நான் யார் என்பது மக்களுக்கு தெரியும்-வன்னி எம்.பி.சி.சிவமோகன் பதிலடி ஊடக அறிக்கை

252

 

எதிரியின் பாசறையில் இருந்து வந்தவன் பேச்சை பதம்பார்த்து பதில் சொல்பவன் நான் – வன்னி எம்.பி.சி.சிவமோகன் பதிலடி ஊடக அறிக்கை
dsc00355
முதலில் தொலைபேசியில் ஒட்டுக்கேட்டு பதிவேற்றம் செய்வதை இசையின் பெயரால் வளரும் தம்பி நீங்கள் நிறுத்துவது உங்களது ஊடக பயணத்தை ஆரோக்கியமானதாக்கும். தாங்கள் அடையாளம் இல்லாத ஊடகத்தில் பதிவேற்றம் செய்தீர்களா? அல்லது தங்களிடம் இருந்து திருடி காட்டிக்கொடுக்கும் கூட்டம் பதிவேற்றம் செய்ததா நான் அறியேன். எதற்கும் தொடக்கத்தில் நீங்கள் தான் பதிவு செய்தீர்கள் என்பதை முன்துண்டு அடையாளம் காட்டிவிட்டது.
வடகிழக்கு மாகாணத்தில் தனியார் வைத்தியசாலைகள் தனியார் பார்மசிகள் என்பவற்றிற்கு பாம்புக்கடி மருந்து (யுளுஏளு) இல்லை என்பது தெரியாதவர்கள் அல்ல விடுதலைப்புலிகள். அதுமட்டுமல்ல அவர்களது கைகளில் என்ன மருந்து இருக்கும் என்பது பலவருடம் முல்லைமாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்த எனக்கு தெரியாததல்ல. இன்றும் வடகிழக்கு மாகாண தனியார் பார்மசிகளில், வைத்தியசாலைகளில் யுளுஏளு இல்லை என்பது தெரியவில்லையா? பகைவனின் பாசறையில் இருந்து நீர் தொடர்புபடுத்தியவர் வந்திருந்தால் அதற்கு பதம்பார்த்து பதில் சொல்லியிருப்பேன். காட்டிக்கொடுப்பவர்கள் தான் நீங்கள் என்பதை உங்களது செய்தியே கூறி நிற்கிறது.
வைத்தியர்கள் யாரும் உள்ளே போக மறுத்த காலத்தில் (1996 – 2002) பதுளையில் இருந்து எனது மண்ணில் சேவை செய்ய விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஒட்டு மொத்தமாக பொறுப்பெடுத்து சுகாதார சேவையை மேம்படுத்தியவன் நான். நான் யார் என்பது மக்களுக்கு தெரியும். உங்களுக்கு வேண்டுமானால் வாக்கு திருடி சீவிக்க நேரிடும். ஏனக்கு அப்படி அல்ல.
நரி சாயம் பூசி வேடமிட்டாலும் தூய விடுதலை மழை எமது மண்ணில் பெய்யும்போது சாயம் வெளுக்கும். அப்போது தெரியவரும் நரி என்று. 1996ம் ஆண்டின் பின் பிறந்த தம்பிமாரே சமூகதளங்களில் பதிவேற்றம் செய்யமுன் உங்கள் அப்பா அம்மாவை கேட்டால் தெரியவரும் நான் யார் என்;று ஏன் என்றால் வன்னி மண்ணில் போராடிய மக்களுடன் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவன் நான். யாருடைய மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அதற்காக பொய்மை புனைபவர்களுக்கு பதிலுறுக்கும் கடப்பாடு எனக்குரியது.
SHARE