கணவனை ஏமாற்றுவதற்கு சிறுவனைக் கடத்திய பெண்

271

புத்­தளம் வான் வீதி எப்­போ­தும் பிசி­யா­கவே காணப்­படும். கடந்த 09ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் வான்­வீதி வழ­மையை விடவும் கொஞ்சம் பிசி­யா­கவே காணப்­பட்­டது. புத்­தளம் வான்­வீ­தி­யி­லுள்ள ஹனீபா முஹம்­மது ஹாதிம் எனும் நான்கு வயது சிறுவன் கடத்­தப்­பட்­டுள்­ள­மையே வான்­வீதி பிசி­யா­ன­மைக்கு கார­ண­மாகும்.

வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணி. தந்தை உப்­பு­வாய்க்­கா­லுக்கு வேலைக்­காக சென்­றுள்­ள­மை­யினால், வீட்டில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த குறித்த சிறு­வனை வீட்­டுக்கு அரு­கி­லுள்ள கடைக்குச் சென்று மிளகு வாங்கி வரு­மாறு சிறு­வனின் தாய் பணம் கொடுத்து அனுப்­பி­யுள்ளார்.

கடைக்குச் சென்ற தனது மகன் 40 நிமி­டங்­க­ளுக்கும் மேலா­கியும் வீடு திரும்­ப­வில்லை என்­பதை உணர்ந்­து­கொண்ட சிறு­வனின் தாய், உற­வி­னர்கள், அய­ல­வர்­களின் உத­வி­யுடன் அங்கும், இங்­கு­மாக மகனை தேட ஆரம்­பித்தாள்.

ஆனால், குறித்த சிறுவன் எங்கும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை என்­ப­துதான் எல்­லோ­ரி­னதும் பதி­லா­கவே கிடைத்­தது. பின்­னர்தான் குறித்த சிறு­வனை அதே தெருவில் வாட­கைக்கு வசித்து வரும் மனோ­கரி எனும் பெண்­ணொ­ருவர் அழைத்துச் செல்­வதை தாங்கள் கண்­ட­தாக ஒரு­சிலர் இதன்­போது தெரி­வித்­துள்­ளனர்.

பின்னர் குறித்த பெண் தங்­கி­யி­ருக்கும் வாடகை வீட்­டுக்குச் சென்று பார்த்த போது அந்த வீடு பூட்­டப்­பட்ட நிலையில் காணப்­பட்­டுள்­ளது.
இத­னை­ய­டுத்து, கடைக்குச் சென்ற சிறுனைக் காண­வில்லை என்ற பதிவு உட­ன­டி­யாக சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்­யப்­பட்­ட­துடன், புத்­தளம் பொலி­ஸா­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.

வான்­வீ­தியில் ஏழைக் குடும்­பத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் கட­த­தப்­ப­ட்டமை வான்­வீதி தெருவை மாத்­தி­ர­மல்ல புத்­தளம் மக்­க­ளி­டை­யேயும் பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யது.

குறித்த சிறு­வனைத் தேடும் முயற்­சியில் புத்­தளம் பொலி­ஸாரும், ஊரி­லுள்ள சிவில் அமைப்­புக்கள், அர­சியல் பிர­தி­நி­திகள், பொது­மக்கள் என பாகு­பா­டின்றி அனை­வரும் ஒற்­று­மை­யாக தேடுதல் நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டனர்.

கடத்­த­லுக்­கான பின்­னணி
குறித்த சிறு­வனைக் கடத்திச் சென்றார் என்று குற்­றஞ்­சாட்­டப்­படும் தமிழ்ப் பெண்­ணான மனோ­கரி கடந்த 2004ஆம் ஆண்டு சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றுள்ளார்.

அப்­போது அந்த பெண் வேலை செய்த அதே இடத்தில் இந்­தி­யாவைச் சேர்ந்த அலா­வுதீன் என்­பவர் மேற்­பார்­வை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றி­வந்­துள்ளார்.

