போதை மருந்தால் சுயநினைவை இழந்த பெற்றோர்: வாகனத்தில் சிக்கிய 4 வயது சிறுவன்!

250

 

அமெரிக்காவில் அதிக போதை மருந்தை எடுத்துக்கொண்டு பெற்றோர் சுய நினைவை இழந்ததால், அவர்களது 4 வயது மகன் வாகனத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹொயோ மாகாண பொலிசார் இதுகுறித்து தங்களது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட புகைப்படத்தை பார்வையிடும் பெற்றோர் இனிமேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க அது ஒரு எச்சரிக்கையாக அமையும் என ஓஹியோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வாகனத்தில் அந்த போதை ஆசாமிகளுடன் இருந்த குழந்தையின் குரலையும் பதிவு செய்து வெளியிட வேண்டும் என பொலிசார் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த சிறுவன் அதிர்ச்சியில் இருந்து மீளாத காரணத்தால் எதுவும் பேச மருத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வாகனம் மிதமான வேகத்தில் சாலையில் கட்டுப்பாடுகள் இன்றி சென்றுகொண்டிருந்ததை கவனித்த அப்பகுதி பொலிசார், உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே சாலையில் பாடசாலை மாணவர்களை இறக்கி விட்டுக்கொண்டிருந்த பாடசாலை வாகனம் ஒன்றில் மோதி இந்த வாகனம் நின்றுள்ளது.

குறிப்பிட்ட வாகனத்தை தொடர்ந்து வந்த பொலிசார் வாகனத்தில் இருக்கும் நபர்களை சோதனையிட்டதில், அதில் இருந்த வாகன ஓட்டியும் அவரது மனைவியும் அதிக போதை மருந்து எடுத்துக்கொண்டதால் சுய நினைவை இழந்திருந்தனர்.

இதனையடுத்து அவசர சிகிச்சை குழுவினருக்கு தகவல் அளித்த பொலிசார், அவர்களின் உதவியுடன் குறிப்பிட்ட ஜோடியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அதிர்ச்சியில் இருந்து முழுதும் விட்டு மாறாத சிறுவனை முதலுதவி அளித்த பின்னர் சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

SHARE