ராதிகா ஆப்தே ஆபாச காட்சி இணையத்தில் வெளியானது

326

 

மும்பை

ராதிகா ஆப்தே, ‘வெற்றி செல்வன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் ‘தோனி,’ கார்த்தியின் ‘பிரியாணி’ ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலமே பிரபலமானார்.

‘கபாலி’ படத்தை முடித்துக் கொடுத்து விட்டு ராதிகா ஆப்தே, ‘பர்சேட்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆனது. அதில், ராதிகா ஆப்தேவும், ஹுசைனும் ஆடைகள் இல்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இது, ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி’ என்ற பெயரில் இணையத்தில் வைரலாக பரவியது.

நிர்வாண காட்சிகள் இடம்பெற்றுள்ள ‘பர்சேட்’ படம், டொரண்டோவில் நடந்த சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த படம் இன்னும் திரையிடப்படவில்லை!

இதைக் கேள்விப்பட்டு நடிகர் ஹுசைன் கோபம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இணையத்தில் இக்காட்சி வெளியானது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆபாசக் காட்சியை மட்டும் லீக் செய்தது மக்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

இப்படத்தில் அழகான நிறைய காட்சிகள் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் விட்டு விட்டு ஆபாச காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளனர். அதனை ஏன் லீக் செய்யவில்லை. அப்படியென்றால் செக்ஸ் மீது மக்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

அதோடு, இந்த வீடியோவை லீக் செய்தவர்கள் ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் நானும் தான் நிர்வாணமாக நடித்துள்ளேன். ஆனால் அதனை ஏன் ஹுசைன் ஆபாசக் காட்சி எனக் கூறவில்லை.

காரணம், ஆண்கள் செய்தால் அது தவறல்ல, பெண்கள் செய்தால் மட்டும் தவறா. எப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே உதாரணம். இந்த விஷமத்தைச் செய்தவர் நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்க மாட்டார், ஆணாகத் தான் இருப்பார்” என தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் பரபரப்பாக பேசும் அளவிற்கு ஒன்றுமில்லை என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான அசீம் பஜாஜ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ராதிகா ஆப்தே, ஹுசைனின் படுக்கையறை காட்சி இணையத்தில் வெளியானது விளம்பரத்திற்காக செய்யப்பட்டது அல்ல. இது எங்களுக்கே தெரியாது.

இந்த படம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியாகியுள்ளது. அதனால் அங்கு இருப்பவர்கள் தான் அந்த காட்சியை இணையத்தில் கசியவிட்டிருக்க வேண்டும்.

இருப்பினும் அந்த நிர்வாண படுக்கையறை காட்சியில் என்ன தவறு இருக்கிறது. அதில் எந்த பரபரப்போ, உணர்ச்சியை தூண்டும் வகையிலோ எதுவும் இல்லை.
ராதிகா என் சகோதரி போன்றவர். அவரை நான் ஒருபோதும் தவறாக சித்தரிக்க மாட்டேன். இது அந்த காட்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

SHARE