7 வயதே ஆன சிறுமி: கடவுளின் அவதாரமா?

312

 

நேபாளத்தை சேர்ந்த 7 வயதான சிறுமி அங்குள்ள மக்களால் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படும் வினோத செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நேபாளத்தை சேர்ந்த ரமேஷ்- சபிதா தம்பதியரின் மகள் யுனிகா(7).

அந்த ஊர் வழக்கப்படி மாட்டிற்கு இருப்பது போன்ற இமையும், மான்-க்கு இருப்பது போன்ற தொடையும், வாத்தின் குரலும் அந்த சிறுமிக்கு இருப்பதால் அவர் கடவுள் அவதாரமாக பார்க்கப்படுகிறார்.

வாழும் கடவுளாக அவர் பார்க்கப்படுவதால் இந்து மத வழக்கப்படி அவர் கால்கள் தரையில் படாதவாறு சிறுமியின் பெற்றோர் அவரை பார்த்து கொள்கின்றனர்.

மேலும் அங்கு வருடா வருடம் ஜூலை மாதத்தில் இந்து மதம் சார்பில் நடக்கும் மழை விழாவில் மக்களுடன் சேர்ந்து அந்நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹாலும் யுனிகாவை பக்தியுடன் வணங்குகிறார்.

அவர் பார்வைபட்டால் நல்லது நடக்கும் என பலரும் நம்புகிறார்கள்.

இது பற்றி யுனிகாவின் தந்தை ரமேஷ் கூறுகையில், என் மகளை கடவுள் அவதாரமாக தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சியானது என்றும், நேபாளத்தில் அவதாரங்களை மதிப்பாகவும், பக்தியுடனும் பார்ப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாரை விடவும் தனியாக, அவதாரமாக தெரிய தன் மகள் முகத்துக்கு வித்தியாசமான மேக்கப் போட்டு விடும் யுனிகாவின் தாய், அவள் கேட்கும் விளையாட்டு பொம்மைகள் என எல்லாவற்றையும் நாங்கள் வாங்கி தந்தாலும், மற்ற குழந்தைகள் போல் அவள் வெளியில் சென்று விளையாடாமல் வீட்டுலேயே விளையாடுவது எங்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளது என்கிறார்.

 

 

SHARE