7 மாத திருமண வாழக்கை, 3 வருட கோமா, எமனிடம் இருந்து கணவனை மீட்டெடுத்த காதல் மனைவி!

331

மாட் – டேனியல் டேவிஸ், திருமணமாகி தங்கள் இல்லறத்தை இன்பமயமாக அனுபவித்து வந்த அழகு தம்பதிகள். திருமணமான 7வது மாதத்தில் ஒரு கொடூரமான சாலை விபத்தில் மாட் மரண படுக்கையில் விழுந்தார். அவர் மீண்டு எழுவது கடினம் என்ற நிலை ஆகிவிட்டது.

90% அவரை மீட்டெடுக்க முடியாது என டேனியல் டேவிசிடம் கூறி கை விரித்துவிட்டனர் மற்றுதுவர்கள். அதன் பிறகு என்ன நடந்து, டேனியல் டேவிஸ் என்ன செய்தார் என்பது ஒரு அழகான காதல் கதை….

மருத்துவர்கள் கை விரித்தனர்…

90% மாட்-ஐ காப்பாற்றுவது கடினம், மருத்துவம் செய்வதும் வீண் செலவு தான் என மருத்துவர்கள் கூறினார். ஆனால், டேனியல் டேவிஸ் மருத்துவத்தை தொடர கூறி 24×7 என மாட் -உடன் இருந்து அவரை பார்த்துக் கொண்டார்.

தாய்க்கும் மேல்…

டேனியல் டேவிஸ் மாட்-ஐ கவனித்துக் கொண்ட விதம் தாய்க்கும் மேலானது என கூறலாம். திருமணமான 7 மாதம் மட்டுமே ஆகியிருந்த நிலையில், கோமாவில் இருந்த மாட்-க்கு உணவு, மாத்திரைகள், கழிவுகளை அகற்றுவது என அனைத்தையும் ஒற்றை ஆளாக இருந்து பார்த்து வந்தார்.

மூன்று வருடங்கள்!

7 மாதங்கள் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கையை மீட்டெடுக்க மூன்று வருடங்கள் போராடினார் டேனியல் டேவிஸ். கைமேல் பலன் கிடைத்தது. திடீரென ஒருநாள் கண் விழித்தார் மாட். ஆனால், கண் விழித்தும் பயனில்லை. அவர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யார் நீங்க?

கோமாவில் இருந்து மாட் மட்டும் தான் மீண்டார், நினைவுகள் இல்லை. உருகி, உருகி காதலித்து கணவனை பாதுகாத்து மீண்டும் இல்லறத்தில் இணைய காத்திருந்த டேனியல் டேவிஸ்-க்கு இது பெரும் அதிர்ச்சி அளித்தது. ஆனாலும், மனம் தளராது, அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினார்.

எழுந்தார் மாட்!

விபத்து மற்றும் கோமா போன்ற காரணங்களால் உடல் அளவில் முற்றிலுமாக முடங்கி போயிருந்தார் மாட். அவருக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்து, உடற்பயிற்சிகளில் ஈடுபட வைத்து, அவரை எழுந்து நடக்க வைத்தார் டேனியல் டேவிஸ்.

காதல் சாகாது!

காதலர்கள் சாகலாம். ஆனால், காதல் சாகாது என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் டேனியல் டேவிஸ் – மாட் தம்பதிகள். சிறு, சிறு காரணங்கள், கருத்து வேறுபாடுகள் கொண்டு பிரிந்து செல்லும் நபர்களுக்கு முன், 7 மாத வாழ்க்கையை மீட்டெடுக்க, மூன்று வருடங்கள் போராடியுள்ளார் டேனியல் டேவிஸ்.

– See more at: http://www.manithan.com/news/20160919121639#sthash.LPLweeYV.dpuf

SHARE