‘ஆடி பூரத் திருவிழா’

322

இந்து மக்களின்; வாழ்வில் ஆடி மாதம்  முக்கியமான மாதமாகும். ஆடிப் பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் என்பன ஆடி மாதத்தில் வரும் விஷேட தினங்களாகும். அந்த வகையில் ஸ்ரீ அம்மனுக்கு உகந்த நாளான ஆடி பூரத்திருவிழா புஸ்ஸல்லாவை வாடித்துரை தோட்டம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, ஹோமம் வளர்த்தல், போன்ற பூஜைகள் நடைப்பெற்றன. தோட்ட மக்களால் அம்பாளுக்கு சீர் வரிசை கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபத்தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.செல்லமுத்து அவர்களும் கலந்து சிறப்பித்தார்

unnamed (1)

unnamed (3)

unnamed (2)

unnamed

SHARE