வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை! யாழ்.படைத்தளபதி

258

 

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என யாழ் கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை.இராணுவ முகாம்களை அகற்றுமாறு எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெற்கைச் சேர்ந்த சிலர் கூறுகின்ற போதிலும் அவர்கள் எவரும் போர்க்களத்திற்கு சென்றவர்கள் கிடையாது.

போர் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியுடன் இராணுவ அதிகாரிகளே பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தமக்குத் தெரியாத தேசிய பாதுகாப்பு பற்றி சிலர் கூறை கூறி வருகின்றனர்.

30 ஆண்டுகளாக நிலவி வந்த இன முரண்பாடுகளை களைவதற்கு படையினரால் முடிந்துள்ளது.

அடிப்படையற்ற சில குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிலர் தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

SHARE