இரு­வரும் ஒரே இடத்தில் வேலை செய்­த­மை­யினால் இரு­வரும் நெருக்­க­மாக பழக ஆரம்­பித்­துள்­ளனர். தான் ஒரு இந்­தியப் பெண் என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்ட குறித்த மனோ­கரி சில காலங்­களின் பின்னர் உண்­மையில் இலங்­கையைச் சேர்ந்­தவள் என்­பதை அலா­வுதீன் புரிந்­து­கொண்டார்.

எனினும், இரு­வ­ருக்கும் ஏற்­பட்ட நட்பு பின்னர் காத­லாக மாறி­யுள்­ள­மை­யினாலும் மொழியில் ஒன்­று­பட்­டுள்­ள­மை­யினாலும் அலா­வுதீன் தனது காதலை தொடர்ந்தார்.

கடந்த பத்து வரு­டங்­க­ளாக காத­லர்­க­ளாக இருந்த இரு­வரும் திரு­மணம் முடிப்­ப­தென்று முடி­வெ­டுத்து 2014ஆம் ஆண்டு இந்­தி­யா­வுக்குச் சென்­றுள்­ளனர்.

இவ்­வாறு இந்­தி­யா­வுக்கு குறித்த பெண்ணை அழைத்துச் சென்ற அலா­வுதீன், அந்தப் பெண்ணை புனித இஸ்லாம் மார்க்­கத்­திற்கு எடுத்து திரு­ம­ணமும் முடித்­துள்ளார். இவ்­வாறு திரு­மணம் முடித்­து­விட்டு சிறிது காலம் இந்­தி­யாவில் வாழ்ந்த இரு­வரும் மனோ­க­ரியின் தாய் நாடான இலங்­கைக்கு வந்­துள்­ளனர். இலங்­கைக்கு வந்த மனோ­கரி தமிழ் பெண்­ணா­கவே வாழ்ந்து வந்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கை­யிலும் சிறிது காலம் தங்­கி­யி­ருந்த இந்­தி­ய­ரான அலா­வுதீன் தொழில் நிமித்தம் மீண்டும் வெளி­நாடு சென்­றுள்ளார். இவ்­வாறு வெளி­நாடு சென்­றுள்ள இந்­தியர் அலா­வுதீன் இலங்­கையில் வாழும் தனது மனை­விக்கு மாதாந்தம் 500 ரியால்­களை செல­வுக்­காக அனுப்பி வந்­துள்ளார்.

இவ்­வாறு இருக்­கையில், சில மாதங்­களின் பின்னர், தான் கர்ப்­ப­மாக இருப்­ப­தாக தனது இந்­திய கணவர் அலா­வு­தீ­னுக்கு தெரி­யப்­ப­டுத்­திய மனோ­கரி, மாதாந்த செல­வுக்கு கொடுக்­கப்­படும் 500 ரியால்­க­ளுக்கு மேல­தி­க­மாக மருத்­துவ தேவை­க­ளுக்கும் பணத்தைப் பெற்­றுக்­கொண்­டுள்ளார். இத­னை­ய­டுத்து 10 மாதங்­களின் பின்னர், தனக்கு இரட்டைக் குழந்தை கிடைத்­துள்­ள­தாக தனது இந்­தியக் கண­வ­ரான அலா­வு­தீ­னுக்கு அறி­வித்­துள்ள மனோ­கரி, இரு குழந்­தை­களின் புகைப்­ப­டங்­க­ளையும் அனுப்­பியும் வைத்­துள்ளார்.

எனினும் குறித்த பெண்­ணுக்கு ஒரு குழந்தை கூட கிடைத்­தி­ருக்­க­வில்லை எனச் சொல்­லப்­ப­டு­கி­றது. தான் கர்ப்பம் தரித்­துள்­ள­தா­கவும், பின்னர் குழந்தை பிறந்­துள்­ள­தா­கவும் சொல்லி அலா­வு­தீ­னி­ட­மி­ருந்து அதி­க­மான பணத்தை பெற்­றுக்­கொள்­ளவே குறித்த பெண் இவ்­வாறு நடந்து கொண்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புத்­த­ளத்தில் வாழும் தனது மனைவி மற்றும் குழந்­தை­க­ளுக்­காக அதிக பணத்தைக் கொடுத்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்­கி­டையில், கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு மேலாக வெளி­நாட்டில் தொழில்­பு­ரிந்து வரும் அலா­வுதீன் இரட்­டைக்­கு­ழந்­தை­களை பார்ப்­ப­தற்­காக விடு­மு­றையில் இலங்கை வருகை தர­வுள்­ள­தாக தனது மனை­வி­யான மனோ­க­ரி­யிடம் கூறி­யுள்ளார்.

