தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விசஊசி விபகாரத்தை நூட்பமாக கையாளவேண்டும்

282

 

தமிழ்ச் சூழலில் இன்று அதிகமாக பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதுமான விடயமாக மாறியிருக்கிறது தடுத்துவைக்கப்பட்ட ஈழப் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது என்கின்ற விவாதம்.
injection-tna
எதிரும் புதிருமான தமிழ் விவாதங்கள் ஒரு கொதிநிலையை ஏற்படுத்தி இது தொடர்பான செயல்த்திட்டம் ஒன்றை நோக்கி தமிழ்த்தரப்பை உந்தித் தள்ள முற்படுவதை அவதானிக்க முடிகிறது.
வடமாகாண சபை ஒரு தீர்மானம் கொண்டுவர இருப்பதாகவும் மருத்துவப் பரிசோதனைனக்காக மருத்துவக்குழுக்களை அமைக்கவிருப்பதாகவும் பேசப்படும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக இரண்டுவிடயங்களை வலியுறுத்த விரும்புகிறது இப்பத்தி!
முதலாவது விச ஊசி என்ற வார்த்தைதான் இவ்விடயத்திற்கு அதிக வலுச்சேர்த்ததே அன்றி அதுதான் ஒரேயொரு விடயம் என்ற அடிப்படையில் இவ்விடயத்தைக் கையாளுதல் மதிநுட்பம்மிக்கதல்ல.
ஏனெனில் போரினால் ஏற்பட்ட உடற்காயங்களும் அதன் விளைவுகளும், போரினாலும் பின்னும் ஏற்பட்ட மனக் காயங்களும் அதன் விளைவுகளும் (விச ஊசி விவகாரம் உட்பட), போரின் பின் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இனந்தெரியாத நோய்களின் தாக்கம் என மூன்று பிரதான தாக்கங்களிற்கு உட்பட்டுத்தான் எல்லாச்சோகங்களும் நிகழ்கின்றன. அந்த எல்லா வழிகளையும் ஆராய்ந்து தீர்வுகொடுப்பதன்மூலமே இந்தச் சோகங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும்.
அடுத்தது போராளிகளுக்கு மட்டும் என்று இவ்விடயத்தை வகைப்படுத்துவதும் சரியானதல்ல. ஏனெனில் போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இதே வகையான ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களும் போராளிகளும் சாட்சியங்களை பதிவு செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரை உறுதி செய்கிறது.
புனர்வாழ்வழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பத்தாயிரம் வரையிலான போராளிகளில் சிலரிற்கு அதிஉயர் கவனிப்போ அல்லது சராசரி விருந்தினரிற்கு உரிய கவனிப்போ இருந்திருக்கலாம் ஏனெனில் ஒவ்வொருவரை ஒவ்வொரு வகையாக கையாள்வது என்பது புனர்வாழ்வில் கடைப்பிடிக்கப்பட்ட உத்திகளில் ஒன்று. ஆகையால் யாருமே பாதிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வரும் உரிமையும் அதிகாரமும் எவரிற்கும் இல்லை என்பதை இக்கட்டுரை இடித்துரைக்க விரும்புகின்றது.
இது தொடர்பான ஒரு செயல்த்திட்டமொன்று வரும்போது பாதிக்கப்பட்ட போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் 2009 இன் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் ஈழத்தீவில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் சர்வதேசமெங்கும் பரவியிருக்கிறார்கள்.
உதாரணமாக ஒருவர் தான் போரில் பாதிக்கப்பட்ட காரணத்தைச் சொல்லி வெளிநாடொன்றில் அகதிக்கோரிக்கை வைத்திருப்பார். ஆனால் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக தான் போராளியாய் இருந்த விடயத்தை அவர் மறைத்திருக்கலாம். இந்நிலையில் அவர் இந்த செயல்திட்டத்தில் பங்குகொள்வதாயின் தன்னை போரில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக மட்டுமே காண்பிக்க விரும்புவார் அல்லது காண்பிக்க முடியும்.
