சுவாதி கொலை வழக்கு. சிறையில் ராம்குமார் தற்கொலை அல்ல!! கொலை! வெளியான திடுக்கிடும் ஆதாரம்..

288

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். சிறையில் ப்ளக் பாய்ண்ட்டில் (லைட் எரிய பயன்படுத்தும் இணைப்பில்) வரும் வயரை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

ராம்குமார் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார். மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை. சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.

அதுவும் புழல் சிறையில் இது இப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை இது திட்டமிடப்பட்டு செய்விக்கப் பட்டுள்ளது.

காரணம் கர்நாடகாவில் ஏற்பட்ட சம்பவத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட பதட்ட நிலை ஏற்பட்டு தமிழகம் மிகவும் சிக்கலான நிலையை அடைந்தது.

அத்துடன் நாம் தமிழர் கட்சியின் உறுப்பிணர் விக்னேஸ் உயிரிழந்தமையால் தமிழகத்தில் பாரிய பதட்ட நிலை ஏற்பட்டதுடன் மிகவும் சிக்கலை எதிர் கொண்டது. தமிழகம்..

கர்நாடகாவில் ஏற்பட்ட அசாதாரன நிலை தமிழகத்தின் அரசியலை நிலைகுலைய வைத்ததுடன் தமிழகத்தின் பெரிய அரசியற் கட்சிகள் எல்லாம் மௌனமாக இருந்தன அது தமிழக மக்களிடம் எரிச்சலை ஊட்டியதுடன் வெறுப்பு நிலையையும் அடைந்துள்ள நிலையில் ராச்குமார் கொலை முக்கியம் பெறுகிறது.

அதாவது பலத்த பாதுகாப்பு உள்ள இடத்தில் வாயால் மின் கம்பியைக் கடித்து உயிரிழந்தார் என்பது தகுமா காலையில் சாதாரணமாக சென்று உணவருந்தியர் எப்படி இப்படிச் செய்ய முடியும்.

ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கர்நாடகா கொதி நிலையை கட்டுப்படுத்த அதனால் பாதிக்கப்பட்ட அரசியல் சக்திகள் திட்டமிட்டு செய்த கொலையே ராச் குமார் விவகாரம்….

இதற்கு முன்னர் பேரறிவாளனை சிறைக்குள் தாக்கியமையும் இன்று இடம் பெற்ற இச் சம்பவமும் நன்கு திட்டமிடப்பட்டது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE