மீண்டும் இலங்கையில் தலைதூக்கியுள்ள பாதாள உலகத்தினர்

244

 

மீண்டும் இலங்கையில் பாதாள உலகத்தினர் தலைதூக்கியுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அதில் மிகவும் பிரபலமான 6 பேரின் தலைமைத்துவத்திலான பாதாள குழுவானது கொழும்பில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் தெமட்டகொட சமிந்த, புளுமென்டல் சஞ்சு, ஆமி சம்பத், துனகஹ சுஜி, சமயங் மற்றும் அங்கொட லொக்கா ஆகியோர் பாதாள உலகத்தலைவர்கள் என்றும் இவர்களின் தலைமையின் கீழ் 6 குழுக்கள் கொழும்பில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மொரட்டுவ அங்குலான பிரதேசத்தில் புதிதாக இரண்டு குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த புதிய பாதாள குழுவின் தலைவர்களாக மொரட்டுவ சமனின் கையாளான அங்குலான ரொஹா மற்றும் இன்னொரு நபர் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாதுவ பொடி சாகர என்பவரால் நீர்கொழும்பிலும்,வெலிவிட்ட சுதாவால் கடுவலையிலும் பாதாள குழுவினர் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிம்புலாஹெல சுதாவால் கொழும்பின் கிம்புலாஹெல பிரதேசத்தில் பாதாள உலக குழு ஒன்று இயங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தென் மாகாணத்தில் 13 பாதாள உலக குழு செயற்பட்டு வருவதோடு, குறித்த குழுக்களை வழிநடத்துபவர்கள் 20 மற்றும் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளதோடு, இவர்களில் பலர் தற்போது சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பாதாள உலகத் தலைவர்கள் சிறையில் இருந்தவாறே தமது குழுவினரை வழிநடத்துவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது

SHARE