின்ற குண்டுவெடிக்கின்ற சத்தங்களை நள்ளிரவுகளிலும் போடுகிறார்கள். ஆலயத்திற்கு பூசைசெய்ய வரும் பூசகர்களும் 1500 ரூபா தினமும் சம்பளம் வாங்கி சைவ சமய பாரம்பரியம் பற்றி வாய்கிழியக் கத்திவிட்டு செல்லும் பிரசங்கக்காரரும் ரீமிக்ஸ் பக்கிப்பாடலை இரசித்துவிட்டு செல்கிறார்கள். இச்செயற்பாடுகளால் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் சிறுவர்கள் சமய விழுமியங்கள் குறித்து தலைகீழான எண்ணப்பதிவினையே கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சைவ சமய காவலர்கள் என்று கூறிக்கொண்டு பல சமய அமைப்புக்களை கட்டிப்பிடித்துக்கொண்டு புகழுக்காக சமயவாதிகளாக காட்டிக்கொள்ளும் யாழ்ப்பாணத்து சைவ சமய காவலர்கள் இந்த விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.

ஆலயங்களுக்கு அனுமதி பொலிஸாரின் முறை குறித்து எமக்கு கிடைத்த தகவல்களை தருகின்றோம். ஆலயங்களுக்கு அருகில் வசிக்கும் இருவரிடம் ஒலி பெருக்கி பாவிப்பதனால் ஆட்சேபனை இல்லை என்பது குறித்த ஆவணத்தில் கையொப்பம் வாங்குகிறார்கள். வாங்கும்போது ஆலய வளவிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்கு மட்டும் என கூறித்தான் கையொப்பம் வாங்குகிறார்கள் ஆனால் பின்னர் ஒலிபெருக்கிகள் தாறுமாறாக நேரக்கட்டுப்பாடின்றி சில கிலோ மீற்றர்களுக்கு அலறுகிறது. .இது எவ்வாறு என்றுதான் பொதுமக்களின் சந்தேகம். இது குறித்து பொலிசாருக்கு முறைப்பாடு செய்தால் அவர்கள் 119 இற்கு அறிவிக்கும்படி கூறுகிறார்கள்.அவ்வாறு அறிவித்தால் கூட சில வேளைகளில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. .பொலிசாரின் இந்த ‘டீலுக்கு‘ ஆலய நிர்வாகத்தால் பெற்றோல் நிரப்புவதற்காக 2000 ரூபாவும் .ஒலிபெருக்கிகாரர்களால் 5000 ரூபாவும் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக விரக்தியடைந்த பெற்றோர்கள் ஜனாதிபதியின் முகநூல் முறைப்பாட்டுப்பிரிவிற்கு சில வாரங்களுக்கு முன்பு முறையிட்டுள்ளார்கள். அதன் படப்பிரதியும் எமது செய்திச்சேவைக்கு அனுப்பியுள்ளார்கள். இனியாவது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விடிவு கிடைக்குமா?

SHARE