இவ­ரு­டைய இலங்கை வருகை அறி­விப்­பா­னது மனோ­க­ரிக்கு பெரும் தலை­யி­டியைக் கொடுத்துள்ளதுடன் பிரச்­சி­னையும் ஆரம்­பித்­துள்­ளது. உண்­மையில், குழந்­தை­யில்­லாத குறித்த பெண் விடு­மு­றையில் இலங்கை வரும் இந்­தியக் கண­வ­ரான அலா­வு­தீ­னுக்கு எப்­ப­டி­யா­வது இரண்டு குழந்­தை­களை காட்­டியே ஆக வேண்டும் என சிந்­தித்த குறித்த பெண், தனது உற­வி­னர்­க­ளிடம் இருக்கும் சிறிய குழந்­தைகள் இரு­வரைக் கேட்­டுள்ளார். ஆனால் உற­வி­னரோ மனோ­க­ரிக்கு குழந்­தை­களை கொடுப்­ப­தற்கு விருப்­பத்தைத் தெரி­விக்­க­வில்­லையாம்.

பின்னர், எப்­ப­டி­யா­வது விலைக்­கா­வது இரண்டு குழந்­தை­களை வாங்கிக் கொள்வோம் என்று முடி­வெ­டுத்­துள்ள மனோ­கரி புத்­தளம் நகரம், மணல்­குன்று ஆகிய பகு­தி­க­ளிலும் சிறு­கு­ழந்தை தத்­தெ­டுக்க வேண்டும். எவ்­வ­ளவு பணம் செல­வா­னாலும் பர­வா­யில்லை என்று விசா­ரித்­துள்ளார்.

அத்­துடன், ஒரு இரு­வா­ரங்­க­ளுக்­கா­வது ஒரு பிள்­ளையை ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் எடுத்து தரு­மாறும் குறித்த பெண் பல­ரிடம் கேட்­டுள்ளார்.

இதற்­கி­டையில், இந்த நான்கு வயது சிறு­வனைக் கடத்திச் செல்லும் முன்னர் கடந்த வாரம் புத்­தளம் நகரில் இன்­னு­மொரு குழந்­தையை கடத்தும் நோக்கில் மனோ­கரி அழைத்துச் சென்­றுள்ளார்.

குழந்தை காணாமல் போனதும் பெற்­றோர்கள், குடும்ப உற­வி­னர்கள், ஊர்­மக்கள் திரண்டு குழந்­தையை தேடும் போது குறித்த குழந்­தையை மனோ­கரி அழைத்துச் செல்லும் வழியில் கண்­டுள்­ளனர். பின்னர் குழந்­தையை எங்கு அழை;துச் செல்­கி­றீர்கள் என தேடுதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்கள் மனோ­க­ரி­யிடம் கேட்க இந்­தக்­கு­ழந்தை யாரு­டையது என்­பது எனக்குத் தெரி­யாது.

வீதியில் நின்­று­கொண்­டி­ருந்­தது. எனவே, அரு­கி­லுள்ள பள்­ளியில் இந்தக் குழந்­தையை ஒப்­ப­டைக்­கவே அழைத்துச் செல்­கிறேன் எனக் கூறி­யுள்ளார்.

