முறையற்ற அனுமதிப்பத்திரங்களில் மணல் கடத்தல் :5 வாகனங்கள் சிக்கின

268
முறையற்ற அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் லொறிகள் டிப்பர்களென 5 வாகனங்களை கைப்பற்றியதுடன், அவற்றறை செலுத்தி சென்ற சாரதிகளும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தர்மபுரம் பொலிஸார் இன்று (சனிக்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே குறித்த லொறிகளை கைப்பற்றியுள்ளனர்.
 .
அனுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச்செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை கொண்டு வட்டக்கச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 2 லொறிகளும், வழி அனுமதிப்பத்திரத்திற்கு மாறாக வாகனம் செலுத்தியமைக்காக மற்றுமொரு டிப்பர் வாகனமும், அனுமதிப்பத்திரத்தில் வழி சரியான முறையில் குறிப்பிடப்படாமைக்கு ஏனைய இரண்டு டிப்பர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த டிப்பர் வாகனங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
SHARE