மலேசியாவில் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எட்மன் சிங்கராஜா என்ற சீலன் சசி, இந்திக சஞ்சீவ என்ற மொஹமட் சஞ்சய் அப்துல், அப்துல் சலீம் பின் மொஹமட் ஆகிய மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

500
மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு சிறிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இலங்கைக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் மலேசியாசில் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எட்மன் சிங்கராஜா என்ற சீலன் சசி, இந்திக சஞ்சீவ என்ற மொஹமட் சஞ்சய் அப்துல், அப்துல் சலீம் பின் மொஹமட் ஆகிய மூவரும்  இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

84102_3 84102_2

84102_1

இந்தநிலையில் தற்போது அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதில் 23-04-2010 பினாங் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 111 பேரும் மடய தடுப்பு முகாமில் 120நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் முதல் கட்டமாக 86 பேரும் இரண்டாவது மட்டமாக 25பேரும் விடுதலை செய்யப்பட்டனர்அதன்பின்னர் UNHCR பொறுப்பேற்று
கொண்டதற்கமைய இவ் அரசியல் தஞ்சமடைந்த மக்கள் மலேசியாவிலே வாழ்ந்து வந்தனர் .

தற்போது UNHCR  க்குகூட தெரியாமல் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்ற போர்வையில் இலங்கை
அரசிடம் கையலிக்கிரார்கள் இவ்வாரான கைதிகள் புலனாய்வுப் பிரிவினர்களால் துன்புறுத்தப்பட்டு
வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன

TPN NEWS

SHARE