மனோ­க­ரியின் இந்த செயற்­பாட்­டினால் ஊர் மக்கள் சந்­தே­கப்­ப­ட­வில்லை. சந்­தோ­ஷப்­பட்­டனர். மனோ­க­ரியைப் பாராட்­டினர். ஆனால் உண்மை அது­வல்ல என்றும் அன்­றைய தினம் குறித்த பெண் அந்தக் குழ­நந்­தையை கடத்­தவே அழைத்துச் சென்­ற­தா­கவும், அது கைகூ­ட­வில்லை. தனது கடத்தல் முயற்சி பிழைத்­து­விட்­டதும்; வீதியில் அநா­த­ர­வாக நின்ற குழந்­தையை பள்­ளியில் ஒப்­ப­டைக்க அழைத்துச் செல்­கிறேன் எனக் கூறி­யி­ருக்­கிறார்.

மனோ­கரி தனது தங்­கை­யுடன் வான்­வீ­தியில் பத்து வரு­டங்­க­ளுக்கு மேலாக இருப்­ப­தனால், புத்­த­ளத்­தி­லுள்­ள­வர்­க­ளுடன் பழ­கு­வதால் மனோ­க­ரியின் நடத்­தையை யாரும் சந்­தேகம் கொள்­ள­வில்லை என்­ப­துதான் உண்­மை­யாகும்.

இதற்­கி­டையில், கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு மேலாக வெளி­நாட்டில் தொழில்­பு­ரிந்து வரும் அலா­வுதீன் விடு­மு­றையில் தனது சொந்த ஊரான இந்­தி­யா­வுக்குச் சென்­று­விட்டு இலங்­கையில் வாழும் தனது மனைவி மற்றும் இரட்­டைக்­கு­ழந்­தை­களை பார்ப்­ப­தற்­காக மிகவும் ஆவ­லுடன் கடந்த 9ஆம் திகதி இலங்­கைக்கு வருகை தந்­துள்ளார்.

தனது இந்­தியக் கணவன் இலங்கை வந்­துள்­ளதும், எப்­ப­டி­யா­வது ஒரு குழந்­தை­யை­யா­வது உங்கள் குழந்­தை­யென்று காண்­பிக்க வேண்டும் என்ற நோக்கத்­தி­லேயே குறித்த சிறு­வனைக் கடத்­தி­யுள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன், கடந்த 7,8 ஆகிய இரு தினங்கள் இரண்­டா­வ­தாக கடத்­தப்­பட்ட நான்கு வயது சிறு­வனின் வீட்­டுக்குச் சென்று அங்கு அந்தச் சிறுவன், உற­வி­னர்­க­ளுடன் நீண்ட நேரத்தை கழித்­துள்­ளாராம். குறித்த பெண் அப்­போதே குறித்த சிறு­வனைக் கடத்தும் திட்­டத்­தையும் தீட்­டி­யு­மு­ள்ளார்.

சிறு­வனைக் கடத்­து­வ­தற்கு முன்னர், சிறு­வ­னிடம் தன்னை அறி­மு­கப்­ப­டுத்திக் கொள்­ளவும், நெருக்­கத்தை ஏற்­ப­டுத்தவும் முதல் இரண்டு நாட்கள் குறித்த பெண் சிறு­வனின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

இதற்­கி­டையில் இலங்­கைக்கு வந்­துள்ள இரண்டு நாட்­களும் தனது இரட்டைக் குழந்­தை­களை காட்­டு­மாறு இந்­திய கண­வ­ரான அலா­வுதீன், தனது மனை­வி­யிடம் கேட்டுத் தொந்­த­ரவு கொடுத்­துள்ளார்.

எனினும் குழந்­தை­யொன்­றிற்கு இரு­தய வருத்தம் இருப்­பதால் குழந்­தையை இப்­போது பார்க்க முடி­யாது என மனை­வி­யான மனோ­கரி மறுத்­தி­ருக்­கி­றாராம்.

