தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணமடைந்த ஏஞ்செலினா ஜூலி

276

 

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த வீரமங்கை ஆசியா ரம்ஜான் அந்தர் வீரமரணத்தைச் சந்தித்துள்ளார்.

குர்திஸ்தானின் ஏஞ்செலினா ஜூலி என்று அழைக்கப்பட்டவர் ஆசியா ரம்ஜான் அந்தர். ஏஞ்செலினா ஜூலி மாதிரியான தோற்றப் பொலிவு உடைய ஆசியா மிகவும் துணிச்சலான வீர மங்கை.

கடந்த 2012ம் ஆண்டு குர்திஸ்தான் ராணுவப் படையில் உருவாக்கப்பட்ட மகளிர் அணியில் இணைந்த ஆசியா, அன்று முதல் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்பட்டு வந்தார்.

இவர் 18 வயதிலே ராணுவத்தில் இணைந்து விட்டார். ஐஎஸ் அமைப்புக்கு எதிரான எண்ணம் கொண்டிருந்ததால் அது தொடர்பான மோதல்களில் இவர் அதிகம் ஈடுபட்டார்.

இந்நிலையில் 22 வயதேயான ஆசியா, சிரிய ஜனநாயகப் படையினருக்கும், சிரிய எதிர்த் தரப்புப் படைக்கும் இடையே நடந்த மோதலின் போது மரணத்தைச் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பல்வேறு உறுதிப்படுத்தும் தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

 

SHARE