பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில்….

256

பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை

நடாத்தப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி கௌரவ

மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் நேற்று (05) பிற்பகல் சினமன் கிரேண்ட் ஹோட்டலில்

நடைபெற்றது.

இலங்கைப் பொருளாதாரத்திகு பெண்கள் ஆற்றும் விசேட பங்களிப்பினைப் பாராட்டி 10 பெண் தொழில்

முயற்சியாளர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த தொழில்முயற்சியாளருக்குரிய

விருது ஜனாதிபதி அவர்களினால் திருமதி லக்மினி விஜேசுந்தரவிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

மகளிர் கைத்தொழில் மற்றும் வணிக சம்மேளனத்தின் தலைவர் திருமதி ரிபா முஸ்தபாவின் தலைமையில்

சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிகம் நான்கு துறைகளின் கீழ் இனங்காணப்பட்டு அவற்றை

ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்விருது வழங்கும் வைபவம் ஒன்பதாவது தடவையாக

ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பைசர் முஸ்தபா, சந்திம

வீரக்கொடி, ரிஷாட் பதுர்தீன், சுஜீவ சேரசிங்க உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

SHARE