ஒரு குழந்­தைக்கு சுக­யீனம் என்­றாலும் மற்­றைய குழந்­தை­யை­யா­வது தன்­னிடம் காட்­டு­மாறு அலா­வுதீன் மனை­வி­யிடம் கேட்­டுள்ளார். நான்கு நாள் விடுமு­றையில் இலங்­கைக்கு வந்­துள்ள அலா­வுதீன் தனது குழந்­தை­களை பார்ப்­பதில் அதிக ஆர்­வத்தைக் கொண்­டி­ருந்தார். எனினும் மனோ­கரி குழந்­தையை காட்­டாது பொய்க்கு மேல் பொய் சொல்லி சமா­ளித்துக் கொண்­டி­ருப்­பதால் ஆவேசம் கொண்ட அலா­வுதீன் அவர், மனை­வி­யிடம் சண்­டை­யிட ஆரம்­பித்­துள்ளார்.

இதன்­பின்னர் புத்­தளம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்­துவ மனைக்கு தனது கண­வரை அழைத்துச் சென்ற மனோ­கரி, கண­வனை வெளியே இருக்­கு­மாறு கூறி­விட்டு வைத்­தி­யரை தனி­மையில் சந்­தித்­துள்ளார். ஒரு­வரை அழைத்து வந்­துள்ளேன். அவர் மன நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ளார்.

அவர் வைத்­தி­ய­சா­லையில் இருக்கும் குழந்­தையை பார்க்க வேண்டும் என்று சொல்­லு­கிறார். ஆனால் அந்த குழந்­தையை காட்ட வேண்டாம் என வைத்­தியர் ஒருவர் கூறி­யி­ருக்­கிறார். எனவே, நீங்­களும் இவ்­வாறு குழந்­தையை பார்க்க வேண்டாம் என்று அவ­ரிடம் சொல்­லு­மாறு குறித்த பெண் வைத்­தி­ய­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

சரி எனக்­கூறிய வைத்­தியர் அவரை அழைத்து வரு­மாறு கூற, குறித்த பெண்ணும் தனது கண­வ­ரான அலா­வு­தீனை அழைத்து உள்ளே சென்­றுள்ளாள்.

வைத்­தி­யரைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக உள்ளே வந்த அலா­வுதீன் வைத்­தி­யரைப் பார்த்­ததும் ஸலாத்தைக் கூறி­யி­ருக்­கிறார். அப்­போது இரு­வரும் கணவன், மனைவி என்­பது வைத்­தி­ய­ருக்குத் தெரி­யாது. அழைத்து வந்த பெண் பொட்டு வைத்­துள்ளார். ஆனால் அழைத்து வரப்­பட்­டவர் ஸலாம் கூறு­கிறார்.

இதில் பிரச்­சினை இருக்­கி­றது என்­பதை உணர்ந்­து­கொண்ட வைத்­தியர் அலா­வு­தீ­னிடம் பேச ஆரம்­பித்­ததும், இரு­வ­ருக்கும் இடையே வைத்­தி­ய­ருக்கு முன்னே வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

பின்னர் நடந்த உண்­மை­க­ளையும், குறித்த பெண் தனது மனைவி என்றும் அவர் தன்னை ஏமாற்­றி­யுள்­ள­தா­கவும், அதனால் தான் மனம் உடைந்து போயுள்­ள­தா­கவும் அலா­வுதீன் வைத்­தி­ய­ரிடம் கூறி­யுள்ளார். எனினும் குறித்த வைத்­தியர் இரு­வ­ரையும் சமா­தா­னப்­ப­டுத்தி அனுப்பி வைத்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து இரட்­டைக்­கு­ழந்­தையில் ஒரு குழந்­தையை காண்­பிப்­ப­தாகக் கூறிய மனோ­கரி வெள்­ளிக்­கி­ழமை குழந்­தையை காட்­டு­வ­தா­கவும் அலா­வு­தீ­னிடம் தெரி­வித்­துள்ளார்.

சிறுவன் கடத்தல்
இப்­ப­டி­யி­ருக்­கை­யில்தான் கடந்த 9ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30மணிக்கு கடத்தல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. கடைக்குச் சென்ற குறித்த சிறு­வனை மனோ­கரி அழைத்துச் சென்று தனது தங்­கை­யிடம் ஒப்­ப­டைத்த மனோ­கரி புத்­தளம் வண்ணாத்தவில்லு பகு­தி­யி­லுள்ள அக்­காவின் வீட்­டுக்கு கொண்டு செல்­லு­மாறு கூறி­யி­ருக்­கிறார்.

