55 லட்சம் பேர் உயிரிழப்பு: பதற வைக்கும் காரணம்?

261

 

காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், உலகளவில் 4-வது அபாயகரமான காரணியாக காற்று மாசு திகழ்கிறது.

உலகில் 85 சதவீதம் பேர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர். சீனா மற்றும் இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பான காற்றை சுவாசிக்கின்றனர்.

காற்று மாசு காரணமாக இந்தியாவில் 2013 ம் ஆண்டில் மட்டும் 14 லட்சம் பேர் இறந்துள்ளனர். சீனாவில் மிக மோசம் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE