சியசெத்த செவன தொடர் மாடிவீட்டுத் தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..

259

கொழும்பு நகர அதிகார பிரதேசத்தில் குறைந்த வசதிகளுடைய வீடுகளில் வாழும் மக்களுக்காக

நிர்மாணிக்கப்பட்ட சியசெத்த தொடர் மாடி வீட்டுத் தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன

அவர்களினால் இன்று (05) பிற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

13,300 இலட்சம் ரூபாய் முதலீடு செய்து நிர்மாணிக்கப்பட்ட சியசெத்த செவன தொடர் மாடி வீட்டுத் தொகுதி

மொத்தம் 266 வீடுகளைக் கொண்டுள்ளது. வீடொன்றுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை 05 மில்லியன்

ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஒவ்வொரு வீடும் 450 சதுர அடிகளைக் கொண்டுள்ளதுடன் இரண்டு படுக்கை

அறைகள், வரவேற்பறை, சமையலறை, மாடியின் முன்பாகம் (பல்கனி) மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள்

ஆகியவற்றை உள்டக்கியுள்ளது.

பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திவிசரு

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இவ்வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மாளிகாவத்தை டவர் ப்ளெட்,

ராஜகிரிய வேலுபுல்லே வத்தை மற்றும் பஞ்சிகாவத்தை அபேசிங்காராமை வீதி ஆகிய பிரதேசங்களில்

வசிப்பவர்கள் இத்தொடர் மாடி வீட்டுத் தொகுதி மூலம் நன்மை பெறுவார்கள்.

இத்தொடர் மாடி வீட்டுத் தொகுதி நிர்மாணத்துடன் இணைந்ததாக வீதிகளை அகலமாக்குதல், சனசமூக

நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் என்பன மேற்கொள்ளப்படுகிறது.

குறைந்த வசதிகளுடைய அலங்கோலமான நகர் பிரதேசங்களை எழில்மிகு நகர் பிரதேசங்களாக

மாற்றுவதற்காக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நகர

அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திவிசரு புரவர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்

2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 25,000 வீடுகள் வழங்கப்படவுள்ளது.

தற்போது 19072 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக நகர அபிவிருத்தி

அதிகார சபையானது 100 பில்லியன் ரூபாய் முதலீடு செய்துள்ளது.

நினைவுப் பதாகையை திரைநீக்கம் செய்து, வீடுகளை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள் அங்கு

மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் அடையாள நிகழ்வில்

ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலீ சம்பிக்க

ரணவக்க, அமைச்சர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பைசர் முஸ்தபா, பிரதி அமைச்சர்களான

எரான் விக்கிரமரத்ன, லசந்த அலகியவன்ன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SHARE