எனவே போரில் பாதிக்கப்பட்ட மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது என்ற உடனடித்தேவையையும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முறையாக பதிவு செய்வதன்மூலம் அவர்கள் இறைமையையும் நிலத்தையும் பாதுகாப்பது என்ற நீண்டகாலத் தேவையையும் கருத்தில் கொண்டதான செயல்த்திட்டம் ஒன்று முறையாகவும் விரைவாகவும் உருவாக்கப்படவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதற்கு சற்றும் குறையாதது போரினாலும் போரின் பின்னும் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புக்களை முறையாக பதிவு செய்தல்.
போரின் உடற்காயங்களும் விளைவுகளும் போரில் பாவிக்கப்பட்ட ஆயதங்களின் சாட்சியாகவும், மனக்காயங்களும் விளைவுகளும் போரின் பின்னும் நீடிக்கும் பின்விளைவுகளாகவும், புற்றுநோய் மற்றும் இனந்தெரியாத நோய்களின் தாக்கம் போரில் பாவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் சாட்சியமாகவும் ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஆதாரமாகவும் விளங்கக்கூடியவை.
Pழடழnரைஅ-210 என்னும் கதிர்வீச்சுக்கொண்ட இரசாயனப் பொருள் மூலம் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்கெனவே தமிழ் விவாத தளத்தில் உதாரணங்களுடன் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் ஊசி ஏற்றுவதால் மட்டுமல்ல நீங்கள் இருக்கும் அறையிலோ அல்லது பிரதேசத்திலோ கதிரியக்க மூலகங்களின் தாக்கத்தால் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை படிப்படியாக கொல்லவோ நிரந்தர நோயளிகளாக்கவோ முடியும்.
இவற்றையெல்லாம் ஒரு உயர்தர  மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறிய முடியும்.
எனவே போரின் தாக்கத்திற்குள்ளாகியிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் உண்மை நிலையை ஒரு  சர்வதேச தரத்திலான மருத்துவர்கள் குழு அடங்கிய குழுவைக்கொண்டு மருத்துவப்பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் உறுதிப்படுத்த முடியும். ஒரு வேளை இதனால் திட்டமிட்ட புற்றுநோயோ வேறு நோய்களோ பரப்பப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால்கூட போரின் ஏனைய இரசாயண உளவியல் தாக்கங்களை வலுவாக ஆவணப்படுத்த முடியும்.  ஆகையால்தான் விசஊசி ஏற்றப்பட்டது என்ற கோணத்தில் இந்த விடயத்தை கையாள்வது மதிநுட்பம் மிக்கதல்ல என்று இப்பந்தியின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.
இதனை இரண்டு கட்டமாக பிரித்து செயல்ப்படுத்த வேண்டும்.
முதலாவது போரில் பாதிக்கப்பட்ட தாயகத்தில் வாழும் மக்களுக்கான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மகாணசபையோ அல்லது கூட்டமைப்போ பொறுப்பேற்று நெறிப்படுத்தவேண்டும்.
அடுத்தது சர்வதேசமெங்கும் சிதறியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசு அல்லது மக்களவைகள் போன்ற கிளைபரப்பியிருக்கும் அமைப்புகள் பொறுப்பேற்று நெறிப்படுத்தவேண்டும்.
அதன் மூலம் மூலம் வெளிப்படும் தகவல்களை  (ஐவெநசயெவழையெட யுளளழஉயைவழைn ழுக புநழெஉனைந ளுஉhழடயசள-ஐயுபுளு அனைத்துலக இனவழிப்பு ஆய்வாளர் மையம்) போன்ற அமைப்புகளுடன் பகிர்ந்தும் ஆவணப்படுத்தியும் கொள்ளவேண்டும். அத்துடன் அந்தந்த நாடுகளில் உள்ள பல்வேறு வழக்குகளில் (உ.ம்: குடிவரவு வழக்கு) இதனை ஒரு சட்ட ஆவணமாக பதிவுசெய்யவதற்குரிய உதவிகளையும் வழங்கவேண்டும்.
மெல்லக்கொல்லும் விச ஊசி விவகாரத்தை முறையாக திட்டமிட்டு ஆரோக்கியமாக செயல்ப்படுத்தப்படும் செயல்முறை ஒன்றின்மூலம்தான் எதிர்கொள்ளவேண்டும்.
மாறாக அனல்பறக்கும் தீர்மானங்களும் உணர்வுகொப்பளிக்கும் அறிக்கைகளும் அந்த அந்த அமைப்புக்களை அடையாளங்காட்டி மறையுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் வாழ்விலோ அந்த இனத்தின் எதிர்காலத்திலோ நிரந்தர ஒளியேற்ற உதவாது.
SHARE