இலங்கையை அச்சுறுத்தும் அடையாளப்படுத்தப்படாத நோய்! இருவர் பலி!- மக்களுக்கு எச்சரிக்கை

278

661431791untitled-2

இந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால், உடனடியாக அரச யில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய இரு தாய்மார் உயிரிழந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சிலாபம் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நோய் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நோயின் தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக அதன் மாதிரிகளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த நோய் நிலைமை H1N1 இன்ஃபுளூவன்ஸா வைரஸ் இல்லை எனவும் இது கண்டுபிடிக்கப்படாத வைரஸ் எனவும் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் சர்வதேச விமானநிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியவற்றில்,ஷீக்கா, மற்றும் சிக்கன்குன்யா பரவல் தொடர்பில் உயர் எச்சரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன.

விமானநிலையத்தின் சுகாதார நிலையமும் ஏனைய நாடுகளில் இருந்து வரும் பயணிகள்தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE