இலங்கை தமிழர்களுக்கே சொந்தமானது.பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவர்கள்

339

 

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது.

kqfjz_263811

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேக்கிரார்கள். சிங்களவர்களின் கோவம் நியாம் தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேக்கலாமா? இது சரியா? தவறா என்பது அரசியல் இதுதான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரஜ்ஜனயா இருக்கு

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டி பார்த்தல்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்… என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .

ஆலந்து holland நாட்டின் பொருட்காட்சி சாலையில் இருக்கும் சோழர்களின் செப்பேடுகள்

ஆலந்து holland நாட்டின் பொருட்காட்சி சாலையில் இருக்கும் சோழர்களின் செப்பேடுகள்

ஆலந்து (holland) நாட்டின் பொருட்காட்சி சாலையில் இருக்கும் சோழர்களின் செப்பேடுகள் !!!

ஆனைமங்கலச் செப்பேடுகள் ( the large leiden plates).

முதலாம் இராசராச சோழன், கடார வேந்தனாகிய மாரவிசயோத்துங்க வருமன் நாகப்பட்டினத்தில் ‘சூடாமணி வரும விகாரம்’ என்னும் புத்த விகாரைக் கட்டுவதற்குப் பேருதவி புரிந்ததுடன் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தினையும் பள்ளிச் சந்தமாக அளித்தான். அப்புத்த விகாரம் இராசேந்திரனது காலத்தில் முடிவுற்றதால், இவன் தன் தந்தையின் அறக்கட்டளையைச் செப்பேடுகளில் தீட்டியளித்துள்ளான். இதுவே ஆனைமங்கலச் செப்பேடு எனவும் ‘லீடன் பட்டயங்கள்’ எனவும் இச்செப்பேடுகள் ஆலந்து நாட்டின் பொருட்காட்சி சாலையில் உள்ளமையால் இவை லீடன் செப்பேடுகள் என அழைக்கப்படுகின்றது. இத்தொகுதியில் இருபத்தொன்று செப்பேடுகள் உள்ளன்.
.
சிறிய ஆனைமங்கலச் செப்பேடுகள் (the smaller leiden plates).

இச்செப்பேடுகள் முதலாம் குலோத்துங்க சோழனின் இருபதாமாட்சியாண்டில் வெளியிடப்பட்டன. இவை இம்மன்னன், கடார வேந்தன் சோணாட்டில் கட்டிய ‘இராசராசப் பெரும் பள்ளிக்கும், இராசேந்திர சோழப் பெரும் பள்ளிக்கும் பள்ளிச் சந்த இறையிலியாக’ ஆனைமங்கலத்தில் ஒரு பகுதியுடன் ஆமூர், நாணலூர், புத்தாக்குடி, மூஞ்சிக்குடி, சந்திரபாடி, உதயமார்த்தாண்ட நல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து விளையும் ஆயிரக்கணக்கான கலம் நெல்லை நிவந்தம் செய்துள்ள செய்தியைக் கூறுகின்றன. மூன்றே ஏடுகள் கொண்ட இச்செப்பேடு லீடனில் உள்ளது. இதுவே, ‘சிறிய லீடன் பட்டயங்கள்’ என அழைக்கப்படுகிறது. இதை தமிழகத்திற்கு மீட்டுவந்தால் பல தகவல்களை அறிய முடியும்.
.
சான்று: இராசேந்திர சோழன் வீர வரலாறு.
எழுத்தாளர்: ம. இராசசேகர தங்கமணி

SHARE