இதன்­படி கடத்­தப்­பட்ட சிறுவனை புத்­தளம் வண்ணாத்த­வில்லு பிர­தே­சத்­தி­லுள்ள அக்­காவின் வீட்­டுக்கு கொண்டு சென்­றுள்­ளார். அங்கு மனோ­க­ரியும், அலா­வு­தீனும் முச்­சக்­கர வண்­டியில் வண்ணாத்­த­வில்லு பகு­திக்குச் சென்­றுள்­ளனர்.

இதற்­கி­டையில் சிறு­வன் காணாமல் போயுள்­ளமை புத்­தளம் பிர­தே­சத்தில் மாத்­தி­ர­மின்றி, தேசிய மட்டம் வரை தீயாகப் பர­வி­யுள்­ளது.

புத்­தளம் பொலிஸார், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், பள்ளி நிர்­வா­கத்­தினர், அர­சியல் பிர­மு­கர்கள், ஊர்­மக்கள் எனப் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் தேடுதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். எனினும் சிறு­வனை அழைத்துச் சென்ற பெண் குறித்து தகவல் கிடைக்கப் பெற்­றதும் அந்தப் பெண்ணின் உற­வி­னர்கள், நண்­பர்கள் வீடுகள் வரை தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையில், குறித்த சிறு­வ­னுக்கு உணவு, பானம் வழங்கி எப்­படி பேசு­வது என்றும் பயிற்­சி­களும் வழங்­கி­யுள்­ளனர். வண்ணாத்த­வில்லு பிர­தே­சத்­திற்கு தனது கண­வ­ருடன் சென்ற மனோ­கரி, அங்­கி­ருந்த சிறு­வனைக் காண்­பித்து இதுதான் இரட்டைக் குழந்­தை­களில் ஒரு குழந்தை எனக் கூறி­யுள்­ளாராம்.

இந்­திய கண­வ­ரான அலா­வு­தீனும் தனது பிள்­ளை­யிடம் அளவளாவிக் கொண்­டி­ருந்­துள்ளார். இதன்­போது “அப்­பா”­என்று சொல்­லு­மாறு மனோ­க­ரியும், மனோ­க­ரியின் தங்­கையும் சிறு­வ­னிடம் கூறி­யுள்­ளனர்.

அடிக்­கடி “அப்­பா”­என்று சொல்­லிக்­கொண்­டி­ருந்த சிறுவன் இடை­ந­டுவில் “வாப்பா, உம்மா” என்று சொல்­லி­யி­ருக்­கிறான். இத­னை­ய­டுத்து குறித்த சிறுவன் மீது சந்­தேகம் கொண்ட அலா­வுதீன் சிறு­வ­னிடம் உனது வாப்பா, உம்­மாவின் பெயர் என்ன என்று கேட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து, குறித்த சிறுவன் தனது உண்­மை­யான வாப்பா, உம்­மாவின் பெயரைச் சொல்­லவே அங்கு இந்­தியக் கண­வ­ரான அலா­வு­தீ­னுக்கும், மனோ­க­ரிக்கும் பெரும் சண்டை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கண­வ­ருடன் சண்­டை­யிட்டுக் கொண்டு சிறு­வனை அலா­வு­தீ­னுடன் வைத்­து­விட்டு, வண்ணாத்தவில்லு பிர­தே­சத்­தி­லிருந்து புத்­தளம் நக­ருக்கு வந்த மனோ­கரி பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மனோ­கரி கைது செய்­யப்­பட்டு ஒரு மணி­நே­ரத்தின் பின்னர் மனோ­க­ரியின் தங்­கையும் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட இரு பெண்­களும் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். இதற்­கி­டையில், சனிக்­கி­ழமை அதி­காலை 4மணிக்கு இந்­தி­யா­வுக்குச் செல்­ல­வி­ருந்த அலா­வுதீன் தன் வசம் இருக்கும் சிறு­வனை உரிய இடத்தில் ஒப்­ப­டைத்­து­விட்டு விமான நிலையம் செல்­லவே வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட முச்­சக்­கர வண்­டியில் சிறு­வனை அழைத்­துக்­கொண்டு புத்­தளம் நக­ருக்கு வந்­துள்ளார்.

புத்­தளம் நக­ருக்கு வந்த குறித்த இந்­தியர், சிறு­வனின் வீட்டைத் தேடி வந்த போது சிறு­வனின் வீட்டில் கூடி­யி­ருந்த பொது­மக்­க­ளினால் இந்­தி­ய­ரான அலா­வு­தீனும், முச்­சக்­கர வண்டி சார­தியும் பிடிக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், புத்­தளம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்­டனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட இந்­தியர் உட்­பட நான்கு பேரில் முச்­சக்­கர வண்டி சாரதி அன்­றைய தினமே பொலிஸ் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டார். ஏனைய மூவர் புத்­தளம் மாவட்ட பதில் நீதவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன், சிறு­வனைக் கடத்­தி­ய­தாகக் கூறப்­படும் குறித்த பெண் கடந்த புதன்­ கி­ழமை அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட்டுள்ளார்.

எனவே, கண­வ­னுக்கும் மனை­விக்கும் இடை­யி­லான குடும்ப பிரச்­சி­னையே இக்­க­டத்­த­லுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளமை மேற்­கு­றிப்­பிட்ட சம்­ப­வத்தில் தெளி­வாக புலப்­ப­டு­கி­றது. எப்­ப­டி­யா­வது இலங்கை வந்­துள்ள தனது கண­வ­ரான இந்­தியர் அலா­வு­தீனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே குறித்த பெண் இவ்­வாறு முயன்­றுள்ளார்.

குறித்த சிறுவன் கடத்தப்படுவதற்கு முன்னரே கணவன், மனைவிக்கிடையே குழந்தை விடயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அவர்கள் சென்ற வைத்தியர் ஆதாரமாக இருக்கிறார்.

அத்துடன், சிறுவன் விடயத்தில் இந்தியர் அலாவுதீன் நடந்துகொண்ட விடயமும் அவர் இந்தக் கடத்தலுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தாரா என்பதை அனுமானிப்பதற்கு அவ்வளவு நேரம் தேவையில்லை.

உண்மையில் சிறுவனின் கடத்தலுடன் இந்தியர் அலாவுதீன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் ஏன் வீடு தேடி வரவேண்டும்.

மறுநாள் அதிகாலை 4மணிக்கு அவருக்கு இந்தியா செல்ல விமான டிக்கட் கையிலுள்ளது. ஆக, கடத்தலுடன் தொடர்புபட்டிருந்தால் அவர் அந்த சிறுவனை மனோகரியின் அக்கா வீட்டிலேயே விட்டுவிட்டு நேரடியாகவே விமான நிலையத்திற்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் இவ்வளவு பாரதூரமான வியடமாகும் என்பதை நினைத்திருக்கவில்லை என்பதையே அனுமானிக்க முடிகிறது.

தன்னிடமுள்ள சிறுவனை குறித்த பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு இந்தியா செல்லப் போவதாகவே மனோகரியின் அக்கா குடும்பத்தாரிடம் கூறியே இந்தியர் அலாவுதீன் புத்தளத்திற்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படியிருப்பினும், இந்தியக் கணவரிடம் இரண்டரை வருடங்களாக கூறிவந்த ஒரு பொய்யை மறைப்பதற்கும், இலங்கை வந்துள்ள அலாவுதீனை சமாளிப்பதற்குமே மனோகரி மற்றும் மனோகரியின் தங்கையினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாடகமே சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் என்பது வெளிப்படையாகவே தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது

இதற்காக குறித்த பெண் மனோகரி நன்கு திட்டமிட்டு செயற்பட்டுள்ளமையும் கிடைக்கின்ற தகவல்களை வைத்து பார்க்கின்ற போது அவதானிக்க முடிகிறது.

– ரஸீன் ரஸ்மி –miss

SHARE